மேலும் அறிய

தவெக மாவட்ட செயலாளருக்கு அரசு மேடையில் முதல் மரியாதை? மயிலாடுதுறையில் தொடரும் சர்ச்சை!

மயிலாடுதுறையில் அரசு சமுதாய வளைகாப்பு விழாவில் தவெக மாவட்ட செயலாளர் கோபிநாத் சீர்வரிசை வழங்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் துறை சார்பில் முந்திய ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்ட சமுதாய வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது. 

மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த அரசு விழாவில், மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் வட்டாரங்களைச் சேர்ந்த சுமார் 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு, சீர்வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. விழாவுக்கு வந்திருந்த கர்ப்பிணி பெண்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ஜமால் முகமது யூனுஸ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்வை முறைப்படி தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து, பயனாளிகளுக்கு தாம்பூலத்தில் புடவை, மங்கலப் பொருட்கள், பூமாலை, வளையல், இனிப்புகள் மற்றும் ஐந்து வகையான சுவையான உணவுகள் அடங்கிய சீர்வரிசைகளை அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து வழங்கினர்.

தமிழ்நாடு அரசு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படுத்தும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், பிறந்தது முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றி வருகிறது. வருமான வரம்பு ஏதுமின்றி தகுதியுடைய அனைத்து பொதுமக்களும் தங்களுக்கு அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்து பயன்பெறும் வகையில் இத்திட்டம் வடிவம் பெற்றுள்ளது. 

இதன் மூலம் 6 மாதம் முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு குறிப்பிட்ட அளவீடுகளில் சத்துமாவு பாக்கெட்டுகள், வாரம் மூன்று முட்டைகள் மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்குச் செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டுகள் உள்ளிட்டவை தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.

தொடர்கதையாகும் சர்ச்சை:

இத்தகைய மகத்தான நோக்கம் கொண்ட அரசு திட்டத்தின் விழா நகரில் நடைபெற்ற நிலையில், நிகழ்வின் பின்னணியில் எழுந்த அரசியல் தலையீடு தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அரசு நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களின்படி நடத்தப்பட்ட இந்த அதிகாரப்பூர்வ விழாவில், துறை சார்ந்த மாவட்ட திட்ட அலுவலர் பிரபா, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கிருத்திகா மற்றும் மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராகவன் உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இருப்பினும், அதிகாரப்பூர்வமாக அரசுப் பொறுப்பிலோ அல்லது மக்கள் பிரதிநிதித்துவப் பொறுப்பிலோ இல்லாத தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கோபிநாத் மேடையில் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விழாவின் முன்வரிசையில் அமரவைக்கப்பட்ட அவர், மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கு இணையாக மேடையில் நின்று கர்ப்பிணி பெண்களுக்கு அரசு சார்பில் தயார் செய்யப்பட்ட சீர்வரிசைப் பொருட்களை நேரில் வழங்கியுள்ளார்.

அரசு விதிமுறைகள் மீறப்படுவதாக புகார் 

அரசு விழாக்கள் மற்றும் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகளில், சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் மட்டுமே முன்னின்று நடத்துவப்பது வழக்கமான நடைமுறையாகும். ஆனால், அரசுக்கு எவ்விதத்திலும் தொடர்பு இல்லாத கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ஒருவர், அரசு இயந்திரத்தின் அதிகாரப்பூர்வ மேடையில் நேரடியாகப் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கியது அப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அரசு சார்ந்த 'தாய்மாமன் தங்க மோதிரம்' வழங்கும் விழாவிலும், தவெக மாவட்ட செயலாளர் கோபிநாத் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து மோதிரங்களை வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அந்த சர்ச்சை ஓய்வதற்குள்ளாகவே, தற்போது ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் வளைகாப்பு விழாவிலும் அதே நபர் முன்வரிசையில் பங்கேற்று சீர்வரிசைகளை வழங்கியிருப்பது தொடர்கதையாக மாறியுள்ளது. அரசு அதிகாரிகளும் நிர்வாகமும் எந்த அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளருக்கு அரசு மேடைகளில் இத்தகைய முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும் வழங்குகிறார்கள் என்ற கேள்வியை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலமாக எழுப்பி வருகின்றனர்.

அரசு விழாக்களில் பொது விதிமுறைகள் மீறப்படுவதாகவும், கட்சிச் சார்பற்ற முறையில் நடைபெற வேண்டிய நிகழ்ச்சிகள் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் பொதுமக்கள் தங்களது கடுமையான அதிர்ச்சியையும் அதிருப்தியையும் பதிவு செய்து வருகின்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Power Shutdown: தீபத் திருநாளில் மின் நிறுத்தமா? மயிலாடுதுறை மின்வாரிய அறிவிப்பால் பொதுமக்கள் பேரதிர்ச்சி...
Power Shutdown: தீபத் திருநாளில் மின் நிறுத்தமா? மயிலாடுதுறை மின்வாரிய அறிவிப்பால் பொதுமக்கள் பேரதிர்ச்சி...
பூமிக்கடியில் வெடிக்கும் ஜெட் கருவி? அதிர்ச்சியில் டெல்டா!
பூமிக்கடியில் வெடிக்கும் ஜெட் கருவி? அதிர்ச்சியில் டெல்டா!
பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி கிடைக்க வழி என்ன? மயிலாடுதுறை எஸ்பி தலைமையில் முக்கிய ஆலோசனை..
பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி கிடைக்க வழி என்ன? மயிலாடுதுறை எஸ்பி தலைமையில் முக்கிய ஆலோசனை..
5-ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்! மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் நவ.27 நேரடி வேலைவாய்ப்பு முகாம்!
5-ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்! மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் நவ.27 நேரடி வேலைவாய்ப்பு முகாம்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியது உண்மையா? - தமிழக அரசு சொன்ன பளீச் விளக்கம் என்ன தெரியுமா?
தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியது உண்மையா? - தமிழக அரசு சொன்ன பளீச் விளக்கம் என்ன தெரியுமா?
Shubman Gill: ”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
Congress:
Congress: "100 தொகுதிகளுக்கு மேல் கண்டிப்பாக வேணும்.." அகிலேஷ் யாதவிடம் காங்கிரஸ் கறார் காட்டுவது ஏன்?
Mohammed Siraj: இந்திய அணியில் முகமது சிராஜை ஏன் சேர்த்திருக்க வேண்டும்? டேட்டாவைப் பாருங்க ஜி!
Mohammed Siraj: இந்திய அணியில் முகமது சிராஜை ஏன் சேர்த்திருக்க வேண்டும்? டேட்டாவைப் பாருங்க ஜி!
அஜித்தின் திடீர் கொள்கை மாற்றம் ஏன்? விளம்பர யுக்தியா என ரசிகர்கள் கேள்வி
அஜித்தின் திடீர் கொள்கை மாற்றம் ஏன்? விளம்பர யுக்தியா என ரசிகர்கள் கேள்வி
Karthigai Deepam:
Karthigai Deepam: "அண்ணாமலையாருக்கு அரோகரா.." நாளை கார்த்திகை தீபம்! தி.மலையில் குவிந்த பக்தர்கள்!
IND vs NZ 1st Test:
IND vs NZ 1st Test: "போச்சு.. எல்லாம் போச்சு.." இந்திய வெற்றியில் மண்ணை அள்ளிப்போட்ட பிலிப்ஸ் - மிட்செல்!
Bisleri Water: ”எங்க தண்ணி பாதுகாப்பானது இல்லையா?” என்ன நடந்தது - பிஸ்லெரி நிறுவனம் விரிவான விளக்கம்
”எங்க தண்ணி பாதுகாப்பானது இல்லையா?” என்ன நடந்தது - பிஸ்லெரி நிறுவனம் விரிவான விளக்கம்
Embed widget