மேலும் அறிய

Theni : ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்த் உடல்.. சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்!

அருணாச்சலப் பிரதேசில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த மேஜர் ஜெயந்த் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அருணாச்சல பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த மேஜர் ஜெயந்த் உடல் நேற்று முன் தினம் இரவு 12.20 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது .

அருணாசல பிரதேசம் மாண்டல பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த இராணுவ வீரர்கள் லெப்ட்டினன்ட் கர்னல் வி.வி.பி.ரெட்டி, மேஜர் ஜெயந்த் ஆகியோரின் உடல் தலைநகர் திசாப்பூரில் அஞ்சலி செலுத்தப்பட்டு விமானப்படை விமானம் மூலம் லெப்ட்டினன்ட் கர்னல் வி.வி.பி.ரெட்டி உடல் நேற்று முன் தினம் காலை 9.40 மணிக்கு ஐதாராபாத் விமான நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Theni : ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்த் உடல்.. சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்!

பின்னர் மேஜர் ஜெயந்த் உடலுடன் இரவு 10.20 மணிக்கு ஜதராபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு  இரவு 12. 20 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.  மதுரை விமானநிலையத்தில் சூலூர் 35வது ரைபில் ரெஜிமண்ட் ( துப்பாக்கி படை)யினர் மேஜர் ஜெயந்த் உடலை இறுதி அஞ்சலி செலுத்தி எடுத்து வந்தனர்.

 தமிழக அரசு சார்பில் வணிகவரித்துறை அமைச்சர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இறுதி அஞ்சலிக்கு பின் மேஜர் ஜெயந்த் உடல் மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.  மேலும் நேற்று முன் தினம் காலை 7 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலம் கொண்டு வரப்பட்டது.

Theni : ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்த் உடல்.. சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்!

அருணாசலபிரதேசம் மாண்டலா பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த லெப்ட்டினன்ட் கர்னல் வி.வி.பி.ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்தின் உடல் தலைநகர் திசாப்பூரில் உள்ள இராணுவ மையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு விமானப்படை விமானம் மூலம் அவர்களது சொந்த ஊரான லெட்டினன்ட் கர்னல் ரெட்டி உடல் ஐதராபாத் கொண்டு செல்லப்ப்பட்டு அங்கிருந்து தெலுங்கானாவில் உள்ள ஏடாட்ரி பகுதிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

இதேபோல் தமிழகத்தை சேர்ந்த மேஜர் ஜெயந்த்-ன் உடல் அதே விமானம்  மூலம் மதுரை கொண்டு வரப்பட்டு. மதுரை விமான நிலையத்தில் மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் அணிஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் சிங் சித், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் யாதவ்  மதுரை மாநகர் வடக்கு காவல் துணை ஆணையர் அரவிந்தன், மதுரை விமான நிலைய இயக்குநர் கணேசன், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன். மற்றும் முக்கிய பிரமுகர்கள் இறுதி அஞ்சலிக்கு பின் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு மீண்டும் நேற்று முன் தினம் காலை 7 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு  பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

Theni : ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்த் உடல்.. சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்!

ராணுவ வீரர் ஜெயந்த் உடலுக்கு அவரது சொந்த ஊரானா தேனி மாவட்டம் பெரியகுளம் ஜெயமங்கலம் பகுதியில்  அமைச்சர் ஐ பெரியசாமி , பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மாவட்ட ஆட்சித் தலைவர் சுஜிவனா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கிரி மற்றும் அவரது குடும்பத்தினர். பொதுமக்கள் , முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் மரணம் அடைந்த ராணுவ வீரர் ஜெயந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ராணுவ வீரர் ஜெயந்தின் உடல் நேற்று ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்று பொது மயானத்தில் வைத்து இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு 7 ராணுவ வீரர்கள் 3 ரவுண்டுகளாக   21 குண்டுகள் முழங்க மரணம் அடைந்த ஜெயந்தின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகனான இவர் கடந்த 12 ஆண்டுகளாக ராணுவத்தில் சேர்ந்து தற்பொழுது மேஜராக பணியாற்றி வந்துள்ளார்.  ராணுவ வீரர் ஜெயந்த் உயிரிழந்த சம்பவம்  அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்களிடையே  மிகுந்த  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Theni : ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்த் உடல்.. சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்!

வீரமரணம் அடைந்த ஜெயந்த்-ன் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு 36 ராணுவ வீரர்கள் சேர்ந்து மரணம் அடைந்த ராணுவ வீரர் ஜெயந்த்-ன் உடலில் தேசியக்கொடி போற்றி முழு அரசு மரியாதை செய்தனர் . அதனைத் தொடர்ந்து ஜெயந்த்-ன் உடலில் போர்த்திருந்த தேசியக் கொடியை ராணுவ வீரர்கள் அவரது மனைவியிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தேனி மாவட்ட மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget