தேனி: ஆண்டிப்பட்டி அதிமுக பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ்க்கு எதிராக திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
இடைத் தேர்தலில் தலைமை வழங்கிய பணத்தை கட்சி வேட்பாளர்களுக்கு செலவழிக்காமல் தனதும கன் வெற்றி பெற செலவழித்தவர் ஓபிஎஸ் - ஆண்டிப்பட்டி பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
கடந்த ஆட்சி காலத்தின் போது நடைபெற்ற இடைத் தேர்தலில் தலைமை வழங்கிய பணத்தைகட்சி வேட்பாளர்களுக்கு செலவழிக்காமல் தனதுமகன் வெற்றி பெற செலவழித்தவர் ஓபிஎஸ் என ஆண்டிப்பட்டி பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
தேனி: சின்னமனூர் அருகே பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி நகரில் அதிமு.க சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. வைகை அணை சாலைப்பிரிவில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆண்டிப்பட்டி தெற்கு, கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது,
தொண்டர்களின் விருப்பப்படியே இ.பி.எஸ் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதனை நீதிமன்றமே அங்கீகரித்து விட்டது. இதனை எதிர்த்து ஓ.பி.எஸ் நீதிமன்றத்தில் தொடுக்கும் வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். நிச்சயமாக இ.பி.எஸ்க்கு ஆதரவாக தான் தீர்ப்பு வரும்.
கடந்த அதிமு-.க ஆட்சிக்காலத்தின் போது 18 சட்டமன்ற தொகுதியின் இடைத் தேர்தலுக்காக கட்சித் தலைமை மூலம் வழங்கப்பட்ட பணத்தை ஓ.பன்னீர்செல்வம் ஆண்டிப்பட்டி தொகுதியில் முறையாக செலவழிக்கப்படவில்லை. மாறாக அவரது மகன் ரவீந்திரநாத் பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலுக்கு செலவு செய்தார். இதனால் தான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நின்று தொடர் வெற்றிகளை பெற்ற ஆண்டிப்பட்டி சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் தோல்வியுற்றார்.
"ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்பில் இருக்கக்கூடாதா? ஏன்? அதென்ன தடை செய்யப்பட்ட அமைப்பா?” : கொதித்த ஆளுநர்..
கடந்த சட்டமன்ற தேர்தலில் இ.பி.எஸ் 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்தார். ஆனால் தேனி மாவட்டத்திற்கு பக்கத்தில் இருக்கும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஓ.பி.எஸ் பிரசாரத்திற்குள் வரமறுத்துவிட்டார். அவரை பிரசாரத்துக்கு வரும்படி நானும், நத்தம் விசுவநாதனும் பலமுறை அழைத்தோம். இவ்வாறு அவர் பேசினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்