மேலும் அறிய

நிஜ உலக 'ரியல் ஹீரோ'க்களுக்கு அழைப்பு! - ஜீவன் ரக்ஷா பதக் விருது 2026: ஜூலை 31-க்குள் மிஸ் பண்ணாம விண்ணப்பியுங்கள்!

ஆபத்தான சூழலில் பிறர் உயிரைக் காத்த வீரர்களுக்குச் சான்றளிக்கும் 'ஜீவன் ரக்ஷா பதக் விருது 2026' -க்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்குமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை: தன்னுயிரைப் பொருட்படுத்தாமல் பிறரின் உயிரைக் காப்பாற்றப் போராடிய மனிதநேயப் பண்பாளர்களைக் கெளரவிக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் 'ஜீவன் ரக்ஷா பதக் விருது 2026'-க்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தெரிவித்துள்ளார்.

விருதின் பின்னணியும் நோக்கமும்

அன்றாட வாழ்வில் எதிர்பாராமல் நிகழும் ஆபத்தான சூழ்நிலைகளில், சுயநலமின்றி மற்றவர்களின் உயிரைப் பாதுகாக்கும் உன்னத செயல்களைப் பாராட்டுவதற்காக மத்திய அரசு ஆண்டுதோறும் இவ்விருதுகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, பின்வரும் ஆபத்தான சூழல்களில் துணிச்சலாகச் செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய மீட்பாளர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது;

* நீரில் மூழ்குதல் மற்றும் பெருவெள்ள மீட்புப் பணிகள்
* சாலை மற்றும் தொடர்வண்டி விபத்துகள்
* தீ விபத்துகள் மற்றும் வெடிவிபத்துகள்
* மின்சாரம் தாக்கி இறக்கும் சூழல்கள்
* நிலச்சரிவுகள் மற்றும் இயற்கைச் சீற்றங்கள்
* வனவிலங்குத் தாக்குதல்கள்
 * சுரங்கங்களில் ஏற்படும் விபத்துகள் மற்றும் மீட்புப் பணிகள்

மூன்று முக்கியப் பிரிவுகள்

மீட்பாளரின் தைரியம், துணிச்சல் மற்றும் ஆபத்தின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, ஜீவன் ரக்ஷா பதக் விருதுகள் மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

 1. சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக் (Sarvottam Jeevan Raksha Padak) - மிகக்கடுமையான உயிராபத்தான சூழலில் மிக உயரிய தியாக உணர்வுடன் செயல்பட்டமைக்காக.
 2. உத்தம ஜீவன் ரக்ஷா பதக் (Uttam Jeevan Raksha Padak) - தீவிரமான ஆபத்தான சூழலில் தைரியத்துடன் செயல்பட்டு உயிர் காத்தமைக்காக.
 3. ஜீவன் ரக்ஷா பதக் (Jeevan Raksha Padak) - ஆபத்தான தருணங்களில் உடனடியாகச் செயல்பட்டு மனிதநேயத்துடன் உயிர் காத்தமைக்காக.

விண்ணப்பிப்பதற்கான முக்கிய நிபந்தனைகள்

காலவரையறை: உயிர் காக்கும் வீரச் செயல் நிகழ்த்தப்பட்ட தேதி 2024 அக்டோபர் 1-க்குப் பின்னர் அமைந்திருக்க வேண்டும். அதற்கு முன்னர் நடைபெற்ற சம்பவங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
தகுதி: பாலினம், வயது, சாதி அல்லது தொழில் பாகுபாடின்றி அனைத்து தரப்பு இந்தியக் குடிமக்களும் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ படிவத்தைப் பூர்த்தி செய்து, அதனுடன் பின்வரும் விவரங்களை இணைத்து அனுப்ப வேண்டும்:
 1. சுயவிவரக் குறிப்பு (Bio-data): விண்ணப்பதாரரின் முழுமையான தனிப்பட்ட விவரங்கள்.
 2. சம்பவ விவர அறிக்கை (Citation in Narrative Form): நடைபெற்ற சம்பவம் குறித்த விவரங்களை அதிகபட்சமாக 250 சொற்களுக்குள் தெளிவான அறிக்கையாகத் தொகுக்க வேண்டும்.
 3. முக்கியக் கூறுகள்:
 சம்பவம் நடைபெற்ற காலவரிசை (Sequence of events).
* மீட்பாளரின் தைரியம், துணிச்சல் மற்றும் உடனடிச் செயல்பாடு.
* மீட்பின் போது மீட்பாளரின் உயிருக்கு இருந்த ஆபத்தின் தன்மை.
* அவர் ஆற்றிய குறிப்பிட்ட தனிப்பட்ட பங்களிப்பு.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்

விருதிற்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் இணைப்பு-1 ஆகியவற்றை மயிலாடுதுறை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.mayiladuthurai.nic.in என்ற முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றுகளுடன் 31.07.2026 அன்றைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பக் கருத்துருக்களைப் பின்வரும் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்:
முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலகம்,
அறை எண்: 527,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
மயிலாடுதுறை.

தனியாரின் உன்னதச் செயல்களைச் சமூகத்திற்கு அடையாளம் காட்டி அவர்களைக் கெளரவிக்க ஏதுவாக, தகுதியுடைய நபர்கள் அல்லது அவர்களைப் பற்றி அறிந்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உரிய காலத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

நிஜ உலக 'ரியல் ஹீரோ'க்களுக்கு அழைப்பு! - ஜீவன் ரக்ஷா பதக் விருது 2026: ஜூலை 31-க்குள் மிஸ் பண்ணாம விண்ணப்பியுங்கள்!
நிஜ உலக 'ரியல் ஹீரோ'க்களுக்கு அழைப்பு! - ஜீவன் ரக்ஷா பதக் விருது 2026: ஜூலை 31-க்குள் மிஸ் பண்ணாம விண்ணப்பியுங்கள்!
TNPSC தேர்வில் முதல் முயற்சியிலேயே வெல்வது எப்படி? நாகப்பட்டினத்தில் ஆட்சியரின் மாஸ் பிளான்!
TNPSC தேர்வில் முதல் முயற்சியிலேயே வெல்வது எப்படி? நாகப்பட்டினத்தில் ஆட்சியரின் மாஸ் பிளான்!
மயிலாடுதுறை பயணிகள் கவனத்திற்கு! ரயில் சேவையில் மாற்றம்: ₹20 கோடியில் புதிய மெகா பாலம்!
மயிலாடுதுறை பயணிகள் கவனத்திற்கு! ரயில் சேவையில் மாற்றம்: ₹20 கோடியில் புதிய மெகா பாலம்!
"கூட்டணியில் இருந்தாலும் தவறை சுட்டிக்காட்டுவோம்" - நீட் விவகாரத்தில் தமிழக அரசை சாடிய விசிக விஜயரங்கன்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
Jaecoo J5 Hybrid SUV: இதென்னடா டொயோட்டா ஹைரைடருக்கு வந்த சோதனை.! செம மைலேஜ், அம்சங்களுடன் களமிறங்கும் ஜேக்கூ ஹைப்ரிட் SUV
இதென்னடா டொயோட்டா ஹைரைடருக்கு வந்த சோதனை.! செம மைலேஜ், அம்சங்களுடன் களமிறங்கும் ஜேக்கூ ஹைப்ரிட் SUV
Embed widget