மேலும் அறிய

சட்டச் சிக்கல்களை போக்கும் சட்டைநாதர் கோயில்; சட்டை இல்லாமல் அமைச்சர் கே.என்.நேரு சாமி தரிசனம்

சட்ட சிக்கல்களை தீர்க்கும் சீர்காழி சட்டைநாதர் கோயிலில் அமைச்சர் கே.என்.நேரு வழிபாடு மேற்கொண்டார்.

சட்டச் சிக்கல்களை போக்கும் சட்டைநாதர் கோயில் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் திருக்கோயில் சட்டச் சிக்கல்கள், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள் நீங்க இங்கு பூஜையில் பங்கேற்று வழிபட்டுப் பயன்பெறலாம். இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது.

சட்டச் சிக்கல்களை போக்கும் சட்டைநாதர் கோயில்; சட்டை இல்லாமல் அமைச்சர் கே.என்.நேரு சாமி தரிசனம்

கோயிலின் மேலும் பல சிறப்புகள் 

இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது.

சட்டச் சிக்கல்களை போக்கும் சட்டைநாதர் கோயில்; சட்டை இல்லாமல் அமைச்சர் கே.என்.நேரு சாமி தரிசனம்

நாள்தோறும் படையெடுக்கும் விஐபிகள்

இத்தகைய பல சிறப்புகள் கொண்ட இக்கோயில் பல்வேறு வேண்டுதல்களுடன் நாள்தோறும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர். இந்நிலையில் இக்கோயிலுக்கு தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வந்து வழிபாடு மேற்கொண்டார். முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் அமைச்சர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

சட்டச் சிக்கல்களை போக்கும் சட்டைநாதர் கோயில்; சட்டை இல்லாமல் அமைச்சர் கே.என்.நேரு சாமி தரிசனம்

மேல் சட்டை அணியாமல் வழிபாடு செய்த அமைச்சர் கே.என்.நேரு

பின்னர், முத்து சட்டைநாதர், மூலவர் பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், திருநிலை நாயகி அம்பாள், திருஞானசம்பந்தர் உள்ளிட்ட சன்னதிகளில் வழிபாடு செய்தனர். இக்கோயில் அஷ்ட பைரவர் மற்றும் முத்து சட்டைநாதர் சன்னதியில் ஆண்கள் மேல் சட்டை அணிந்து செல்ல கூடாது என்பது ஐதீகம் என்பதாலும், பெரும்பாலும் கோயில் உள்ள ஆண் மேல் சட்டை அணியாமல் வழிபாடு செய்து வழக்கம் என்பதால், அமைச்சர் கே.என்.நேரு சன்னிதி உள்ளே மேல் சட்டை அணியாமல் சாமி தரிசனம் செய்தனர். தற்போது அமைச்சர் கே.என்.நேரு மேல் சட்டை அணியாமல் சாமி தரிசனம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

செய்தி சேகரிப்பதை தடுத்த பி.எஸ்.ஓ

இதனிடையே அமைச்சர் சுவாமி தரிசனம் செய்வது குறித்து அறிந்த செய்தியாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். அப்போது செய்தியாளர்களை அமைச்சரின் பி.எஸ்.ஓ எடுக்கக் கூடாது என தடுத்தது மிரட்டல் விடுத்தார். இதனால் செய்தியாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மனுத்தாக்கல் செய்யச் சென்ற இடத்தில் எம்பி-க்கு நேர்ந்த சங்கடம்: மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது என்ன?
மனுத்தாக்கல் செய்யச் சென்ற இடத்தில் எம்பி-க்கு நேர்ந்த சங்கடம்: மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது என்ன?
அவர் என்ன தண்டி யாத்திரையா சென்றார்? - காங்கிரஸ் எம்பியை கடுமையாக விமர்சித்த உடன்பிறப்பு...!
அவர் என்ன தண்டி யாத்திரையா சென்றார்? - காங்கிரஸ் எம்பியை கடுமையாக விமர்சித்த உடன்பிறப்பு...!
மயிலாடுதுறையில் ‘கை’ கொடுத்தவருக்கே ‘கை’ காட்டும் காங்கிரஸார்.. சொந்தக் கட்சி எம்பி-க்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..
மயிலாடுதுறையில் ‘கை’ கொடுத்தவருக்கே ‘கை’ காட்டும் காங்கிரஸார்.. சொந்தக் கட்சி எம்பி-க்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..
சசிகலா கட்சி வேட்பாளரின் காரில் 5.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்: சீர்காழியில் வேட்புமனு தாக்கலின் போது பரபரப்பு!
சசிகலா கட்சி வேட்பாளரின் காரில் 5.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்: சீர்காழியில் வேட்புமனு தாக்கலின் போது பரபரப்பு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Seeman:
Seeman: "சீமான் - பாலா நட்பு அனைவருக்கும் பாடம்" மேடையிலே நெகிழ்ந்த சிங்கம்புலி!
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
Embed widget