மேலும் அறிய

பங்குனி மாத கார்த்திகை உற்சவம்.. பழனி முருகன் கோவிலில் நேற்று முதல் சிறப்பு பூஜை..!

பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதன்படி, பங்குனி மாத கார்த்திகை உற்சவத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதன்படி, பங்குனி மாத கார்த்திகை உற்சவத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.

WPL Final: காத்திருக்கும் கோப்பை.. முத்தமிடப்போவது யார்? டெல்லி-மும்பை இறுதிப்போட்டியில் இன்று களம்..!

பங்குனி மாத கார்த்திகை உற்சவம்.. பழனி முருகன் கோவிலில் நேற்று முதல் சிறப்பு பூஜை..!

அதன்படி, அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரம், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரம் நடந்தது. 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

LVM3 Rocket Launch: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எல்.வி.எம். 3 ராக்கெட்..! 36 செயற்கை கோள்களுடன் பயணம்..!

பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் முருகப்பெருமான் ராஜஅலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

கார்த்திகை உற்சவத்தையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால் அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பங்குனி மாத கார்த்திகை உற்சவம்.. பழனி முருகன் கோவிலில் நேற்று முதல் சிறப்பு பூஜை..!

உற்சவ விழாவையொட்டி மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 7 மணிக்கு சின்னக்குமாரர் தங்கரதத்தில் எழுந்தருளி புறப்பாடு நடந்தது. இதில் 190 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி கலந்துகொண்டனர். தங்கரதத்தில் உலா வந்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 வெயிலின் தாக்கத்தை தணிக்க தொடங்கியது தர்பூசணி சீசன் - தேனியில் களைகட்டும் விளைச்சல

அதேபோல் நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி மாத கார்த்திகையையொட்டி சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு பால், பழம், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை காட்டப்பட்டது.

Parrot witness: கொலையாளியை காட்டிக் கொடுத்த கிளி.. 2 பேருக்கு ஆயுள் தண்டனை - சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்
பங்குனி மாத கார்த்திகை உற்சவம்.. பழனி முருகன் கோவிலில் நேற்று முதல் சிறப்பு பூஜை..!

இதில், திண்டுக்கல், நத்தம், துவரங்குறிச்சி, சாணார்பட்டி, செந்துறை, கோபால்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் அருகில் உள்ள காமாட்சி மவுனகுரு ஜீவசமாதி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு கோவில் மண்டப வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி மாத கார்த்திகை உற்சவத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget