மேலும் அறிய

”கோவை வழக்கில் அண்ணாமலை மீது சந்தேகம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி மதுரையில் பேச்சு

”கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் தப்பித்தார்கள் என்று சொன்னால் அதற்கு முழுமையான பொறுப்பு அண்ணாமலையே” - ஆர்.எஸ்.பாரதி காட்டம்.

மதுரை  மாநகர மாவட்ட தி.மு.க.,  சார்பில் இந்தித் திணிப்புக்கு எதிராக விளக்கப்  பொதுக்கூட்டம் கோரிப்பாளையம் பகுதியில் நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசுகையில், "காவல்துறைக்கு தகுதியற்றவர்கள் என்று சொல்லி வெளியேற்றப்பட்டவர்கள் தற்சமயம் நம்மிடம் கேள்வி கேட்டு வருகிறார்கள். இதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை. தமிழுக்கு எந்தவிதமான பணிகளை திமுக செய்துள்ளது என்பதை நமது கடைகோடி தொண்டனுக்கே தெரியும். அவனே பதில் சொல்லி விடுவான். ஹிந்தியை தமிழ்நாட்டில் எந்த விதத்திலும் எந்த காலத்திலும் நுழைக்க முடியாது.

”கோவை வழக்கில் அண்ணாமலை மீது சந்தேகம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி மதுரையில் பேச்சு
 
நேற்று அரசியலுக்கு வந்த பரதேசி  எல்லாம் நமக்கு சவால் விடுவது வேடிக்கையாக உள்ளது. வரலாற்றை பேசுகிற பொழுது உண்மை நிலையை தெளிவாக எடுத்து கூற வேண்டும். அதை திருத்தி தவறாக எடுத்துச் சொல்லக் கூடாது. ஹிந்தி எதிர்ப்புக்கு திமுக தியாகம் செய்தது போல இந்த சுதந்திர இந்தியாவில் வேறு எந்த கட்சியும் தியாகம் செய்தது கிடையாது. பி.ஜே.பியாக இருந்தாலும் மற்ற கட்சிகளாக இருந்தாலும் வரலாறு தெரியாத பசங்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து விட்டார்கள். நான் தொடுத்த வழக்குகளில் எந்த வழக்கிலும் நான் தோல்வி பெற்றது கிடையாது. நான் பேசுவதை தவிர்த்து விட்டு வெட்டி ஒட்டி போடுவதையே சிலர் வேலையாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் ஹிந்தி என்பது எங்குமே கிடையாது.

”கோவை வழக்கில் அண்ணாமலை மீது சந்தேகம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி மதுரையில் பேச்சு
 
வேறு ஒரு கட்சியாக இருந்தால் அண்ணாமலையை என்.ஐ குற்றவாளியாக சேர்த்திருக்கும்.
சைலேந்திரபாபு 72 வெடிகுண்டுகள் மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளது என்று சொல்லுகிறார். அண்ணாமலை கோயம்புத்தூர் வழக்கில் மாற்று கருத்துக்களை சொல்லி வருகிறார். இப்படி கருத்துக்களை மாற்றி சொல்கிற பொழுது குளறுபடி ஏற்படுமா ஏற்படாதா குற்றவாளிகள் தப்பித்து விடுவார்களே இவர் ஐபிஎஸ் படித்தரா அல்லது போலி சான்றிதழ் வாங்கினாரா?. கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்பில் வழக்கில் குற்றவாளிகள் தப்பித்தார்கள் என்று சொன்னால் அதற்கு முழுமையான பொறுப்பு அண்ணாமலையே. திட்டமிட்டு அண்ணாமலை ஒரு சதி செய்து வருகிறார். அவரே குண்டு வைத்து ஆட்களை செட் செய்கிறாரா என்பது தெரியவில்லை. நாம் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதையும் செய்வதற்கு தயாராக உள்ளது பிஜேபி. குஜராத்தில் 150 பேருக்கு மேல் இறந்துள்ளார்கள் அண்ணாமலை என்ன செய்து கொண்டிருக்கிறார். அந்த காண்ட்ராக்டர் யார் பிஜேபிக்கு டொனேஷன் கொடுத்தவர் தான் நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். இதுவரை நான்கு நாட்களாக கைது செய்யப்படவில்லை, பெற்ற லஞ்சம் எவ்வளவு ? பிஜேபியை ஒழிக்கும் அளவிற்கு நாம் தயாராக வேண்டும். அதிமுக கதையை விட்டு விடுங்கள். அவர்களே சண்டையிட்டு அழித்துக் கொள்வார்கள். பாதி பேர் எடப்பாடி அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

தலைப்பு செய்திகள்

மணி என பெயர் வைத்துள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படமாக இருக்கும் - வதந்தி 2 சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சசிகுமார் !
மணி என பெயர் வைத்துள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படமாக இருக்கும் - வதந்தி 2 சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சசிகுமார் !
வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Embed widget