மேலும் அறிய
மதுரை ஜல்லிக்கட்டில் இத்தனை பேருக்குதான் டோக்கன் ; வெளியானது லிஸ்ட்
போலியான டோக்கன்களை காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பயன்படுத்துவது தெரிய வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜல்லிக்கட்டு காளை
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் உலக புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12,632 காளைகளுக்கும் 5,347 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர் மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரையில் நடைபெறும் முக்கிய ஜல்லிக்கட்டு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் வரும் 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15ஆம் தேதி பாலமேட்டிலும், 16ஆம் தேதி உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான பதிவு madurai.nic.in இணையதளம் மூலம் பதிவு நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கி இன்று மாலை 5 மணி வரை பதிவு நடைபெற்று நிறைவுபெற்றது. இதில் மதுரை அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12,632 காளைகளுக்கும் 5,347 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். இதில் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 5 ஆயிரத்து 786 காளை உரிமையாளர்களும், 1698 மாடுபிடி வீரர்களும், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 4820 காளை உரிமையாளர்களும், 1914 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் முன்பதிவும் செய்துள்ளனர். அதே போல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 2026 காளை உரிமையாளர்களும் 1735 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் பதிவு செய்துள்ளனர் செய்துள்ளனர்.
ஆன்லை மூலம் டோக்கன்
ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்ட காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு இ-மெயில் மூலமாகவும் குறுஞ்செய்தி மூலமாகவோ QR கோடுடன் கூடிய ஆன்லைன் டோக்கன் அனுப்பி வைக்கப்பட்டு அதனை டவுன்லோட் செய்து போட்டியின் போது காண்பித்த பின்பாக அனுமதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. முறைகேட்டை தடுக்கும் வகையில் QRகோடுடன் கூடிய டோக்கன் பதிவிறக்கம் செய்த மாடுபிடிவீரர்கள் மற்றும் காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோன்று மூன்று இடங்களில் நடைபெறும் போட்டிகளின் போது போலியான டோக்கன்களை காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பயன்படுத்துவது தெரிய வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Neeraj Chopra : ”யப்பா இந்த முடி இருக்கே.. முடில டா சாமி!” மனம் திறந்த நீரஜ் சோப்ரா
எ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
திருச்சி
அரசியல்
ஆட்டோ
Advertisement
Advertisement