செல்லூரில் அரை கி.மீ., தூரத்துக்கு கொட்டப்படும் கழிவுகள் - குப்பை மேடாக மாறிய மதுரை மாநகராட்சி சாலை
மதுரை மாநகராட்சி 27வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைந்துள்ள சாலையிலேயே இந்த நிலை உருவாகியுள்ளது மாநகராட்சி அதிகாரிகளின் செயல்பாடுகளை கேள்வி எழுப்பி உள்ளது.
மதுரை செல்லூரில் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு இறைச்சி, கண்ணாடி கழிவுகள் கொட்டப்படும் குப்பை மேடாக மாறிய மாநகராட்சி சாலை - சிரமத்திற்கு ஆளாகும் பள்ளி மாணாக்கர்கள் - நடவடிக்கை எடுக்குமா? மாநகராட்சி.
மதுரை மாநகராட்சி 27வது வார்டுக்கு உட்பட்ட ஜீவா நகர் மற்றும் காமராஜர் நகர் 2வது தெரு சந்திப்பு குதிரைப்பாலம் சாலையில் முழுவதுமாக குப்பைகள் கொட்டப்பட்டு அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு குப்பைமேடாக மாறி உள்ளது. அதே பகுதியில் அரசு உதவிபெறும் 3 மேல்நிலைப்பள்ளிகள் உள்ள நிலையில் அங்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் அந்த சாலைகளை கடந்து செல்லும் மூக்கை பிடித்துக் கொண்டு நடந்து செல்லும் அளவிற்கு கடுமையான துர்நாற்றம் வீசிவருகிறது.
அந்த சாலை முழுவதுமாக செல்லூர் பகுதிகளில் சேகரிக்கப்படக்கூடிய குப்பைகளை கொண்டு வந்து குப்பை வண்டிகள் மூலமாக கொட்டப்படுவதாலும் போதிய குப்பை தொட்டிகள் இல்லாத நிலையில் குப்பைகளை அதே பகுதியில் சாலைகளில் போட்டு செல்வதாலும் சாலை முழுவதும் வாகனங்கள் கூட செல்ல முடியாத குப்பை சாலையாக மாறியுள்ளது. சாலைகளில் இறைச்சிக்கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள், மருத்துவக்கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்பட்டு அந்தப்பகுதி முழுவதிலும் கடுமையான துர்நாற்றம் வீசிவருகிறது. மேலும் கண்ணாடி பாட்டில்கள் உடைந்து அதன் மூலமாக மாணாக்கர்கள் பொதுமக்களுக்கு கால்களில் காயம் ஏற்படும் நிலை உள்ளது.
மேலும் அந்த பகுதிக்கான சாலையை தற்பொழுது குப்பை சாலை என்று பொதுமக்கள் அழைக்கும் அளவிற்கு நீண்ட நாட்களாக இதே நிலை நீடித்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குப்பைகளில் உள்ள ப்ளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் மூடிகள், பிளாஸ்டிக் பைகளில் கடந்த வாரம் பெய்த மழைநீரும் தேங்கி இதில் கொசுக்கள் உற்பத்தியாவதால் அந்த பகுதியில் சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு காய்ச்சல், வாந்தி போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அந்தப் பகுதியில் செல்லக்கூடிய மழை நீர் வடிகாலில் கட்டப்பட்டுள்ள பாலத்திலும் முழுவதிலும் குப்பைகளாக கொட்டப்பட்டுள்ளது அதேபோன்று சேகரிக்கப்பட்ட கூடிய குப்பைகள் முழுவதிலும் மழைநீர் வடிகாலிலும் கொட்டப்படுவதால் மழைநீர் வடிகாலிலும் முழுவதுமாக அடைப்பு ஏற்பட்டுவருகிறது. இது போன்ற பிரச்னைகளால் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற முடியாமல் குடியிருப்புகளுக்குள் செல்லும் நிலை ஏற்படும், இது தொடர்பாக அந்த பகுதி பகுதி மக்கள் பல முறை மாநகராட்சிக்கு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் இதே நிலை தொடர்ந்துவருகிறது.
அந்த சாலையை கடந்து செல்லக்கூடிய ஒவ்வொருவரும் மூக்கை பிடித்துக்கொண்டு செல்வதோடு, பெரும்பாலான மக்கள் துர்நாற்றத்திற்காக பயந்து அந்த பிரதான சாலையை பயன்படுத்த முடியாத அளவிற்கு குப்பை சேகரிக்கும் பகுதியாக மாறியுள்ளது. மதுரை மாநகராட்சி 27வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைந்துள்ள சாலையிலேயே இந்த நிலை உருவாகியுள்ளது மாநகராட்சி அதிகாரிகளின் செயல்பாடுகளை கேள்வி எழுப்பி உள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Karthik Subbaraj : நான் எதிர்பார்க்காததை யானைகள் செய்தன - ஜிகர்தண்டா டபுள் எகஸ் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கானுக்கு எதிராக வட்டச்செயலாளர்கள் போர்க்கொடி..! மீண்டும் வெடிக்கும் போர்..!