மேலும் அறிய

Crime: மனைவியின் முன்னாள் காதலன்.. சரமாரியாக குத்திக்கொலை செய்த கணவன் - தேனியில் நடந்தது என்ன?

தேனி அருகே மனைவியின் முன்னாள் கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி அருகே உள்ள மாரியம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீஸ்குமார் என்பவர் (வயது35). இவர் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். அவருடைய மனைவி மீனா (25). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மீனா தனது திருமணத்துக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த விக்ரம் என்ற சிவா (27) என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. விக்ரம், கட்டுமான கூலித்தொழிலாளராக இருந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.


Crime: மனைவியின் முன்னாள் காதலன்.. சரமாரியாக குத்திக்கொலை செய்த கணவன் - தேனியில் நடந்தது என்ன?

மனைவியிடம் தகராறு:

திருமணத்துக்கு பிறகு, தனது மனைவியின் காதல் விவகாரம் ஜெகதீஸ்குமாருக்கு தெரியவந்தது. இதனால் மீனாவிடம், ஜெகதீஸ்குமார் அடிக்கடி தகராறு செய்து  வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் விக்ரம் வீட்டுக்கு மீனா சென்றுள்ளார். தனது கணவருடன் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் அவர் விக்ரமிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை விக்ரம் குடும்பத்தினர் கண்டித்து அனுப்பியுள்ளனர்.

இதற்கிடையே தனது மனைவி அவரது முன்னாள் காதலன் வீட்டுக்கு சென்றது ஜெகதீஸ்குமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் விக்ரமை கொலை செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து ஜெகதீஸ்குமார் நேற்று முன்தினம் நள்ளிரவு விக்ரம் வீட்டுக்கு சென்றுள்ளார். திறந்து கிடந்த பின்வாசல் வழியாக வீட்டிற்குள் சென்று  அங்கு தூங்கிக்கொண்டிருந்த விக்ரமை தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து, விக்ரமின் மார்பு பகுதியில் சரமாரியாக ஜெகதீஸ்குமார் குத்தினார்.


Crime: மனைவியின் முன்னாள் காதலன்.. சரமாரியாக குத்திக்கொலை செய்த கணவன் - தேனியில் நடந்தது என்ன?

குத்திக்கொலை:

விக்ரமின் அலறல் சத்தம் கேட்டு அவரது சகோதரர் கவுதம் எழுந்தபோது அவரையும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு ஜெகதீஸ்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த விக்ரம், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பழனிசெட்டிபட்டி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் விக்ரம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கவுதம் கொடுத்த புகாரின் பேரில், பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தப்பி ஓடிய ஜெகதீஸ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தை கண்டித்து விக்ரமின் உறவினர்கள், மாரியம்மன் கோவில்பட்டியில், போடி, தேனி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கொலை செய்த ஜெகதீஸ்குமாருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

வத்திராயிருப்பில் ஆட்சியர் சுகபுத்ரா அதிரடி ஆய்வு: மக்கள் நலன் காக்க முக்கிய அறிவுரைகள்!
வத்திராயிருப்பில் ஆட்சியர் சுகபுத்ரா அதிரடி ஆய்வு: மக்கள் நலன் காக்க முக்கிய அறிவுரைகள்!
மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் 58 கால்வாய் மறுசீரமைப்புப் பணி !
மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் 58 கால்வாய் மறுசீரமைப்புப் பணி !
மதுரை அரசுப் பொருட்காட்சி: மக்கள் கூட்டம் அலைமோதுகிறது! பல லட்சம் வருவாய் ஈட்டி சாதனை!
மதுரை அரசுப் பொருட்காட்சி: மக்கள் கூட்டம் அலைமோதுகிறது! பல லட்சம் வருவாய் ஈட்டி சாதனை!
கொடைக்கானலில் உயர்மட்ட ரோப்வே: சுற்றுலாவுக்கு CMRL-ன் பிரம்மாண்ட திட்டம்!
கொடைக்கானலில் உயர்மட்ட ரோப்வே: சுற்றுலாவுக்கு CMRL-ன் பிரம்மாண்ட திட்டம்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget