மேலும் அறிய
சீமான் கேள்வி: அணில் ஏன் 'அங்கிள்' என கத்துகிறது? விஜய் பேச்சுக்கு பதிலடி! NTK மாநாடு அறிவிப்பு!
ஒரு மாநாட்டு உரை என்பது எப்படி இருக்கும் என்பதை அப்போது பாருங்கள் என நாம் தமிழர் கட்சி மாநாடு குறித்து அறிவிப்பை வெளியிட்ட சீமான்.

சீமான்
Source : whats app
அணில் ஏன் UNCLE, UNCLE என கத்துகிறது, JUNGLE JUNGLE என்று தானே கத்த என மீண்டும் தவெக விமர்சனம் செய்த நாதக சீமான்.
மதுரையில் சீமான் செய்தியாளர் சந்திப்பு
மதுரை ஆனையூர் பகுதியில் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டில் விஜயின் பேச்சை மூத்த தலைவர்கள் விமர்ச்சிக்கிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான்..,"அணில் ஏன் UNCLE, UNCLE என கத்துகிறது, JUNGLE JUNGLE என்று தானே கத்த வேண்டும். கடந்த மாநாட்டில் CM சாராக இருந்தவர் இந்த மாநாட்டில் எப்படி அங்கிளாக எப்படி மாறினார். மதுரை அதிமுக யார் கையில் இருக்கிறது என்பதை கேட்கும் விஜய் ஏன்? அதிமுக ஆட்சியில் இருக்கும் போது கேட்கவில்லை.
திருச்சியில் நாங்கள் நடத்தும் மாநாட்டை பாருங்கள்
திருச்சியில் பிப்ரவரி 7ஆம் தேதி நாம் தமிழர் கட்சி மாநாடு நடைபெறவுள்ளது - சீமான் அறிவிப்பு மாநாடு என்றால் எப்படி நடத்த வேண்டும் ? என வரும் பிப்ரவரி 7ஆம் தேதி திருச்சியில் நாங்கள் நடத்தும் மாநாட்டை பாருங்கள் அதில் எத்தனை லட்சம் பேர் கூடுகிறார்கள் என பாருங்கள் ஒரு மாநாட்டு உரை என்பது எப்படி இருக்கும் என்பதை அப்போது பாருங்கள் என நாம் தமிழர் கட்சி மாநாடு குறித்து அறிவிப்பை வெளியிட்ட சீமான்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















