மேலும் அறிய

Crime: வீட்டிலே நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு; 10 விரல்களையும் பறிகொடுத்த பிரபல ரவுடி - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

மயிலாடுதுறை அருகே பிரபல ரவுடி நாட்டு வெடிகுண்டு வெடித்து படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பண்டாரவாடை கலைஞர் நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம் என்பவரின் மகன் 40 வயதான கலைவாணன். இவர்மீது 4 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் அடிதடி உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

துண்டான விரல்கள்:

பிரபல ரவுடியான இவர் நேற்று இரவு 8.30 மணியளவில் அவரது வீட்டின் பின்புறம் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக நாட்டுவெடிகுண்டு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டுவெடிகுண்டு வெடித்ததில் கலைவாணனின் இரண்டு கைகளிலும் உள்ள 10 விரல்களும் துண்டானது. மேலும், மார்பு, தொடைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கலைவாணன் மேல் சிகிச்சைக்காக தற்போது  தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Crime: வீட்டிலே நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு; 10 விரல்களையும் பறிகொடுத்த பிரபல ரவுடி - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

போலீஸ் விசாரணை:

மேலும் இது குறித்து நேற்று இரவு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்த சூழலில் தற்போது கலைவாணன் வீட்டின் அருகில் வெளிநபர்கள் யாரும் செல்லாத வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பட்டைகளை கட்டி கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து அகிலன், திருவாரூர் மாவட்டத்திலிருந்து முகிலன் ஆகிய இரண்டு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டது. கலைவாணன் வீட்டு வாசலில் இறக்கி விடப்பட்ட இரண்டு நாய்களும் சிறிது தூரம் ஓடி அவருடைய வீட்டின் எதிர்ப்புறம் உள்ள கிரவுண்டில் உள்ள குப்பைமேட்டின் அருகில் சென்று நின்று விட்டன.

Speaker Appavu: ஏழை எளிய மக்களை தாங்கி பிடிக்கின்ற பண்புள்ள முதல்வர் நம் முதல்வர் - சபாநாயகர் அப்பாவு பெருமிதம்!


Crime: வீட்டிலே நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு; 10 விரல்களையும் பறிகொடுத்த பிரபல ரவுடி - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?


இச்சம்பவம் குறித்து போலீசார்  தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அடையாளம் தெரியாத நபர்கள் தன் மீது நாட்டுவெடிகுண்டை வீசி சென்றதாக கலைவாணன் வாக்கு மூலம் அளித்துள்ளார். தன் நாட்டு வெடிகுண்டு தயார் செய்தது காவல்துறையினருக்கு தெரிந்துவிட கூடாது என இதுபோன்று கூறியுள்ளார் என காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் கலைவாணன் வெடிகுண்டு தயாரித்தபோது குண்டு வெடித்து, கைவிரல்கள் துண்டானது தெரியவந்திருக்கிறது.

Mothers day: நாம் எங்கு இருந்தாலும் தாயை கைவிடக் கூடாது.... அன்னையர் தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு


Crime: வீட்டிலே நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு; 10 விரல்களையும் பறிகொடுத்த பிரபல ரவுடி - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் முக்கிய பிரமுகர் ஒருவரை கொல்ல திட்டமிட்டு கலைவாணன் வெடிகுண்டு தயாரித்திருக்கலாம் என்றும், இந்த ரகசிய திட்டம் வெடிகுண்டு வெடித்ததால் வெளியே தெரிந்துவிட்டதாக மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

கொலை செய்ய சதித்திட்டம்:

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில்,  இவர் 60 நாட்டு வெடிகளை வாங்கி அதில் இருந்த மருந்தை வெளியே எடுத்து பால்ரஸ், ஆணி உள்ளிட்டப் பொருட்களை அடைத்து வெடிகுண்டுகளை தயாரித்திருக்கிறார். அப்போது 2 குண்டுகளை செய்து முடித்துவிட்டு 3 வது குண்டு தயாரிக்கும்போது வெடித்து சிதறியுள்ளது. ஏற்கனவே தயாரித்த 2 வெடிகுண்டுகளை அவரது மனைவியிடம் இருந்து கைப்பற்றி, அவரையும் வழக்கில் குற்றவாளியாக சேர்த்துள்ளோம். யாரை கொலை செய்ய வெடிகுண்டுகளை செய்தார்? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

Namakkal: வெல்ல ஆலை குடிசைகளுக்கு தீ வைப்பு.. வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் படுகாயம்.. என்ன நடந்தது?

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் கனமழை, இடி மின்னல், பலத்த காற்று: சென்னை வானிலை எச்சரிக்கை
தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் கனமழை, இடி மின்னல், பலத்த காற்று: சென்னை வானிலை எச்சரிக்கை

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
Kia Sorento: கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Russia Attack Kyiv Bridge Video: உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
Embed widget