மேலும் அறிய

வாயைக் கொடுத்து சிக்கிய மதுபிரியர்: ஒத்த ஸ்டிக்கரால் பறிபோன 10,000 ஆயிரம் ரூபாய்...

மயிலாடுதுறையில் முகப்பு விளக்கு ஸ்டிக்கர் ஒட்டும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மதுபோதையில் வந்த முதியவர் காவல்துறையினரிடம் சிக்கி 10,000 ரூபாய் இழந்துள்ளார். 

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகரில் இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்களின் அதிகப்படியான முகப்பு விளக்கு வெளிச்சத்தினால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் உன்னத நோக்கோடு மாவட்ட இருசக்கர வாகன பழுதுநீக்குவோர் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. 

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வாகனங்களின் முகப்பு விளக்குகளின் நடுப்பகுதியில் கருப்புப் புள்ளி ஸ்டிக்கர் ஒட்டும் விழிப்புணர்வு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த விழிப்புணர்வு முகாமிற்கு மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்துத்துறை மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார் மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மணவாளன் ஆகியோர் தலைமை தாங்கி வாகனங்களில் கருப்புப் புள்ளி ஸ்டிக்கர் ஒட்டும் பணியைத் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துச் சிறப்பித்தனர். 

மேலும் இந்நிகழ்வில், சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் வேலு குபேந்திரன், அவைத் தலைவர் ராமு, மாநில செய்தி தொடர்பாளர் பகவதிக்குமார் உள்ளிட்ட சங்கத்தின் பல முக்கிய நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் பெருமளவில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி அறிவுரைகளை வழங்கினர்.

விதிகளை மீறி வாக்குவாதம் செய்த முதியவர்

இந்த விழிப்புணர்வு முகாமின் போது அப்பகுதியைக் கடந்த செல்லும் பல்வேறு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் முகப்பு விளக்குகளில் சமூக ஆர்வலர்கள் மற்றும் காவல்துறையினர் கருப்புப் புள்ளி ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் ஒருவர், தனது வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்ட முயன்றவர்களைப் பார்த்து திடீரென கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். 

என் வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்ட உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது, நீங்கள் யார் என்னைத் தடுத்து நிறுத்த என்று கேள்வி எழுப்பி அங்கு பெரும் கூச்சலையும் பரபரப்பையும் ஏற்படுத்தினார். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் அந்த முதியவர் காட்டிய கடுமையான எதிர்ப்பு அங்கிருந்த அனைவரையும் சற்று வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. 

உடனே அங்கிருந்த போக்குவரத்து காவல்துறையினர் அந்த முதியவரிடம் சென்று பேச முற்பட்டபோது, அவர் பேசிய விதம் மற்றும் உடல் மொழியின் அடிப்படையில் அவர் மதுபோதையில் இருப்பது காவலர்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

சுவாசப் பரிசோதனையில் உறுதியான மதுபோதை

தொடர்ந்து காவல்துறையினர் அந்த முதியவரைச் சந்தேகத்தின் அடிப்படையில் அருகில் அழைத்து, அவர் மது அருந்தியுள்ளாரா என்பதைச் சரிபார்க்கும் பொருட்டு சுவாச ஆல்கஹால் பரிசோதனைக் கருவியைப் பயன்படுத்திச் சோதனை மேற்கொண்டனர். அந்தப் பரிசோதனையின் முடிவில் அவர் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டுத் தன் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தை இயக்கி வந்தது உறுதியானது.

பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் காவல்துறையினரும் சங்க நிர்வாகிகளும் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில், மதுபோதையில் வாகனத்தை இயக்கி வந்த அந்த முதியவரின் செயல் அங்கிருந்தவர்களிடையே பெரும் கோபத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. சாலை விபத்துகளைத் தவிர்க்கும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்ற இடத்திலேயே ஒருவர் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்து சிக்கிக்கொண்டது அங்கிருந்த வாகன ஓட்டிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் மிகுந்த விவாதப் பொருளாகவும் மாறியது.

அபராதம் மற்றும் வாக்குவாதத்தால் பரபரப்பு

மதுபோதையில் வாகனம் ஓட்டியது உறுதியானதைத் தொடர்ந்து, போக்குவரத்து காவல்துறையினர் மோட்டார் வாகனச் சட்ட விதிகளின்படி அந்த முதியவருக்கு உடனடியாக ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து அதற்கான ரசீதை வழங்கினர். அபராதத் தொகையைக் கேட்டதும் ஆத்திரமடைந்த அந்த முதியவர், காவல்துறையினரிடம் தனது வாகனத்தை உடனடியாகத் தன்னிடம் திருப்பித் தரும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தான் ஏதோ ஒரு கொலையைப் செய்துவிட்டது போல் தன்னைச் சுற்றி நின்று கொண்டு அனைவரும் ஏன் வீடியோ எடுக்கிறீர்கள் என்றும் அங்கிருந்தவர்களைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார்.

இருப்பினும் காவல்துறையினர் எவ்விதச் சமரசத்திற்கும் இடமளிக்காமல் சட்டப்படி அபராதத்தை விதித்துவிட்டு வாகனத்தை எடுத்துச்சென்று முறைப்படி நடவடிக்கை மேற்கொண்டனர். வாயைக் கொடுத்துவிட்டு விழிப்புணர்வு நிகழ்வில் சிக்கித் தவித்து பத்தாயிரம் ரூபாயை அபராதமாக இழந்த அந்த மதுபிரியரின் சுவாரசியமான இந்தச் சம்பவம் மயிலாடுதுறைப் பகுதியில் அன்று பெரும் பேசும் பொருளாக மாறியதுடன், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாகவும் அமைந்தது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

யாசகம் கேட்டு, தர்மமாகப் பெற்ற 1.60 கோடி ரூபாய்.. தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த முதியவரின் நெகிழ்ச்சி செயல்!
யாசகம் கேட்டு, தர்மமாகப் பெற்ற 1.60 கோடி ரூபாய்.. தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த முதியவரின் நெகிழ்ச்சி செயல்!
பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது இப்போது ரொம்ப ஈஸி: நாகப்பட்டினத்தில் நடமாடும் சேவை முகாம்!
பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது இப்போது ரொம்ப ஈஸி: நாகப்பட்டினத்தில் நடமாடும் சேவை முகாம்!
அக்டோபர் மாதத்தில் ரயில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த தேதிகளில் உங்களது  பயணம் பாதிக்கப்படலாம்..! 
அக்டோபர் மாதத்தில் ரயில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த தேதிகளில் உங்களது  பயணம் பாதிக்கப்படலாம்..! 
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
Embed widget