மேலும் அறிய

கொடைக்கானல்: தனியார் பள்ளியில் கொரியா, ஜப்பானை சேர்ந்த மாணவர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா

’’பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் என 200க்கும் மேற்பட்டோர் 14 நாட்கள் பள்ளி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்’’

கொரோனா வைரஸ் கடந்த 2 வருடங்களாக உலகையே அச்சுறுத்தி வந்த நிலையில் அதன் பரவல் மற்றும் தாக்கம் குறைந்து வந்ததால் தமிழக அரசு ஊராடங்கு விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகளை அளித்து வந்தது. அதன்படி வர்த்தக நிறுவனங்கள் சுற்றுலா தலங்கள் திரையரங்குகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளில் மாணவர்களும், ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது.  

கொடைக்கானல்: தனியார் பள்ளியில் கொரியா, ஜப்பானை சேர்ந்த மாணவர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் மாணவர்களுக்கு பாதிக்காமல் இருக்க பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தாலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏழு  ரோடு அருகே  செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் தமிழகம் மட்டுமில்லாது வெளிமாநிலத்தை சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகின்றனர். வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த மாணவர்கள் கடந்த ஒருவாரமாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். 

கொடைக்கானல்: தனியார் பள்ளியில் கொரியா, ஜப்பானை சேர்ந்த மாணவர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா

இந்நிலையில் இன்று  திங்கட்கிழமை முதல் பள்ளி வகுப்புகள் ஆரம்பிக்கபட இருந்த நிலையில் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் கொரியாவை சேர்ந்த ஒரு மாணவருக்கும், ஜப்பானை சேர்ந்த ஒரு மாணவருக்கும், கொடைக்கானலை சேர்ந்த 2 மாணவர்கள் உள்ளிட்ட 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து  இந்த மாணவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும்  மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நபர்கள்  14 நாட்கள் பள்ளி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக மருத்துவ குழுவினர் கண்காணித்து வருவதாக கொடைக்கானல் வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் பெரியகோவில் என அழைக்கப்படும் வரலாற்றுமிக்க, புகழ்பெற்ற பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோவில்.

தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும் Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone Relief: 2 ஆயிரம்! ஃபெஞ்சலால் வந்த சோகத்திற்கு இழப்பீடு - ஆடு, மாடுக்கு எவ்வளவு?

”பெரும் பரபரப்பு – அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு” விழுப்புரத்தில் மக்கள் ஆவேசம்..!

Sabarimala Temple: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை
Duraimurugan: ஏம்பா..! எடப்பாடி, அன்புமணிக்கு விஷயம் தெரியுமா? தெரியாதா? அமைச்சர் துரைமுருகன் நச் பதிலடி

ABP Premium

வீடியோ

”உள்துறை குடுங்க, இல்லனா...” பிடிவாதமாக இருக்கும் ஷிண்டே! விழிபிதுங்கி நிற்கும் பாஜகஉதயநிதி முன் தள்ளுமுள்ளு! போர்வையை இழுத்த பெண்கள்! கோபத்தில் கத்திய POLICEAadhav Arjuna : ”திமுக-னா பல் இளிப்பீங்க விஜய்-னா மட்டும் கசக்குதா?” திருமாவை- விளாசும் தவெக! | TVKJose Charles Profile : ”அடுத்த CM என் பையன் தான்”லாட்டரி மார்டின் ஸ்கெட்ச்!யார் இந்த ஜோஸ் சார்லஸ்? | Lottery Martin

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone Relief: 2 ஆயிரம்! ஃபெஞ்சலால் வந்த சோகத்திற்கு இழப்பீடு - ஆடு, மாடுக்கு எவ்வளவு?
Fengal Cyclone Relief: 2 ஆயிரம்! ஃபெஞ்சலால் வந்த சோகத்திற்கு இழப்பீடு - ஆடு, மாடுக்கு எவ்வளவு?
”பெரும் பரபரப்பு – அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு” விழுப்புரத்தில் மக்கள் ஆவேசம்..!
”பெரும் பரபரப்பு – அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு” விழுப்புரத்தில் மக்கள் ஆவேசம்..!
Sabarimala Temple: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை
Duraimurugan: ஏம்பா..! எடப்பாடி, அன்புமணிக்கு விஷயம் தெரியுமா? தெரியாதா? அமைச்சர் துரைமுருகன் நச் பதிலடி
Duraimurugan: ஏம்பா..! எடப்பாடி, அன்புமணிக்கு விஷயம் தெரியுமா? தெரியாதா? அமைச்சர் துரைமுருகன் நச் பதிலடி
SSC CGL RESULT 2024: மத்திய அரசின் சிஜிஎல் தேர்வு முடிவு எப்போது? காத்திருக்கும் தேர்வர்கள்! எஸ்எஸ்சி சொல்வது என்ன?

PSLV-C59 Proba-3 Mission: சூரியன் தான் இலக்கு, நாளை விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி - சி59 ராக்கெட் - ப்ரோபா-3 விண்கலம் ஆராயப்போவது என்ன?

ஷாருக்கான் சரக்குதான் உலகத்துலேயே பெஸ்ட் விஸ்கி! என்ன பிராண்ட்? என்ன விலை?

JEE Advanced 2025: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எப்போது? தேதி அறிவித்த ஐஐடி கான்பூர்- இவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை!

Embed widget