திண்டுக்கல்லில் 43 பேர், தேனியில் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு! உயிரிழப்புகள் இல்லை!
தேனி, திண்டுக்கல் இரண்டு மாவட்டங்களிலும் தொடர்ந்து குறையும் கொரோனா. உயிரிழப்புகள் எதுவும் இல்லை.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 43 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31524-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் இன்று மட்டும் 46நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 30633-ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 583 இருக்கிறது. தற்போது 308 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அதே போல் தேனி மாவட்டத்தில் இன்று மட்டும் 53நபர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42227 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் இன்று மட்டும் 102 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 41225-ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரையில் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 488 ஆக இருக்கிறது. இன்று 514 நபர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் தேனி மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரத்தை பொறுத்தவரையில் தேனி, திண்டுக்கல் இரு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் தொடர்ந்து இறங்கு முகமாகவே உள்ளது. ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் கொடுக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் ஊரடங்கு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டுமென்றும். இல்லாவிடில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க கூடும் நிலை உருவாகும் என மருத்துவ துறையினரும் , சுகாதாரத்துறையினரும் தெரிவிக்கின்றனர்.