மேலும் அறிய

Idukki Dam: சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்; இடுக்கி அணையை அனைத்து நாட்களிலும் காண அனுமதி

இடுக்கி, செருதோணி அணைகளை புதன், தண்ணீர் திறக்கும் நாட்கள் தவிர அனைத்து நாட்களில் பொதுமக்கள் காண மூன்று மாதங்களுக்கு அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இடுக்கி மாவட்டம் கேரள மாநிலத்திலுள்ள 14 மாவட்டங்களுள் இதுவும் ஒன்றாகும். இந்த மாவட்டத்தின் தலைமையகம் பைனாவு நகரத்தில் உள்ளது. இடுக்கி மாவட்டம் கேரளத்தின் மிகப் பெரிய மாவட்டமாக உள்ளது. இது கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமாகும் ஏறத்தாழ 20%. தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலா வட்டங்களில் தமிழர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி ஏறத்தாழ 50% காடுகளும் மலைகளுமே. மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகியவை மாவட்டத்தின் இரண்டு உத்தியோகபூர்வ நிர்வாக மொழிகள். இடுக்கி மாவட்டத்தில் மலையாளத்திற்கு அடுத்தபடியாக தமிழ் அதிகமாக பேசப்படும் மொழியாகும்.

”தொழிலாளர்களை விவசாயிகளாக மாற்றி புரட்சி செய்த புது ஆறு” இப்போ வயசு 91ங்க!!!

Idukki Dam: சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்; இடுக்கி அணையை அனைத்து நாட்களிலும் காண அனுமதி

குறிப்பாக இடுக்கி அணை பல்வேறு வரலாற்று சிறப்புமிக்கதாகும். இடுக்கி அணை ஆர்ச் வடிவிலும், அதன் அருகே செருதோணி அணை நேர் வடிவிலும் கட்டப்பட்டுள்ளபோதும் தண்ணீர் ஒன்றாக தேங்கும். ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகைகளின்போது மட்டும் சுற்றுலா பயணிகள் அணையைக் காண அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கேரள மின் வாரிய அமைச்சர் கிருஷ்ணன்குட்டி தலைமையில் ஆய்வு குழு கடந்த மாதம் இடுக்கி அணையை  நேரில் பார்வையிட்டனர். அதனையடுத்து இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று வெளியிட்டது. இதில்  இடுக்கி, செருதோணி அணைகளை புதன், தண்ணீர் திறக்கும் நாட்கள் தவிர அனைத்து நாட்களில் பொதுமக்கள் காண மூன்று மாதங்களுக்கு அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

Breaking News LIVE : சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14 என அறிவிப்பு

Idukki Dam: சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்; இடுக்கி அணையை அனைத்து நாட்களிலும் காண அனுமதி

ஒரே நேரத்தில் 20 பேர் அனுமதிக்கப்படுவர். மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்த அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் கடைபிடிக்கப்படும். கடும் மழைக்கான வானிலை முன்னெச்சரிக்கைகள் (எல்லோ, ஆரஞ்ச் அலர்ட்டுகள்) விடுக்கப்படும் நாட்களிலும், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சுற்றுலாவுக்கு கட்டுப்பாடுகள் விடுக்கும் நாட்களிலும் அனுமதி இல்லை. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. தற்காலிக கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படும், என கூறப்பட்டிருந்தது. வரலாற்று சிறப்புமிக்க இடுக்கி அணையை அனைத்து நாட்களிலும் பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்து அரசு செப்.2ல் உத்தரவிட்ட நிலையில்  புதன் கிழமை தவிர அனைத்து நாட்களிலும் அணையை பார்க்க அனுமதிக்கப்பட்டதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலு, மணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?

Idukki Dam: சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்; இடுக்கி அணையை அனைத்து நாட்களிலும் காண அனுமதி

இந்நிலையில் இடுக்கி அணையில் வனத்துறை சார்பிலான இடுக்கி வன வளர்ச்சி குழு தலைமையில் சுற்றுலா படகு சேவை துவங்கியது. முதல் கட்டமாக 18 இருக்கைகள் கொண்ட படகு இயக்கப்பட்ட நிலையில் மேலும் இரண்டு படகுகள் இயக்கப்பட உள்ளது. அணைக்கு உட்பட்ட வெள்ளாபாறை படகு குழாமில் இருந்து படகு இயக்கப்படுகிறது. 30 நிமிடம் பயணத்தின் இடையே ஆர்ச் வடிவிலான இடுக்கி அணை நேர் வடிவிலான செருதோணி அணை வைசாலி குகை ஆகியவற்றை பார்க்கலாம்.  இதற்கான நேரம் காலை 9:00 முதல் மாலை 5:00 மணிவரை. கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.155. 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ரூ.85. ரூபாயாகவும்  என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறைAadhav Arjuna ED Raid |வழிக்கு வராத ஆதவ் !ரவுண்டு கட்டும் பாஜகED ரெய்டின் பின்னணி?Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
IND vs SA 4th T20: கடைசி டி20 போட்டி! கெத்து காட்டுமா இந்தியா? தடை போடுமா தெ.ஆப்பிரிக்கா?
IND vs SA 4th T20: கடைசி டி20 போட்டி! கெத்து காட்டுமா இந்தியா? தடை போடுமா தெ.ஆப்பிரிக்கா?
“அந்நியனாக” மாறிய பஸ் டிக்கெட்! மண்டையை பிய்த்துக் கொண்ட பயணிகள் - கும்பகோணத்தில் குழப்பம்
“அந்நியனாக” மாறிய பஸ் டிக்கெட்! மண்டையை பிய்த்துக் கொண்ட பயணிகள் - கும்பகோணத்தில் குழப்பம்
Embed widget