மேலும் அறிய

’தமிழகத்தின் செயல்பாடுகளை பார்த்து ஒட்டுமொத்த நாடே பாராட்டுகின்றது’ - உதயநிதி ஸ்டாலின் !

உதயநிதி ஸ்டாலின் கூடிய விரைவில் அமைச்சராக உள்ளார் ! உதயநிதி ஸ்டாலினின் தொண்டனாக அவர் நினைப்பதை நாங்கள் நிறைவேற்றுவோம் - அமைச்சர் மூர்த்தி பேச்சு

மதுரை ஆனையூர் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான முத்தரையர் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் தனி விமானம் மூலம் வந்து கலந்து கொண்டார். இந்த விழாவிற்காக பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதற்காக மதுரை மாவட்டம் முழுவதும் இருந்து திமுக தொண்டர்கள் வந்திருந்தனர். பின்னர் ஆணையூர் பகுதிக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் சிலையை திறந்து வைத்துவிட்டு மேடைக்கு வந்து மேடையின் மீது இருந்த மற்றொரு காட்சி சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது சரியான ஸ்டூல் இல்லாததால் அச்சப்பட்டு உதயநிதி ஸ்டாலின் முதலில் மாலை அணிவிக்க ஏறாமல் மறுத்தனர், பின்னர் அமைச்சர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் பிடித்துக்கொள்ள அவர் மேலே ஏறி மாலை அணிவித்தார். பின்னர் உதயநிதி ஸ்டாலினுக்கு செங்கோல் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பள்ளி கல்லூரிகளில் மகேஷ் மெய்யாமொழி,  சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகிய மூன்று அமைச்சர்களும் உடன் இருந்தனர்.


’தமிழகத்தின் செயல்பாடுகளை பார்த்து ஒட்டுமொத்த நாடே பாராட்டுகின்றது’ - உதயநிதி ஸ்டாலின் !

 

மேடையில் பேசிய அமைச்சர் பி.மூர்த்தி ”இன்னும் சில நாட்களில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்பார். எங்களை அமைச்சாரக்கியவர் உதயநிதி ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினின் தொண்டனாக அவர் நினைப்பதை நாங்கள் நிறைவேற்றுவோம். ஸ்டாலின் உத்தரவை போல உதயநிதியின் பேச்சிற்கும் நாங்கள் கட்டுப்படுவோம்.  உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டை வழிநடத்த தகுதியான தலைவராக உள்ளார். எந்த இயக்கத்திலும் இல்லாத வகையிலான இளைஞர் உதயநிதி. உதயநிதி ஸ்டாலினோடு யாரும் ஒப்பிட்டு பார்க்க இயலாது, அமைச்சர் பொறுப்பை ஏற்க உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு என வாழ்த்துக்கள்” என்றார்.


’தமிழகத்தின் செயல்பாடுகளை பார்த்து ஒட்டுமொத்த நாடே பாராட்டுகின்றது’ - உதயநிதி ஸ்டாலின் !

தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ”மதுரை என்றாலே மகிழ்ச்சி அன்பு பாசம் மட்டும் தான். முத்தரையர் சிலை திறப்பு விழாவிற்கு வருகைதரும்போது உற்சாக வரவேற்பு அளித்தனர். உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை மதுரை மாநகர மக்கள் தந்தமைக்கு நன்றி. என்னை முதன்முதலாக மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேடையில் ஏறி பேசினேன். முத்தரையரை போன்று நாடாளுமன்ற, சட்டமன்றம், நகர்புற உள்ளாட்சி என தொடர்ந்து வெற்றியை பெற்றவர் ஸ்டாலின். கருணாநிதியின் பேரனாக , ஸ்டாலினின் மகனாக இங்கு வந்து சிலையை திறந்துவைத்துள்ளேன்.


’தமிழகத்தின் செயல்பாடுகளை பார்த்து ஒட்டுமொத்த நாடே பாராட்டுகின்றது’ - உதயநிதி ஸ்டாலின் !

5 மாதத்திற்கு முன்பே என்னிடம் சொல்லி அனுமதி வாங்கியிருந்தார். அதிமுக ஆட்சி இந்த சிலையை திறக்கவிடாமல் தடுத்தனர் அதையும் மீது நாம் திறந்துள்ளோம் அது உங்களுக்கான வெற்றி. திமுக அரசின் நிதி பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டையும், தமிழகத்தின் செயல்பாடுகளையும் பார்த்து ஒட்டுமொத்த நாடே பாராட்டுகின்றது. நம்பர் - 1 முதல்வராக ஸ்டாலின் உருவாகியுள்ளார். உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறு ஏதும் செய்யாமல் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்” என கூறினார். அதை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி கட்சியின் இளைஞர் அணிக்கு 10 லட்ச ரூபாய் நிதி கொடுத்தார்.

இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - வார்த்தை ஜாலத்தால் எழுதப்பட்ட பகல் கனவு பட்ஜெட் - தமிழ்நாடு பட்ஜெட் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget