மேலும் அறிய

வேலை வாய்ப்பற்ற 1,692 பேருக்கு ரூ.1¼ கோடி உதவித்தொகை - தேனி ஆட்சியர் அறிவிப்பு

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலை வாய்ப்புக்காக காத்திருபவர்கள் 1,692 பேருக்கு ரூ.1¼ கோடி உதவித்தொகை வழங்கப்படும்.

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலை வாய்ப்புக்காக காத்திருபவர்கள் 1,692 பேருக்கு ரூ.1¼ கோடி உதவித்தொகை  வழங்கப்படும் என்று தேனிஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு பதிவு செய்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருந்தால் 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

வேலை வாய்ப்பற்ற 1,692 பேருக்கு ரூ.1¼ கோடி உதவித்தொகை - தேனி ஆட்சியர் அறிவிப்பு

இத்திட்டத்தின் கீழ், காலாண்டுக்கு 10-ம் வகுப்பு தோல்வியான கல்வித்தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.600, 10ம் வகுப்பு தேர்ச்சி கல்வித்தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.900, பிளஸ்-2 கல்வித்தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.1,200, பட்டம் மற்றும் முதுகலை பட்டப்படிப்பை பதிவு செய்தவர்களுக்கு ரூ.1,800 என உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு கீழான கல்வித்தகுதியை பதிவு செய்தவர்களுக்கு காலாண்டுக்கு ரூ.1,800, பிளஸ்-2 கல்வித்தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.2,250, பட்டம் மற்றும் முதுகலை பட்டப்படிப்பை பதிவு செய்தவர்களுக்கு ரூ.3 ஆயிரம் என உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் கடந்த 5 காலாண்டு கால கட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகையாக மொத்தம் 1,692 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 27 லட்சத்து 32 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை பெற விரும்பும் தகுதியான நபர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
மதுரை அரசுப் பள்ளியில் கொடியேற்றினாரா த.வெ.க., நிர்வாகி? - பூதாகரமாக வெடிக்கும் சர்ச்சை !
மதுரை அரசுப் பள்ளியில் கொடியேற்றினாரா த.வெ.க., நிர்வாகி? - பூதாகரமாக வெடிக்கும் சர்ச்சை !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Embed widget