மேலும் அறிய

விவசாயிகளே உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டுமா? மயிலாடுதுறையில் ஜூலை 30-இல் முக்கிய கூட்டம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜூலை 30-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற ஜூலை 30-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பகுதி சார்ந்த வேளாண் கோரிக்கைகளை முன்வைத்து தீர்வு பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தெரிவித்துள்ளார்.

இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வாயிலாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது;

கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் நேரம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள முதன்மை கூட்டரங்கில், வருகிற 30.07.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் ஜூலை மாதத்திற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தலைமையில் நடைபெறவுள்ளது.

விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களுக்கு அழைப்பு

இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு வட்டங்களைச் சேர்ந்த அனைத்து முன்னோடி விவசாயிகள், சிறு மற்றும் குறு விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சாகுபடி பணிகள், பாசன வசதிகள் மற்றும் வேளாண் சார்ந்த பிற துறைகளின் செயல்பாடுகள் குறித்தும் தங்களது கருத்துக்களையும் கோரிக்கைகளையும் இக்கூட்டத்தில் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கலாம்.

ஒருங்கிணைந்து பங்கேற்கும் அரசுத் துறைகள்

விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் சந்தேகங்களுக்கு ஒரே இடத்தில் உரிய விளக்கம் அளிக்கவும், உடனடியாகத் தீர்வு காணவும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்துத் துறை உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பின்வரும் முக்கிய துறைகளின் மாவட்ட அளவிலான அலுவலர்கள் நேரடியாகப் பங்கேற்க உள்ளனர்.

வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை: நெல், உளுந்து, பயறு மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கான தரமான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் விநியோகம் மற்றும் அரசு மானியத் திட்டங்கள் குறித்த தகவல்கள்.

நீர்ப்பாசனத் துறை (Public Works Department - WRO): பாசன வாய்க்கால்களைப் பராமரித்தல், தூர்வாருதல் பணிகள் மற்றும் கடைமடைப் பகுதிகளுக்குச் சீராகப் பாசன நீர் சென்று சேருவதை உறுதி செய்தல்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TNEB): விவசாய பம்ப்செட்களுக்கான புதிய மின் இணைப்புகள் வழங்குதல், பழுதுபட்ட மின்மாற்றிகளை (Transformers) உடனடியாக மாற்றுதல் மற்றும் தடையற்ற மின் விநியோகம்.

கூட்டுறவுத் துறை: பயிர்க்கடன்கள், உழவர் கடன் அட்டைகள் (KCC), கூட்டுறவு கடன் சங்கங்களின் செயல்பாடுகள் மற்றும் உர மானியங்கள்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC): நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் (DPC) செயல்பாடுகள், கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகையை உடனுக்குடன் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துதல்.

வேளாண்மைப் பொறியியல் துறை: டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்கள் மற்றும் சொட்டுநீர்ப் பாசனக் கருவிகளுக்கான அரசு மானிய உதவிகள்.

கால்நடை பராமரிப்புத் துறை: கால்நடைகளுக்கான மருத்துவ முகாமை நடத்துதல், நோய்த்தடுப்பு ஊசிகள் போடுதல் மற்றும் கோமாரி நோய் தடுப்பு நடவடிக்கைகள்.

கோரிக்கை மனுக்கள் அளிக்கும் முறை

இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் விவசாயிகள், வேளாண்மை, நீர்ப்பாசனம், கால்நடை பராமரிப்பு, மின்சார வசதி மற்றும் பயிர்க் காப்பீடு போன்ற பல்வேறு தலைப்புகளில் தங்களுக்கு உள்ள கோரிக்கைகள் மற்றும் புகார்களைத் தெளிவாக மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் உரிய கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். மேலும், கடந்த மாதக் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களும் இக்கூட்டத்தில் விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்படும்.

மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண் தொழில் சார்ந்த பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், அரசின் மானியத் திட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்துகொள்ளவும் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயனைடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்,  கேட்டுக்கொண்டுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

விவசாயிகளே உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டுமா? மயிலாடுதுறையில் ஜூலை 30-இல் முக்கிய கூட்டம்!
விவசாயிகளே உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டுமா? மயிலாடுதுறையில் ஜூலை 30-இல் முக்கிய கூட்டம்!
குறைதீர்க்கும் நாள் கூட்டம் உண்மையில் பொதுமக்களின் குறைகளை தீர்க்கிறதா? கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள்...
குறைதீர்க்கும் நாள் கூட்டம் உண்மையில் பொதுமக்களின் குறைகளை தீர்க்கிறதா? கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள்...
"ரூ.8.50 லட்சம் போச்சு... போலீஸ் நடவடிக்கை எடுக்கல!" - மயிலாடுதுறையில் கதறி அழுதபடி தீக்குளிக்க முயன்ற கூலித் தொழிலாளி!
ஆட்சி மாறினாலும் காட்சி மாறலையா? மயிலாடுதுறை DRO-வை மிரட்டிய திமுக நிர்வாகி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?
ஆட்சி மாறினாலும் காட்சி மாறலையா? மயிலாடுதுறை DRO-வை மிரட்டிய திமுக நிர்வாகி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Montek Singh: யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
TN Weather News: இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Top 5 Cars: ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Embed widget