விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது மதுரை பெரியார் பேருந்து நிலையம்!
பெரியார் பேருந்து நிலைய பணிகள் 95 % நிறைவு- விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என பேருந்து நிலைய பணிகளை ஆய்வு செய்து நகராட்சி நிர்வாக இயக்குநர் பேட்டி.
மதுரையில் 1200கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரியார் பேருந்து நிலையம் மேம்படுத்துதல், குன்னத்தூர் சத்திரம், வைகை ஆற்றை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அம்ருத் திட்டத்தின் கீழ் முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையன் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது 159 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை பெரியார்பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகள் மற்றும் கார் மற்றும் இருசக்கர வாகன நிறுத்தங்கள் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை மற்றும் 57பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
அதனைத் தொடர்ந்து மேலவாசல் பகுதியில் கட்டப்படும் முல்லைப்பெரியாறு குடிநீர் தேக்க தொட்டி கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் மற்றும் நகர பொறியாளர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். அதனைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையன் செய்தியாளர்களிடம்...,” மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பெரியார் பேருந்து நிலைய பணிகள் 95 % நிறைவடைந்து உள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு பெரியார் பேருந்து நிலையம் கொண்டு வரப்பட உள்ளது. மதுரை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி கீழ் பணிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. மதுரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நல்ல முறையில் நடைபெற்று வருகின்றன.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - கீழடியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு...!
கால்நடைகள் சாலைகளில் திரிவதை கட்டுப்படுத்த அந்தந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி பெரியார் பேருந்து நிலைய பணிகள் நடைபெறுகின்றன. பேருந்து நிலைய பணிகளில் எந்த மாற்றம் இல்லை. நான்கு அல்லது ஐந்து மாதங்களில் முழுமையாக பணிகள் நிறைவடையும். மதுரையில் 328 சாலைகள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
'சென்னை கோப்பையை வெல்லும் என்பது கோலிக்கு முன்பே தெரியும்...’ சீனிவாசன் சொன்ன ரகசியம்!#kohli #srinivasan #csk #dhonihttps://t.co/N1bYCaMr2y
— ABP Nadu (@abpnadu) November 20, 2021
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!