தேனி: 18ம் கால்வாய் பிடிஆர், தந்தை பெரியார் வாய்க்கால்களிலிருந்து 7714.90 ஏக்கர் பரப்பளவிற்கான தண்ணீர் திறப்பு
பெரியாறு அணையிலிருந்து 18 கால்வாய் பிடிஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால் ஆகியவையிலிருந்து ஒருபோக பாசன நிலங்களையும் பாசனத்திற்கான தண்ணீரை இன்று தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைத்தார் .
தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட பெரியாறு அணையிலிருந்து 18 கால்வாய் பிடிஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால் ஆகியவையிலிருந்து ஒருபோக பாசன நிலங்களையும் பாசனத்திற்கான தண்ணீரை இன்று தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைத்தார் .
தமிழக அரசின் உத்தரவுப்படி விவசாயம் மற்றும் வேளாண் பெருமக்களின் கோரிக்கைகளை ஏற்று 18-ஆம் கால்வாய் பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களில் ஒருபோக பாசன நிலங்களின் பாசனத்திற்காக தண்ணீரை திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று முதல் 18ஆம் கால்வாய் மற்றும் பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களில் ஒருபோக பாசன நிலங்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் 18ம் கால்வாய் திறந்து விடப்படும் தண்ணீர் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி ,பண்ணைப்புரம், கோம்பை, தேவாரம், சிந்தளைச் சேரி , சங்கராபுரம் ,வெம்பக்கோட்டை, பொட்டிபுரம் ,லட்சுமி நாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களை சுற்றியுள்ள 2045.35 ஏக்கர் பாசன நிலங்கள் மற்றும் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட மீனாட்சிபுரம், தொம்புச்சேரி ,கோடாங்கிபட்டி ஆகிய கிராமங்களை சுற்றியுள்ள 2568.90 ஏக்கர் பாசன நிலங்கள் என மொத்தம் 13 கிராமங்களை சுற்றி உள்ள 4614.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், இன்று முதல் 30 தினங்களுக்கு வினாடிக்கு 98 கன அடி வீதம் மொத்தம் 255 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அதேபோன்று பிடிஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால் திறந்து விடப்படும் தண்ணீர் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட சின்னமனூர், வேப்பம்பட்டி, சீப்பாலக்கோட்டை ஆகிய கிராமங்களை சுற்றியுள்ள 830 ஏக்கர் நிலங்களும் தேனி வட்டத்திற்குட்பட்ட சீலையம்பட்டி, பூமலைக்குண்டு, தருமாபுரி, தாடிச்சேரி, வெங்கடாசலபுரம், கொடுமையாள்பட்டி, கோவிந்த நகரம் மற்றும் பாலகிருஷ்ணபுரம் ஆகிய கிராமங்களை சுற்றி உள்ள 4316 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 15 கிராமங்களை சுற்றியுள்ள 5146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் இன்று முதல் 120 தினங்களுக்கு வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொருத்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
எனவே பதினெட்டாம் கால்வாய் பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை வேளாண் பெருங்குடி மக்கள் சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற்று பயனடைய வேண்டும் என தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்