கோவை : கஞ்சாவுக்கு அடிமையானதால் விபரீதம் : கடத்தப்பட்ட டிக்டாக் சிறுமிகள் திண்டுக்கல்லில் மீட்பு
கோயம்பத்தூரிலிருந்து காணாமல் போன சிறுமிகள் திண்டுக்கல்லில் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுமிகளிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை போலிசார் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம் துடியலூர் பகுதியை சேர்ந்தவர்கள் சூரியா, இமானுவேல் மற்றும் கோகுல்ராஜ். ஆகிய மூன்று பேரும் நண்பர்கள், இவர்களுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கமான இதே பகுதியை சேர்ந்த 17 வயதுக்கு உட்பட்ட 3 சிறுமிகளை காதல் வலையில் விழவைத்துள்ளனர், காதல் வலையில் விழுந்த மூன்று சிறுமிகளுக்கும் கஞ்சா போதை கற்றுக்கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கடந்த மாதம் 27-ஆம் தேதி கடை வீதிக்கு சென்ற சிறுமிகளை நீண்ட நேரமாக வீடு திரும்பாத நிலையில், பெற்றோர்கள் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இன்னிலையில் சூர்யாவின் தம்பி ஆல்பர்ட் மில்டனிடம் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் கோவையிலிருந்து காணாமல் போன சிறுமியில் ஒருவர், திடீரென துடியலூர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். காவல் நிலையத்திற்கு வந்த சிறுமியிடம் விசாரணை செய்த போலீசார் அவர்களது செல்போன் டவரை ட்ராக் செய்து பார்த்தபோது அவர்கள் திண்டுக்கல்லில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து திண்டுக்கல் தோமையார்புரம் பகுதிக்கு விரைந்து வந்து போலீசார், அப்பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா என்பவர் வீட்டில் கோவையிலிருந்து வந்த சிறுமிகள் மற்றும் அவர்களுடன் வந்த 2 இளைஞர்கள் இருப்பது கண்டு, அவர்களை மீட்க முயன்ற போது காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். சிறுமிகள் இருந்த வீட்டின் உரிமையாளர் திண்டுக்கல்லை சேர்ந்த முஹம்மது அலி ஜின்னா உப்பட நான்கு பேரை பிடித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை அடுத்து ஊரடங்கு விதிகள் கடுமையாக அமலில் இருக்கும் நிலையில் போலீசாரின் வாகன சோதனையை மீறி சிறுமிகளுடன் இரண்டு சக்கர வாகனத்தில் வந்தது தெரியவந்தது, விசாரணைக்கு பின்னர் துடியலூரைச் சேர்ந்த சூர்யா, இமானுவேல் மற்றும் முகமது அலி ஜின்னா, ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களுடன் வந்த ஒரு சிறுமியை மீட்டனர்.
அங்கிருந்த மற்றொரு சிறுமியுடன் கோகுல்ராஜ் என்பவருடன் தப்பி ஓடினார். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா போதைக்கு சிறுமிகளை அடிமையாக்கி கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய சிறுமி உட்பட சிறுமிகள் டிக்டாக் போன்ற வீடியோக்களில் கையில் சிகரெட்டுடன் டிக்டாக் வீடியோக்கள் வெளியிட்டுள்ளனர் என்பதை மீட்கப்பட்ட சிறுமி செல்போனிலிருந்து திண்டுக்கல் போலீசார் கண்டறிந்தனர்.