மேலும் அறிய

நள்ளிரவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! மயிலாடுதுறை அருகே திமுக பிரமுகர் கொடூரக் கொலை - போலீஸ் குவிப்பு!

மயிலாடுதுறை அருகே அரசு பஸ் நடத்துனர் தமிழ்ச்செல்வன் நள்ளிரவில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் ஆனதாண்டவபுரம் வடக்குத் தெருப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் தமிழ்ச்செல்வன். நாற்பத்தைந்து வயதான இவர், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராகப் பணியாற்றி வந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழிலாளர் பிரிவான தொமுச அமைப்பில் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்த தமிழ்ச்செல்வன், அப்பகுதியில் செல்வாக்கு மிக்க ஒரு நபராக வலம் வந்துள்ளார்.

இந்நிலையில் வழக்கம்போல் தனது அன்றாடப் பணிகளை மேற்கொள்வதற்காக அதிகாலை வேளையில் வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்ற இவர், நள்ளிரவில் ஊரின் எல்லைப் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பணிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை

அரசு பஸ் நடத்துனரான தமிழ்ச்செல்வன் தினசரி அதிகாலை 4:30 மணிக்குத் தனது ஹீரோ ஸ்ப்ளெண்டர் இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து பணிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அன்றாடப் பணிகளை முடித்துவிட்டு இரவு 10 மணிக்குள் வீடு திரும்புவது அவரது வழக்கம். இந்த நிலையில், நேற்று  வழக்கமான நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் பணிக்குச் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஆனால், அன்றைய தினம் முழுவதும் அவர் வழக்கத்திற்கு மாறாக வீட்டிற்குத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் சற்று கவலையுடன் காத்திருந்த நிலையில், இரவு வெகு நேரமாகியும் தமிழ்ச்செல்வன் வீட்டிற்குத் திரும்பி வரவில்லை.

ரத்த வெள்ளத்தில் சடலமாகக் மீட்பு

இரவு நேரத்தைக் கடந்தும் அவர் வராததால் பதற்றமடைந்த குடும்பத்தினரும் உறவினர்களும் அவரைத் தேடும் பணியில் ஈடுபடத் தொடங்கினர். அப்போது நள்ளிரவு வேளையில், ஆனதாண்டவபுரம் ரயில்வே கேட் அருகே உள்ள ஆற்காடு சாலையில் தமிழ்ச்செல்வன் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு இறந்து கிடப்பது தெரியவந்தது.

மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து, கூர்மையான அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலறிந்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாகச் சம்பவ இடத்தில் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறையின் தீவிர விசாரணை

இக்கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மயிலாடுதுறை காவல் நிலையப் போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த தமிழ்ச்செல்வனின் உடலைக் கைப்பற்றிய போலீஸார், உடனடியாகப் பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், முதற்கட்ட விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் அரசியல் மற்றும் தொழில் ரீதியான காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் போலீஸார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள மர்ம நபர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

பகுதியில் பதற்றம் - போலிஸ் குவிப்பு

அரசு பஸ் நடத்துனரும் தொமுச பொறுப்பாளருமான தமிழ்ச்செல்வன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், ஆனதாண்டவபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களிடையே ஆழ்ந்த சோகத்தையும், பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த தமிழ்ச்செல்வனுக்கு மாலதி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மேலும், தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் அனைவரும் தீவிர திமுக ஆதரவாளர்களாகவும், கட்சியின் பல்வேறு பணிகளில் ஈடுபடுபவர்களாகவும் விளங்கி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையே மெய்மறந்த இரவு: இசை வெள்ளத்தில் நனைந்த தருமபுரம் ஆதீனம்..
மயிலாடுதுறையே மெய்மறந்த இரவு: இசை வெள்ளத்தில் நனைந்த தருமபுரம் ஆதீனம்..
Mayiladuthurai Power Shutdown (19.11.2026): மயிலாடுதுறை மாவட்ட மக்களே உஷார்! நாளை (நவ.19) பகல் நேரத்தில் மின்சாரம் துண்டிப்பு - உங்கள் ஊர் இந்தப் பட்டியலில் இருக்கா?
Mayiladuthurai Power Shutdown (19.11.2026): மயிலாடுதுறை மாவட்ட மக்களே உஷார்! நாளை (நவ.19) பகல் நேரத்தில் மின்சாரம் துண்டிப்பு - உங்கள் ஊர் இந்தப் பட்டியலில் இருக்கா?
ஐப்பசி தவறி கார்த்திகையில் கிடைத்த அருள்: மயிலாடுதுறையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய முடவன் முழுக்கு தீர்த்தவாரி!
ஐப்பசி தவறி கார்த்திகையில் கிடைத்த அருள்: மயிலாடுதுறையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய முடவன் முழுக்கு தீர்த்தவாரி!
300 போலீசாருக்கு தண்ணி காட்டிய திருடர்கள்; மயிலாடுதுறை தீர்த்தவாரி கூட்டத்தில் நகைகள் பறிப்பு..!
300 போலீசாருக்கு தண்ணி காட்டிய திருடர்கள்; மயிலாடுதுறை தீர்த்தவாரி கூட்டத்தில் நகைகள் பறிப்பு..!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!
VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!
அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நவ.24 இல் ஜாமின் கிடைக்குமா?
அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நவ.24 இல் ஜாமின் கிடைக்குமா?
Kanimozhi: தயவுசெய்து எனக்கு சொல்லுங்கள்! நானும் தெரிந்துகொள்கிறேன்! முதல்வர் விஜயை சைலண்டாக நோஸ்கட் செய்த கனிமொழி!
Kanimozhi: தயவுசெய்து எனக்கு சொல்லுங்கள்! நானும் தெரிந்துகொள்கிறேன்! முதல்வர் விஜயை சைலண்டாக நோஸ்கட் செய்த கனிமொழி!
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆபத்து? - குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆபத்து? - குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!
DMK: சைலன்ட் மோடில் திமுக முன்னாள் அமைச்சர்.. அடுத்து தவெகவில் இணைய திட்டமா? யார் அந்த அவர்?
DMK: சைலன்ட் மோடில் திமுக முன்னாள் அமைச்சர்.. அடுத்து தவெகவில் இணைய திட்டமா? யார் அந்த அவர்?
"Reels முதலமைச்சர், Real முதலமைச்சராவது எப்போது?": CM-ஐ சாடிய டி.டி.வி தினகரன்!
IPL Auction: ஐபிஎல் ஏல தேதி அறிவிப்பு - எங்கு? எப்போது? எத்தனை கோடிகள் மீதம்?யாரிடம் அதிக தொகை - முழு லிஸ்ட்
ஐபிஎல் ஏல தேதி அறிவிப்பு - எங்கு? எப்போது? எத்தனை கோடிகள் மீதம்?யாரிடம் அதிக தொகை - முழு லிஸ்ட்
Olympic City: அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - தமிழ்நாடு அரசு அதிரடி
Embed widget