மேலும் அறிய

புதிய தலைமுறையினரை காக்க மதுரையில் போதை ஒழிப்பு மனித சங்கிலி!

போதை கலாச்சாரம் பழக்கத்தை ஒழிக்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை அதை அரசுடன் கைகோர்த்து நாமம் முன்னெடுத்து சிறப்பாக செய்வோம் என்றார்.

போதையை ஒழிப்போம் ! புதிய தலைமுறையை காப்போம் ! விழிப்புணர்வால் வெற்றி பெறுவோம் ! -மதுரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து போதை ஒழிப்பை எடுத்துரைத்து  மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வு.
 
சமூகப் பணி
 
மதுரையை சேர்ந்த ஸ்டார் குரு சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனரும் சமூக செயல்பாட்டாளருமான ஸ்டார் குரு தனது டிரஸ்ட் மூலமாக வைகை ஆற்றை தூய்மைப்படுத்துதல், வைகை ஆற்றங்கரை சாலைகளில் சிசிடிவி கேமரா பொருத்துதல் என பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். குறிப்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நுழைவு வாயிலில் தினமும் நோயாளிகள் உறவினர்கள் ஆதரவற்றவர்கள் பொதுமக்கள் என ஆயிரம் நபர்களுக்கு மேலாக கடந்த இரண்டரை வருடங்களாக மதிய உணவு இலவசமாக வழங்கி வருகிறார்.
 
போதை ஒழிப்பு விழிப்புணர்வு
 
இந்நிலையில் அவர் தனது டிரஸ்ட் மூலமாக மதுரை பாரதி மருத்துவமனையோடு இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி கையெழுத்தியக்க நிகழ்வினை நடத்தினார். மனித சங்கிலியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்று மதுரை காந்தி மியூசியத்தில் இருந்து ராஜாஜி பூங்கா சாலை வரை மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் என அனைவரும் தங்களது கைகளை ஒருவரோடு ஒருவர் கோர்த்து மனித சங்கிலியாக அணிவகுத்து நின்று போதை கலாச்சாரத்திற்கு எதிராக போதை ஒழிப்பை பறைசாற்றும் விதமாக மனித சங்கிலியாக நின்றனர். 
 
போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்
 
குறிப்பாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி பங்கேற்று மாணவர்கள் மத்தியில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள், போதை கலாச்சாரத்தை எவ்வாறு மாணவர்கள் கையாள வேண்டும் என எடுத்துரைத்து விழிப்புணர்வு செய்தார். இதுகுறித்து ஸ்டார்குரு சாரிட்டாள் பவுண்டேஷன் நிறுவனர் ஸ்டார் குரு  பேசுகையில்...," போதை கலாச்சாரம் ஒரு தலைமுறையை சீரழித்து வருகிறது அதை தடுப்பதற்கான முயற்சியை அரசும் நாமும் முன்னெடுத்து வருகிறோம், இன்று இளைஞர்கள் பெரும்பாலானோர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். அவர்கள் அதிலிருந்து வெளியே வர வேண்டும் எனவும் தமிழகத்தில் பரவி கிடக்கு போதை கலாச்சாரத்தில் இருந்து தமிழ்நாடு மீள வேண்டும் அடுத்து வரும் புதிய தலைமுறை இளைஞர்கள் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் என்ற நோக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை நாம் இங்கு ஒன்றிணைத்து நமது அறக்கட்டளை மூலமாக போதை ஒழிப்பு மனித சங்கிலி கையெழுத்து இயக்கம் விழிப்புணர்வு நடத்தியுள்ளோம்.  சென்னையில் முதலமைச்சர் அவர்கள் கூட போதை விழிப்புணர்வு மாரத்தான் நடத்தியது வரவேற்கத்தக்கது பாராட்டு கூறியது. போதை கலாச்சாரம் பழக்கத்தை ஒழிக்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை அதை அரசுடன் கைகோர்த்து நாமம் முன்னெடுத்து சிறப்பாக செய்வோம் என்றார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

ரூபாய்க்கு ஆக்சிஜன் வாங்கும் நிலை வருமா? மதுரை வீ த லீடர்ஸ் ஆக்சிஜன் மாஸ்க் விழிப்புணர்வு!
ரூபாய்க்கு ஆக்சிஜன் வாங்கும் நிலை வருமா? மதுரை வீ த லீடர்ஸ் ஆக்சிஜன் மாஸ்க் விழிப்புணர்வு!
தொடர் கந்துவட்டி கொடுமை... மதுரையில் நடந்தது என்ன? - மனநல ஆலோசகர் சொல்வது என்ன !
தொடர் கந்துவட்டி கொடுமை... மதுரையில் நடந்தது என்ன? - மனநல ஆலோசகர் சொல்வது என்ன !
சிவகங்கை: சரித்திரப் பதிவேடு குற்றவாளி ரஜினி கழுத்தறுத்து கொலை; உறவினர்கள் மறியல்!
சிவகங்கை: சரித்திரப் பதிவேடு குற்றவாளி ரஜினி கழுத்தறுத்து கொலை; உறவினர்கள் மறியல்!
இராமநாதபுரம் ஊரணியில் மணல் கொள்ளை: புகார் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை!
இராமநாதபுரம் ஊரணியில் மணல் கொள்ளை: புகார் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Honda QC3 Scooter: அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
Toyota Upcoming Launches in India: 35 கிமீ மைலேஜ்; ADAS உடன் பக்கா பாதுகாப்பு; விரைவில் அறிமுகமாக இருக்கும் டொயோட்டாவின் 3 கார்கள்
35 கிமீ மைலேஜ்; ADAS உடன் பக்கா பாதுகாப்பு; விரைவில் அறிமுகமாக இருக்கும் டொயோட்டாவின் 3 கார்கள்
CTR Nirmal Kumar:
"உதயநிதி கோமாளித்தனமான வேலைகளை கைவிட வேண்டும், GEN Z என்றால்?" - CTR நிர்மல் குமார் அட்டாக்
Embed widget