மேலும் அறிய

ADMK functionaries JOIN TVK : தள்ளிட்டு வாங்க.. அள்ளிட்டு போங்க. அதிமுகவை காலி செய்ய தவெகவின் ஆடி ஆஃபர்- விஜய்யின் செம பிளான்

ADMK TO TVK: அதிமுக மூத்த தலைவர்களை தவெகவிற்கு அழைத்து வருபவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படும் என தவெக வாக்குறுதி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவின் தொடர் தோல்வி

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை புரட்டிப்போட்டுள்ளது. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தவரை அசைக்க முடியாத கட்சியாக அதிமுக இருந்தது. 20217ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக தலைமையை கைப்பற்ற நடைபெற்ற போட்டியில் பல பிளவுகளாக அதிமுக பிரிந்துள்ளது. ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி என மோதிக்கொண்ட நிலையில், கடைசியாக எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பை கைப்பற்றினார். இதனையடுத்து அவரது தலைமையின் கீழ் கடந்த 9 வருடங்களாக அதிமுக சந்தித்த அனைத்து தேர்தலிலும் தோல்விக்கு மேல் தோல்வியே பரிசாக கிடைத்தது. 

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள்

இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக நிர்வாகிகள் மாற்றுக்கட்சிக்கு பல்டி அடித்து வருகிறார்கள். அந்த வகையில் அதிமுகவில் இருந்து தவெகவிற்கு மூத்த நிர்வாகிகள், மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என படையெடுத்து வருகிறார்கள். விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர். கரூர் எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, எஸ்.பெருந்துறை ஜெயக்குமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல்,தாராபுரம் பி. சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்த நிலையில், அடுத்து அடுத்து நடைபெறும் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என தவெக தலைமை திட்டமிட்டுள்ளது.

அதிமுகவை காலி செய்ய தவெக திட்டம்

ஆனால் தவெகவிடம் கிளைக்கழகம் முதல் மாவட்ட, மாநில பணிகளை சரிவர செய்ய சரியான கட்சி நிர்வாகிகள் இல்லாத நிலை நீடித்து வருகிறது. எனவே ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதே கட்சியை பலப்படுத்த தவெக தலைமை திட்டமிட்டுள்ளது. எனவே அதிமுகவை ஒட்டுமொத்தமாக தவெக பக்கம் இழுக்க அக்கட்சி தலைவரும், முதலமைச்சருமான விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக தவெக மூத்த தலைவரான ஆதவ் அர்ஜூனாவிற்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை தவெகிற்கு அழைத்து வருபவர்களுக்கு ஜாக்பாட் பரிசாக கட்சியில் பதவிகள் மட்டுமல்ல, வாரிய தலைவர் பதவியும்  வழங்கப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் அதிமுகவில் இருந்து 30 சதவிகித நிர்வாகிகள் தவெகவிற்கு சென்றுள்ளனர். 

அதிமுகவினருக்கு ஆடி ஆஃபர்

எனவே வரும் நாட்களில் அதிமுகவில் இருந்து அதிகளவு நிர்வாகிகள் தவெகவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு ஏற்ப அந்த அந்த மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் இணைப்பு விழாவை நடத்தவும் தவெக தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்கான பொறுப்பை தவெகவில் இணைந்த அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தவெகவின் இந்த திட்டத்தை அதிமுக உடைக்குமா.? அல்லது எப்போதும் போல போனால் போகட்டும் என கண்டுகொள்ளாமல் இருக்குமா.? என கேள்வி எழுந்துள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
விஜய்க்கு முன் அரசியலில் வென்ற அமிதாப்.. 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்ய வைத்த சூழ்ச்சி!
விஜய்க்கு முன் அரசியலில் வென்ற அமிதாப்.. 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்ய வைத்த சூழ்ச்சி!
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!
ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget