மேலும் அறிய

தேனி : திருமணம் செய்யக் கூறிய காதலியை கொலை செய்த வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே காதலியை கொலை செய்த வழக்கில் காதலனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே கரட்டுப்பட்டியை சேர்ந்த அன்னக்கொடி மகன் லோகிதாசன் (34). கூலித்தொழிலாளி. இவர், தனது ஊருக்கு அருகில் உள்ள கோவில்பட்டியை சேர்ந்த கருப்பையா மகள் ஜெயப்பிரதா (21) என்பவரை காதலித்தார். அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரிடம் பழகி வந்துள்ளார். அவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில், லோகிதாசன் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்யாமல், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றார். இந்த திருமண ஏற்பாடு ஜெயப்பிரதாவுக்கு தெரியவந்தது.

IND vs SA, 1st T20 : எனக்கு இது முன்னவே தெரியும்; அதுதான் ட்விட்ஸ்ட்! - இந்தியாவுடனான வெற்றி குறித்து வான்டர் டுசன்


தேனி : திருமணம் செய்யக் கூறிய காதலியை கொலை செய்த வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

இதனால் அவர் லோகிதாசனை சந்தித்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தினார். மேலும், தன்னை திருமணம் செய்யாமல் வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றால், மணப்பெண்ணின் வீட்டில் காதல் விவகாரத்தை கூறி திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்றார். கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந்தேதி லோகிதாசன் கோவில்பட்டிக்கு சென்று ஜெயப்பிரதாவை சந்தித்து சமாதானம் பேசினார். பின்னர் அவரை ஆசை வார்த்தைகள் கூறி ஆண்டிப்பட்டியில் உள்ள ஒரு கலைக் கல்லூரிக்கு பின்புறம் ஆண்கள் கழிப்பிடம் அமைந்துள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஜெயப்பிரதாவை தாக்கி அவர் அணிந்து இருந்த சேலையால் அவருடைய கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

ஆபீஸ் பாய்; மேனேஜர்; அசிஸ்டண்ட் டைரக்டர்.... - இயக்குநர் சேரன் சினிமாவுக்கு வந்த கதை...!


தேனி : திருமணம் செய்யக் கூறிய காதலியை கொலை செய்த வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

இந்த சம்பவம் குறித்து ஜெயப்பிரதா தந்தை கருப்பையா கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிப்பட்டி போலீசார் இந்திய தண்டனை சட்டம் 302 (கொலை) மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் லோகிதாசனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.


தேனி : திருமணம் செய்யக் கூறிய காதலியை கொலை செய்த வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

ரூ. 2 லட்சம் கடனுக்கு 10 லட்சம் கேட்டு மிரட்டல்... கந்துவட்டி கொடுமையால் ஃபாஸ்ட்ஃபுட் கடைக்காரர் தற்கொலை!

வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி சாந்திசெழியன் நேற்று தீர்ப்பளித்தார். கொலை செய்த லோகிதாசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். பின்னர் லோகிதாசனை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திமுக தனியாக போராடி வெல்ல முடியாது.INDIA கூட்டணி குறித்து நாராயணசாமி பேட்டி.
திமுக தனியாக போராடி வெல்ல முடியாது.INDIA கூட்டணி குறித்து நாராயணசாமி பேட்டி.
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... +2 படித்திருந்தால் போதும் - முழு விவரம் !
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... +2 படித்திருந்தால் போதும் - முழு விவரம் !
மதுரை மாவட்ட புதிய உதவி ஆட்சியர்... யார் இந்த சித்தார்த் போகர்னா - முழு விவரம் !
மதுரை மாவட்ட புதிய உதவி ஆட்சியர்... அகில இந்திய அளவில் 216-வது இடம் பிடித்த சித்தார்த் போகர்னா !
மதுரையில் உலக தரத்தில் உருவான பிரம்மாண்ட கட்டடம்... என்ன வசதிகள் உள்ளது முழு விவரம் !
மதுரையில் உலக தரத்தில் உருவான பிரம்மாண்ட கட்டடம்... என்ன வசதிகள் உள்ளது முழு விவரம் !

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
Embed widget