மேலும் அறிய
Sivagangai ; இளையான்குடியில் குப்பை கொட்டினால் 'செய்வினை': வினோத எச்சரிக்கை பலகை!
இளையான்குடியில் வினோத எச்சரிக்கை பலகை; குப்பை கொட்டுவோர் மீது 'செய்வினை' எச்சரிக்கை.

குப்பை கொட்டினால் அவ்வளவு தான்
Source : whatsapp
பொதுமக்கள் குப்பைகளை பொது இடங்களில் கொட்டாமல், உள்ளாட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள முறையில் அகற்றுவதன் மூலம் சுத்தமான சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
வினோதமான எச்சரிக்கை பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பாரதியார் தெருவில், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வினோதமான எச்சரிக்கை பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், "குப்பை கொட்டினால் செய்வினை செய்யப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இளையான்குடி பகுதியில் குப்பை கொட்டும் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் சிலர் தொடர்ந்து குப்பைகளை கொட்டி செல்வதால், சுகாதார சீர்கேடு மற்றும் துர்நாற்றம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குப்பை கொட்டிச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது
இதனைத் தடுக்க பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், சிலர் தொடர்ந்து விதிமீறி குப்பை கொட்டுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே யாரோ ஒருவர் வினோதமான முறையில் இந்த எச்சரிக்கை பலகையை வைத்திருப்பதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். இருப்பினும், அந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் சிலர் தொடர்ந்து குப்பை கொட்டிச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த பலகை தற்போது அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. பொதுமக்கள் குப்பைகளை பொது இடங்களில் கொட்டாமல், உள்ளாட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள முறையில் அகற்றுவதன் மூலம் சுத்தமான சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
Before You Go
SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















