மேலும் அறிய

முதல் திருமணத்தை மறைத்த மனைவி; 3-வது திருமணத்தால் 2வது கணவர் அதிர்ச்சி..!

தேனி மாவட்டம் கூடலூரில் முதல் திருமணத்தை மறைத்து இன்ஜினியரை கரம் பிடித்த பெண், 3-வது திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி மாவட்டம் கூடலூர் 4-வது வார்டு கருப்புசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய் போஸ் (32) இன்ஜினியர். அவருடைய மனைவி வித்யா (30). இவர்களுக்கு, கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு, 7 வயதி்ல் மகன் உள்ளார். இந்தநிலையில் வித்யா, தனது மகனை கவனிக்காமல் அடிக்கடி செல்போனில் நீண்ட நேரம் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் விஜய் போஸ், வித்யாவை கண்டித்துள்ளார்.

முதல் திருமணத்தை மறைத்த மனைவி; 3-வது திருமணத்தால் 2வது கணவர் அதிர்ச்சி..!

இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் செல்போனில் அடிக்கடி பேசுவது தொடர்பாக வித்யாவின் உறவினர் ஒருவரிடம் விஜய் போஸ் கூறியிருக்கிறார். அப்போது அவர், வித்யாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்தார் விஜய் போஸ், கடந்த 2010-ம் ஆண்டில் வித்யாவுக்கு ஒருவருடன் திருமணம் நடந்ததாகவும், கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதாகவும் வித்யாவின் உறவினர் விஜய் போசிடம் கூறியுள்ளார். மேலும், அதிர்ச்சி அடைந்த அவர், முதல் திருமணத்தை மறைத்து தன்னை 2-வதாக திருமணம் செய்தது குறித்து வித்யாவிடம் கேட்டுள்ளார்.

முதல் திருமணத்தை மறைத்த மனைவி; 3-வது திருமணத்தால் 2வது கணவர் அதிர்ச்சி..!

இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  இதனால் வித்யா கோபித்துகொண்டு, மதுரையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 15-ந்தேதி வித்யாவுக்கு, கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த முரளி என்பவருடன் மூன்றாவதாக திருமணம் நடந்த தகவல் விஜய் போஸ்க்கு தெரியவந்தது. இது தொடர்பாக விஜய் போஸ் குடும்பத்தினர், வித்யா வீட்டிற்கு சென்று திருமணம் செய்தது குறித்து கேட்டுள்ளார்.

முதல் திருமணத்தை மறைத்த மனைவி; 3-வது திருமணத்தால் 2வது கணவர் அதிர்ச்சி..!

அப்போது இதைப்பற்றி கேட்டால், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக போலீசில் புகார் கொடுத்து விடுவோம். விஜய்போசை கத்தியால் குத்தி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விஜய் போஸ் புகார் செய்தார். அதன்பேரில் வித்யா, அவரது தந்தை சுகுமாறன், தாய் சித்ரா, தம்பி சரண்குமார் மற்றும் முரளி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் திருமணத்தை மறைத்து இன்ஜினியரை கரம் பிடித்த பெண், 3-வது திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்பு செய்திகள்

உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget