மேலும் அறிய

கடும் சிரமத்திற்குப் பின் ஊர் திரும்பிய இளைஞர்: முதல் நாளே மதுபோதையில் விபத்தில் பலி..!

நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வந்த இளைஞர், மது போதையால் முதல் நாளிலே விபத்தில் உயிரிழந்த சம்பவம் காரைக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய நகரமாக விளங்குவது காரைக்குடி. காரைக்குடி அருகே அமைந்துள்ளது சாக்கோட்டை விளாிரகாடு கிராமமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தலிங்கம். அவருக்கு வயது 23.  காத்தலிங்கம் சிற்பி ஆவார். இவர் பெங்களூரில் சிற்பி பணியை செய்து வருகிறார். ஊரடங்கு காரணமாக கடந்த சில வாரங்களாக பேருந்துகள் இயக்கப்படாததால் பெங்களூரிலே தங்கியிருந்த காத்தலிங்கம், தற்போது பேருந்துகள் இயக்கப்படுவதால் நேற்று சொந்த ஊரான சாக்கோட்டை விளாரிகாட்டிற்கு வந்துள்ளார்.

நீண்ட நாட்கள் கழித்து ஊருக்கு திரும்பிய உற்சாகத்தில் நண்பர்களான அருண் மற்றும் கவிராஜை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்று பணம்பட்டி மதுபானக்கடைக்கு சென்றுள்ளனர். அங்கு மது அருந்திவிட்டு மீண்டும் மதுவாங்க முயற்சித்தபோது அவர்களிடம் பணம் இல்லாதது தெரியவந்துள்ளது.

கடும் சிரமத்திற்குப் பின் ஊர் திரும்பிய இளைஞர்: முதல் நாளே மதுபோதையில் விபத்தில் பலி..!

இதையடுத்து, மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றுள்ளனர். பணம்பட்டி அருகே இருந்த புதுவயலில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றுள்ளனர். ஏற்கனவே மதுபோதையில் இருந்ததால் அவர்கள் வாகனத்தை சரியாக ஓட்ட முடியாமல் ஓட்டிச்சென்றுள்ளனர். அப்போது, கருநாவல்குடி வளைவில் சென்றபோது அந்த இடத்தில் இருந்த பாலத்தில் மோதி மூன்று பேரும் கீழே விழுந்தனர்.

அந்த விபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய காத்தலிங்கம் சம்பவ இடத்திலே பலியானார். அவரது நண்பர்களான அருண் மற்றும் கவிராஜ் இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காயம் அடைந்த அருண் மற்றும் கவிராஜை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த காத்தலிங்கத்தின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அவரது உடலை அனுப்பி வைத்துள்ளனர்.

கடும் சிரமத்திற்குப் பின் ஊர் திரும்பிய இளைஞர்: முதல் நாளே மதுபோதையில் விபத்தில் பலி..!

இந்த விபத்து தொடர்பாக சாக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பிய சிற்பி, ஊருக்கு வந்த முதல் நாளிலே மதுபோதையால் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு காலத்தில் கடும் சிரமத்திற்கு உள்ளான அவர், அதிலிந்து மீண்ட சந்தோஷத்தை கொண்டாடவும், ரிலாக்ஸ் செய்யவும் தான் நண்பர்களுடன் மது அருந்த சென்றுள்ளார். ஆனால் முதல் நாளே அவரது முடிவு நாளாக மாற்றிவிட்டது மதுபோதை. நண்பர்கள் அடுத்தடுத்து கூடுதல் மது கேட்டதால், அதை வாங்குவதற்கா எடுத்த முயற்சியும், கட்டுப்பாடு இல்லாத சூழலும் தான் இந்த விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. உறவினர்கள் இறந்த இளைஞரின் சடலத்தை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது. 

தலைப்பு செய்திகள்

Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
மதுரை அரசுப் பள்ளியில் கொடியேற்றினாரா த.வெ.க., நிர்வாகி? - பூதாகரமாக வெடிக்கும் சர்ச்சை !
மதுரை அரசுப் பள்ளியில் கொடியேற்றினாரா த.வெ.க., நிர்வாகி? - பூதாகரமாக வெடிக்கும் சர்ச்சை !
பாப்பாபட்டி கிராம மக்கள் வழக்கு: 'ஜனநாயகம்' படத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
பாப்பாபட்டி கிராம மக்கள் வழக்கு: 'ஜனநாயகம்' படத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
Embed widget