மேலும் அறிய

குமரி மாவட்ட கோவில் ஊழியர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு பணியில் தொடர்கிறார்கள் - நீதிபதிகள் கேள்வி

குமரி மாவட்ட கோவில் ஊழியர்கள் சிலர் மீது சிபிஐ விசாரணை நிலுவையில் உள்ளது. சிலர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் அவர்கள் எவ்வாறு பணியில் தொடர்கிறார்கள் - மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த ஸ்ரீபதி ராஜு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோவில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன.
 
சுசீந்திரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் அலுவலகம் குமரி மாவட்ட கோவில்களுக்கான தலைமை அலுவலகமாக கருதப்படுகிறது.  இணை ஆணையரின் கட்டுப்பாட்டில் கீழ் 35 அலுவலர்கள், 400 அர்ச்சகர்கள் மற்றும் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். 
 
கோவில் நிதியை முறைகேடு செய்ததாக, கோவில் ஊழியர்கள் பலர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகின. அவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்ட பலர் தற்போது பணியில் உள்ளனர். குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையில் தூத்துக்குடி மண்டல இணை இயக்குனர் அன்புமணி, கன்னியாகுமரி மாவட்ட கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்த், கன்னியாகுமரி மாவட்ட கோவில்களின் மராமத்து மேற்பார்வையாளர் அய்யப்பன், பகவதி அம்மன் கோவிலின் மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் தற்போதும் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை  எடுப்பதோடு, வழக்கை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். 
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு, 
 
குமரி மாவட்ட கோவில் ஊழியர்கள் சிலர் மீது சிபிஐ விசாரணை நிலுவையில் உள்ளது. சிலர் மீது வழக்கு  பதியப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் அவர்கள் எவ்வாறு பணியில் தொடர்கிறார்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து, இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையரிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 
 

மற்றொரு வழக்கு
 
மதுரை, திருச்சி, தஞ்சை, நெல்லை, ராமநாதபுரம் , தேனி அரசு மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை உபகரண வசதி ஏற்படுத்த கோரிய வழக்கில், தமிழக சுகாதாரத்துறை செயலர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 
மதுரையைச் சேர்ந்த வெரோணிக்காமேரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல்  செய்திருந்தார். அதில், "எனது கணவர் ஆனந்தராஜுக்கு சில மாதங்களுக்கு முன்பாக இரவில் நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்த போது இருதயப்பிரிவு மருத்துவர் இல்லாததால் காலையிலேயே அறுவை சிகிச்சைசெய்ய இயலும். அவசர சூழல் ஏற்பட்டால், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என குறிப்பிட்டனர்.
 
சிறந்த மருத்துவ வசதிகளைப் பெற தென் தமிழக மக்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையையே நம்பியுள்ளனர். ஆனால், இது போல அவசர இருதய சிகிச்சை பெற மருத்துவர்கள் 24 மணிநேரமும் மருத்துவமனையில் இருப்பதில்லை. 
 
ஆகவே, மதுரை, திருச்சி, தஞ்சை, நெல்லை, ராமநாதபுரம் , தேனி அரசு மருத்துவமனைகளில் 4D echo cartography உபகரண வசதியை ஏற்படுத்தவும், 24 மணி நேரமும் இருதய அறுவை சிகிச்சை செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
 
அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து  தமிழக சுகாதாரத்துறை செயலர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தலைப்பு செய்திகள்

ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Embed widget