மேலும் அறிய

திண்டுக்கல்லில் இலவச மடிக்கணினி வழங்கிய அமைச்சர்! திமுக ஆட்சி மீண்டும் வருமா? பரபரப்பு பேட்டி!

எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக தமிழக முதலமைச்சர் மீண்டும் வெற்றி பெறுவார். ஏழாவது முறையாக திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் - அமைச்சர் சக்கரபாணி பேட்டி. 

திண்டுக்கலில் அரசு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் மடிக்கணினி வழங்கினார் அமைச்சர் சக்கரபாணி.  தமிழ்நாடு முதலமைச்சர் அரசு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியை காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எம்விஎம் அரசு கல்லூரியில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கினர். 


திண்டுக்கல்லில் இலவச மடிக்கணினி வழங்கிய அமைச்சர்! திமுக ஆட்சி மீண்டும் வருமா? பரபரப்பு பேட்டி!

அதனைத் தொடர்ந்து அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, முதல் கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க உள்ளது. திண்டுக்கல்லில் மட்டும் 2321 பேருக்கு மடிக்கணினி வழங்க இருக்கிறது.‌ புதுமைப்பெண், நான் முதல்வன் போன்ற திட்டங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பல மாணவர்கள் போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வெற்றி பெறுகின்றனர். தமிழக முதல்வர் காணொளியில் பேசியபோது, மாணவர்கள் அனைவரும் மடிக்கணினி மூலம் நல்ல முறையில் வெற்றி பெற வேண்டும், அதேபோல் தேர்தலில் நானும் வெற்றிபெற்று, இருவரும் சேர்ந்து தமிழ்நாட்டை நல்ல முறையில் கொண்டு செல்வோம் என்றார். 

தேர்தல் நெருங்கி வருவதால் தான் மடிக்கணினி, பொங்கல் பரிசு போன்றவை வழங்குகிறார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார் என்ற கேள்விக்கு,கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து மக்கள் தவித்த போது, அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் அவர்கள் ஒரு குடும்பத்திற்கு 5000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அன்று முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி வெறும் ஆயிரம் ரூபாய் வழங்கினார். 


திண்டுக்கல்லில் இலவச மடிக்கணினி வழங்கிய அமைச்சர்! திமுக ஆட்சி மீண்டும் வருமா? பரபரப்பு பேட்டி!

ஆனால், திமுக  ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்பு 2021,22,23 ஆகிய காலங்களில் பொங்கல் பரிசு கொடுத்து வந்தோம். கடந்த ஆண்டு மட்டுமே கொடுக்கவில்லை அதற்கும் சேர்த்து ‌ இந்த ஆண்டு 3000 ரூபாயாக வழங்குகிறோம். மேலும் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் வேட்டி சேலைகளும் வழங்க இருக்கிறோம். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 23 ஆண்டு கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றி உள்ளார். குழந்தைகள் பெண்கள் விவசாயிகள் தொழிலாளர்கள் போன்ற அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து திமுக ஆட்சி நடந்தி வருகிறது.‌

விஜய் குறித்த கேள்விக்கு, தேர்தலை சந்திக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம். பல்வேறு தியாகங்கள் போராட்டங்கள் செய்து பேரறிஞர் அண்ணா தந்தை பெரியார், கலைஞர் அனைவரும் 75 ஆண்டுகளாக ஆட்சியமைத்து வந்திருக்கிறோம். அவர்களும் மக்களை சந்திக்கட்டும் மக்கள் தீர்ப்பு என்றார்‌.‌ எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மீண்டும் வெற்றி பெறுவார். ஏழாவது முறையாக திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். திண்டுக்கல்லில் இருக்கின்ற ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் திராவிட அரசு கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

தாமிரபரணி ஆறு மாசுபடுத்துபவர்களுக்கு அபராதம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தாமிரபரணி ஆறு மாசுபடுத்துபவர்களுக்கு அபராதம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சீமைக்கருவேல அகற்றும் இடங்களில் நாட்டு மரங்கள்: உயர் நீதிமன்றம் அதிரடி முடிவு!
சீமைக்கருவேல அகற்றும் இடங்களில் நாட்டு மரங்கள்: உயர் நீதிமன்றம் அதிரடி முடிவு!
விஜய் ஆண்டனி, பிரசாந்த் தொடங்கி வைத்த அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை: மதுரைக்கு புதிய மைல்கல்!
விஜய் ஆண்டனி, பிரசாந்த் தொடங்கி வைத்த அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை: மதுரைக்கு புதிய மைல்கல்!
பழனி தண்டபாணி மடம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
பழனி தண்டபாணி மடம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Aadi Perukku Registration : ஆடிப்பெருக்கில் பத்திர பதிவு செய்ய திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு பதிவுத்துறை அசத்தல் அறிவிப்பு
ஆடிப்பெருக்கில் பத்திர பதிவு செய்ய திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு பதிவுத்துறை அசத்தல் அறிவிப்பு
Nexon Rival: நெக்ஸானுக்கு போட்டியாக 25KM மைலேஜில் வரும் புது எஸ்யுவி - மினிமம் பட்ஜெட், மேக்ஸிமம் அம்சங்கள்
நெக்ஸானுக்கு போட்டியாக 25KM மைலேஜில் வரும் புது எஸ்யுவி - மினிமம் பட்ஜெட், மேக்ஸிமம் அம்சங்கள்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
Embed widget