மேலும் அறிய

மதுரைக்கு இரட்டை வளர்ச்சிப் பரிசுகள்: புதிய அலுவலகம், திடக்கழிவு நிலையம் திறப்பு!

திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் வகையில், தத்தனேரி மற்றும் கோச்சடை பகுதிகளில் ரூ.19.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 2 புதிய திடக்கழிவு இடமாற்றும் நிலையங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டது.

ரூ.4.06 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலகப் புதிய கட்டடம் மற்றும் ரூ.19.90 கோடி மதிப்பீட்டில் மதுரை மாநகராட்சி தத்தனேரி மற்றும் கோச்சடையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட திடக்கழிவு இடமாற்றும் நிலைத்தை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் திறந்து வைத்தார்.

 
ரூ.4.06 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வட்டாசியர் அலுவலகம் 
 
மதுரை மாவட்டம், சின்ன சொக்கிகுளத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ.4.06 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலகக் கட்டடத் திறப்பு விழா இன்று (22.08.2026) நடைபெற்றது. இவ்விழாவிற்கு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, தலைமை வகித்தார். எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கலந்துகொண்டு புதிய அலுவலகக் கட்டடத்தைத் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அ.கல்லாணை, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.கோபிசன், மதுரை மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன் மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
தத்தனேரி மற்றும் கோச்சடையில் இரண்டாம் கட்ட திடக்கழிவு இடமாற்றும் நிலையம்
 
​ பொதுப்பணித்துறை மூலம் 1,252 சதுர மீட்டர் பரப்பளவில் அனைத்து நவீன உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளுடன் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் விசாலமான காத்திருப்பு அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக வசதிகள் மற்றும் கோப்புப் பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்புதிய அலுவலகம் மூலம் மதுரை வடக்கு வட்டாரப் பொதுமக்களுக்குப் பட்டா மாறுதல், சாதி மற்றும் வருமானச் சான்றிதழ்கள், சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு வருவாய்த்துறை சேவைகள் விரைவாகவும் தடையின்றியும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ரூ.19.90 கோடி மதிப்பீட்டில் மதுரை மாநகராட்சி தத்தனேரி மற்றும் கோச்சடையில் இரண்டாம் கட்ட திடக்கழிவு இடமாற்றும் நிலையம்.
 
தத்தனேரி மற்றும் கோச்சடை 2 புதிய திடக்கழிவு இடமாற்றும் நிலையங்கள்
 
மதுரை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் வகையில், தத்தனேரி மற்றும் கோச்சடை பகுதிகளில் ரூ.19.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 2 புதிய திடக்கழிவு இடமாற்றும் நிலையங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இம்மையங்கள் மூலம் 51 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் நவீன இயந்திரங்களின் உதவியுடன் அழுத்தப்பட்டு, நாளொன்றுக்கு மொத்தம் 400 டன் வரை வெள்ளக்கல் திடக்கழிவு மேலாண்மை மையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படும். இதன் மூலம் மாநகரப் பகுதிகளில் குப்பைகள் தேங்குவது தவிர்க்கப்பட்டு, தூய்மையான மற்றும் சுகாதாரமான மதுரை மாநகரை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.​ இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் க.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் ஜெய்னுலாப்தீன், ராஜாராம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பார்த்திபன், மதுரை வருவாய் கோட்டாட்சியர் கருணாகரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்(பொ) காமராஜ்,  வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் விடுதலை: அடுத்த கட்ட நடவடிக்கை தீவிரம்!
இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் விடுதலை: அடுத்த கட்ட நடவடிக்கை தீவிரம்!
நெல்லை கூத்தன்குளம் பறவைகள் சரணாலயம்: கல்குவாரிக்கு தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி!
நெல்லை கூத்தன்குளம் பறவைகள் சரணாலயம்: கல்குவாரிக்கு தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி!
Madurai HC ; மலைகளை விட மதுக்கடைகள் முக்கியமா? - நீதிபதிகள் கேள்வி !
Madurai HC ; மலைகளை விட மதுக்கடைகள் முக்கியமா? - நீதிபதிகள் கேள்வி !
Sivagangai : அக்டோபர்-10 காரைக்குடியில் 10,000+ தனியார்துறை வேலைவாய்ப்புகள்!
Sivagangai : அக்டோபர்-10 காரைக்குடியில் 10,000+ தனியார்துறை வேலைவாய்ப்புகள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget