மேலும் அறிய

Madurai "முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்த ஊழல் குறித்து பேசுவதற்கு நேரம் போதாது" - அமைச்சர் பி.டி.ஆர் காட்டம் !

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்த ஊழல் குறித்து பேசுவதற்கு நேரம் போதாது என மதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

”ஸ்டார்ட் அப் தமிழ்நாடு” மதுரை வட்டார புத்தாக்க மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க மதுரை வட்டார புத்தாக்க மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
 

Madurai
மதுரையில் நடைபெற்ற நிகழ்வில்  வணிக வரி மற்றும் பாத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜீத் சிங், மாநகராட்சி மேயர் இந்திராணி ஆகியோர் பங்கேற்பு, மதுரை, ஈரோடு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் வட்டார புத்தாக்க மையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Madurai
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில் "அதிமுக ஆட்சி காலத்தில் எந்த திட்டமும் செய்யவில்லை என பி.டி.ஆரின் பேச்சு முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் என ஆர்.பி.உதயகுமார் அறிக்கை விடுத்தார். இது குறித்து கேட்ட ஆர்.பி உதயகுமாரின் கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. ஆர்.பி.உதயகுமார் செய்த ஊழல் குறித்து பேசுவதற்கு நேரம் போதாது.
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணை நடைபெறுகிறது. மழை நீரை விரைவாக உறிஞ்சி எடுக்க சூப்பர் சக்கர் லாரி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. மதுரை மாநகராட்சிக்கு மேலும் சூப்பர் சக்கர் லாரிகள் வாங்கப்படும்.

Madurai
 
பெரிய முதலீட்டில் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க முன் வந்தாலும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மிக முக்கியமானது, தமிழகத்தில் வேலை வாய்ப்புக்களை சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உருவாக்கி வருகிறது, தமிழகத்தில் புதிய யுக்தியுடன் 2 இலட்ச ரூபாய் இருந்தால் தொழில் தொடங்கலாம், ஸ்டார்ட் ஆஃப் தமிழ்நாடு திட்டத்தில் சமூக நீதி காக்கப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பினருக்கும் தொழில் தொடங்க வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்டார்ட் ஆஃப் தமிழ்நாடு திட்டத்தால் 2 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான புதிய சிறு, குறு நிறுவனங்கள் உருவாகும்" என கூறினார்
 
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பாப்பாபட்டி கிராம மக்கள் வழக்கு: 'ஜனநாயகம்' படத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
பாப்பாபட்டி கிராம மக்கள் வழக்கு: 'ஜனநாயகம்' படத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
காவலர் தாக்குதலில் கணவர் மரணம்: மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
காவலர் தாக்குதலில் கணவர் மரணம்: மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
வெளிநாட்டு மகள் தந்த பிரம்மாண்ட பரிசு: தாயின் 80-வது பிறந்தநாளில் 80 சீர்வரிசை, 2 லட்சம் பண மாலை!
வெளிநாட்டு மகள் தந்த பிரம்மாண்ட பரிசு: தாயின் 80-வது பிறந்தநாளில் 80 சீர்வரிசை, 2 லட்சம் பண மாலை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Embed widget