மேலும் அறிய

எங்கெல்லாம் மின் தடை ஏற்படுகிறதோ அங்கெல்லாம் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - சி.டி.ஆர். நிர்மல் குமார் !

ஒரு துறையை மறைமுகமாக மிகவும் மோசமான நிலைக்கு கொண்டு சென்றதற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியே முக்கிய காரணம். - எனவும் குற்றச்சாட்டு

அரசுப் பொருட்காட்சி 2026-யை தொடங்கி வைத்து பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டு 48 பயனாளிகளுக்கு ரூபாய் 72.04 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்

 
எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் ஆகியோர் இன்று (14.06.2026)
 
அரசுப் பொருட்காட்சி 2026
 
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் ப. ஆகாஷ், தலைமையில் மதுரை மாவட்டம், தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் அரசுப் பொருட்காட்சி 2026-யை தொடங்கி வைத்து பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டு 48 பயனாளிகளுக்கு ரூபாய் 72.04 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவிக்கையில், மின்சாரப் பணிகள் தொடர்பான டெண்டர்கள் நிறுத்தப்படவில்லை. டெண்டர்களின் பாலிசி மற்றும் எஸ்டிமேட் நடைமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மின்சாரத் துறை தொடர்பாக விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். கடந்த ஆண்டுகளில் எத்தனை துணை மின் நிலையங்கள் (Sub Stations) அமைக்கப்பட்டன, மின்சாரத் துறையில் எவ்வாறு அரசுக்கு இழப்புகள் ஏற்பட்டன என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெள்ளை அறிக்கையில் வெளிப்படுத்தப்படும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Renewable Energy) துறையில் குறிப்பாக சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் பின்தங்கிய நிலைக்கு சென்றுள்ளது. சிலர் மட்டுமே பயன்பெறும் வகையில் லாபி அமைத்து, சோலார் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க கூட பெருமளவு பணம் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. முந்தைய ஆட்சியில் முதலீட்டாளர்கள் சில புரோக்கர்களை சந்தித்த பிறகே விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. ஒரு மெகாவாட் திட்டத்திற்கு ரூ.25 இலட்சம் முதல் ரூ.30 இலட்சம் வரை வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. சோலார் மின் உற்பத்தியில் முதலீடு செய்ய விரும்பியவர்கள் பல புரோக்கர்களை கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது. இந்த முறைகேடுகளை முழுமையாக சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்தத் துறை எந்த அளவிற்கு மோசமாக இருந்தது என்பதை மக்களிடம் வெளிப்படையாக எடுத்துரைப்போம்.
 
கடந்த நான்கு வாரங்களில் பல முக்கிய முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.
 
கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 70 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருந்தபோதும் அவை நிரப்பப்படவில்லை. தேவையான அளவில் துணை மின் நிலையங்களும் உருவாக்கப்படவில்லை. முறைகேடுகள் கண்டறியப்பட்டதால் இரண்டு மையங்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த நான்கு வாரங்களில் பல முக்கிய முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. டிரான்ஸ்பார்மர் கொள்முதல் மற்றும் எஸ்டிமேட் நடைமுறைகளில் இருந்த முறைகேடுகளை சரிசெய்ய டெண்டர் மற்றும் எஸ்டிமேட் பாலிசிகள் மாற்றப்பட்டுள்ளன. தற்போது அனைத்து விண்ணப்பங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இனி அனைத்து செயல்முறைகளும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும். எந்த புரோக்கருக்கும் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஒரு துறையை மறைமுகமாக மிகவும் மோசமான நிலைக்கு கொண்டு சென்றதற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியே முக்கிய காரணம். அந்தத் துறையை மீட்டெடுக்கும் முயற்சிகளை தற்போது மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்திற்கு எவ்வளவு துணை மின் நிலையங்கள் தேவை, எவ்வளவு மின் உற்பத்தி திறன் தேவை என்பதனை முழுமையாக கணக்கெடுத்து வருகிறோம். 10 முதல் 12 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உள்கட்டமைப்பு நிலையிலேயே தற்போது பல பகுதிகள் உள்ளன. தமிழக மக்களுக்கு தேவையான மின்சார உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி, மின்சாரத் துறை தொடர்பான விரிவான வெள்ளை அறிக்கையை விரைவில் வெளியிட உள்ளோம்.
 
உடனடி நடவடிக்கை
 
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை புரோக்கர்கள் மூலம் மறைமுகமாக கட்டுப்படுத்தி வைத்திருந்ததால் சிறு முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சீர்திருத்தங்கள் நிறைவடைந்த பின்னரே முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும். டெண்டர்கள் நிறுத்தப்படவில்லை. டெண்டர் பாலிசி மற்றும் எஸ்டிமேட் நடைமுறைகள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. விரைவில் அனைத்து டெண்டர்களும் வெளிப்படையாக அறிவிக்கப்படும். எங்கும் கமிஷன் என்ற நடைமுறை இருக்காது. மக்களுக்கான அரசு, மக்களுக்கான பணம், மக்களுக்கான நிர்வாகம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு துறையும் சீரமைக்கப்பட்டு வருகிறது. எங்கு தவறு நடந்தது, எங்கு அரசுப் பணம் வீணாக்கப்பட்டது, எவ்வாறு மிச்சப்படுத்தப்பட்டுள்ளது என்பன அனைத்தும் வெள்ளை அறிக்கையில் தெளிவாக வெளியிடப்படும்.
தமிழகத்திற்கு தேவையான துணை மின் நிலையங்கள் மற்றும் மின் தேவைகள் குறித்து முழுமையான கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. சிலரின் தவறான நடவடிக்கைகளால் மின் சுமையை தாங்க முடியாத நிலை உருவாகி சில இடங்களில் மின் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அவற்றை விரைவாக சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் 500 பேர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 125 குழுக்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் உள்ளன. எங்கெல்லாம் மின் தடை ஏற்படுகிறதோ அங்கெல்லாம் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கண்காணிப்பும் மேலும் அதிகரிக்கப்படும். உள்கட்டமைப்பு சரியான நிலையில் இல்லாத காரணத்தால் அதனை முழுமையாக மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
Embed widget