மேலும் அறிய

குறைந்த விலையில் வாகனம் வாங்க அருமையான வாய்ப்பு: காவல்துறை வசம் இருந்த 24 வாகனங்கள் பொது ஏலம்.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறையின் பயன்பாட்டில் இருந்து வந்த மற்றும் தற்போது கழிவினம் செய்யப்பட்ட வாகனங்களை பொது ஏலம் விடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை:  மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறையின் பயன்பாட்டில் இருந்து வந்த மற்றும் தற்போது கழிவினம் செய்யப்பட்ட வாகனங்களை பொது ஏலம் விடும் நிகழ்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசுக்கு கூடுதல் ஆதாயம் சேர்க்கும் வகையிலும், தேவையற்ற வாகனங்களை உரிய முறையில் அகற்றும் நோக்கத்துடனும் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட காவல் துறை நிர்வாகம் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. பொதுமக்களும், வாகனப் பிரியர்களும் இந்த ஏலத்தில் கலந்துகொண்டு பயன்பெறும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஏலத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் வாகன விவரங்கள்

மயிலாடுதுறை மாவட்ட காவல் துறையின் பயன்பாட்டில் இருந்து தற்போது கழிவினம் செய்யப்பட்டுள்ள வாகனங்களின் விவரங்களை துறை சார்ந்த அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இதன்படி, ஒரு நான்கு சக்கர வாகனமும், இருபத்தி மூன்று இரண்டு சக்கர வாகனங்களும் என மொத்தம் இருபத்தி நான்கு வாகனங்கள் இந்த ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் பொது ஏலத்திற்கு விடப்படுகின்றன. அரசுக்கு உரிய வருவாயை ஈட்டித் தரும் பொருட்டு வெளிப்படையான முறையில் இந்த ஏலம் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாகனங்களை நேரில் பார்வையிடும் நாள் மற்றும் நேரம்

ஏலத்தில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் வாகனங்களின் தரத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக பிரத்யேக நேரம் ஒதுக்கக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2026 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதியன்று காலை ஏழு மணி முதல் இரவு எட்டு மணி வரை தொடர்புடைய வாகனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துகொள்ளலாம். மயிலாடுதுறை ஆயுதப்படை அலுவலக மைதானத்தில் இந்த வாகனங்கள் பார்வையிட வசதியாக நிறுத்தப்பட்டிருக்கும். வாங்குவோர் வாகனங்களின் தற்போதைய நிலைமையை நேரடியாகப் பார்த்து உறுதி செய்துகொள்ள இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏலம் நடைபெறும் நாள் மற்றும் இடம்

இந்த வாகனப் பொது ஏலமானது எதிர்வரும் 2026ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் தேதியன்று காலை சரியாக ஒன்பது மணிக்குத் தொடங்கவுள்ளது. மயிலாடுதுறை ஆயுதப்படை அலுவலக மைதானத்தில் இந்த ஏலம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் காலை ஒன்பது மணி முதல் ஆயுதப்படை அலுவலகத்தில் சம்மந்தப்பட்ட அலுவலரிடம் நுழைவு சீட்டு பெற்றுக் கொள்ளலாம். மேலும், ஏலம் குறித்த அனைத்து விபரங்களையும் ஆயுதப்படை அலுவலகத்தின் மூலமாக நேரில் தெரிந்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முன்பணம் செலுத்தும் முறை மற்றும் விதிமுறைகள்

மேற்படி ஏலத்தில் கலந்துகொண்டு வாகனம் கேட்க விரும்புபவர்கள் உரிய முன்பணத்தைச் செலுத்த வேண்டியது கட்டாயமாகும். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் எதுவே அவற்றுக்காக ரூபாய் ஆயிரம் முன்பணமாகச் செலுத்த வேண்டும். இந்த முன்பணமானது 2026ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் தேதி காலை ஒன்பது மணிக்குள் மயிலாடுதுறை ஆயுதப்படை அலுவலகத்தில் சம்மந்தப்பட்ட அலுவலரிடம் செலுத்தப்பட வேண்டும். முன்பணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கு கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும், காலதாமதமாக வருபவர்கள் ஏலம் கேட்கத் தகுதியற்றவர்கள் ஆவர் என்றும் கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள்

ஏலம் கேட்க வருபவர்கள் தங்களது முகவரியை உறுதி செய்யும் வகையில் உரிய ஆவணங்களைக் கொண்டு வருவது அவசியமாகும். வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அசல் மற்றும் அதன் நகலை கட்டாயம் கொண்டு வர வேண்டும். இவற்றுடன் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் இரண்டும் வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட உரிய ஆவணங்கள் எவையும் இல்லாதவர்கள் இந்தப் பொது ஏலத்தில் கலந்து கொள்ள தகுதியற்றவர்கள் ஆவர் என்று காவல் துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

செலுத்த வேண்டிய தொகை மற்றும் கூடுதல் விவரங்கள்

ஏலத்திற்காக காட்சிப்படுத்தப்படும் வாகனங்களை வெற்றிகரமாக ஏலம் எடுப்பவர்கள், பொது ஏலத்தின் போது நிர்ணயிக்கப்படும் இறுதித் தொகை மற்றும் அதற்குண்டான பதினெட்டு சதவீத ஜிஎஸ்டி வரியைச் சேர்த்து செலுத்த வேண்டும். ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகை முழுவதையும் உடனடியாகச் செலுத்தி, அன்றைய தினமே வாகனத்தை பெற்றுச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஏலம் பற்றிய கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் 6383302292 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Mayiladuthurai Power Shutdown (31.10.2026): மின் நுகர்வோர் கவனத்திற்கு: நாளை காலை முதல் மாலை வரை மின் விநியோகம் இருக்காது - முழுப் பட்டியல்..
Mayiladuthurai Power Shutdown (31.10.2026): மின் நுகர்வோர் கவனத்திற்கு: நாளை காலை முதல் மாலை வரை மின் விநியோகம் இருக்காது - முழுப் பட்டியல்..
விவசாயிகள் கவனத்திற்கு: குறைந்த கட்டணத்தில் நெற்பயிர் காப்பீடு செய்வது எப்படி?
விவசாயிகள் கவனத்திற்கு: குறைந்த கட்டணத்தில் நெற்பயிர் காப்பீடு செய்வது எப்படி?
உயிர் காக்கும் உன்னத சேவை:TNTJ திருமுல்லைவாசல் கிளைக்குத் தேடிவந்த மாபெரும் அரசு அங்கீகாரம்!
உயிர் காக்கும் உன்னத சேவை:TNTJ திருமுல்லைவாசல் கிளைக்குத் தேடிவந்த மாபெரும் அரசு அங்கீகாரம்!
தீபாவளி ஸ்பெஷல் ரயில்கள்: அக்டோபர் 29 முதல் முன்பதிவு தொடக்கம்  
தீபாவளி ஸ்பெஷல் ரயில்கள்: அக்டோபர் 29 முதல் முன்பதிவு தொடக்கம்  
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: சீமான் பொது வேட்பாளராக களமிறங்குவதில் என்ன சவால்கள்? ஓர் அலசல்
Seeman: சீமான் பொது வேட்பாளராக களமிறங்குவதில் என்ன சவால்கள்? ஓர் அலசல்
TVK On Stalin:: ”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
Congress Rally: ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
அன்பில் மகேஷ் கைது.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! அடுத்தது நம்மளா? கதிகலங்கும் முன்னாள் அமைச்சர்கள்
அன்பில் மகேஷ் கைது.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! அடுத்தது நம்மளா? கதிகலங்கும் முன்னாள் அமைச்சர்கள்
இன்றைய ராசிபலன் (Oct.31) -யாருக்கு? எப்படி? மாதத்தின் கடைசி நாள் வரவா? செலவா? சாதகமா? பாதகமா?
இன்றைய ராசிபலன் (Oct.31) -யாருக்கு? எப்படி? மாதத்தின் கடைசி நாள் வரவா? செலவா? சாதகமா? பாதகமா?
இன்று விண்ணில் பாய்கிறது GSLV - F18 : இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் NVS-03 செயற்கைக்கோள் பற்றி தெரியுமா?
இன்று விண்ணில் பாய்கிறது GSLV - F18 : இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் NVS-03 செயற்கைக்கோள் பற்றி தெரியுமா?
உலகையே உற்றுநோக்க வைக்கும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்! - மீண்டும் பிரதமராவாரா நெதன்யாகு?
உலகையே உற்றுநோக்க வைக்கும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்! - மீண்டும் பிரதமராவாரா நெதன்யாகு?
Tasmac: டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
Embed widget