மேலும் அறிய

உடலை train செய்வது போல மனதை train செய்வது அவசியம்.. இதோ உங்களுக்கு தான் முழு ஆலோசனை !

மனதின் வலிமையே வெற்றியின் ரகசியம்.. விளையாட்டு உளவியலில் யாரும் சொல்லாத உண்மைகள் — உங்கள் வாழ்விலும் இது நடக்கிறது!

மனதை train செய்வது உடலை train செய்வது போலவே முக்கியம். உங்கள் மனம் உங்கள் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் — அதை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள்? - மனநல ஆலோசகரின் கேள்வி.
 
Sports Psychology-ன் core ரகசியம்
 
நீங்கள் எப்போதாவது இப்படி உணர்ந்திருக்கிறீர்களா? நன்றாக தெரிந்த ஒன்றை, முக்கியமான தருணத்தில் மறந்துவிட்டீர்கள். தேர்வு, நேர்காணல், அல்லது அரங்கேற்றம் — திடீரென மனசு blank ஆகிவிட்டது. விளையாட்டு வீரர்களும் இதையே உணர்கிறார்கள். ஆனால் சிறந்த வீரர்கள் இதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பது தான் Sports Psychology-ன் core ரகசியம். இந்த விஞ்ஞானம் வெறும் வீரர்களுக்கு மட்டுமில்லை — உங்களுக்கும் பொருந்தும். இது குறித்து பிரபல Mental Conditioning பயிற்சியாளார் P. ராஜ செளந்தரபாண்டியன் விளக்குகிறார்.
 
1. திடீரென 'Blank' ஆவது ஏன்? — Choking என்னும் உண்மை
 
நீங்கள் நன்றாக தெரிந்த ஒன்றை, அழுத்தமான தருணத்தில் செய்யத் தவறுவதை உளவியலில் 'Choking' என்கிறோம். காரணம் என்னவென்றால், நம் மூளை இரண்டு mode-களில் இயங்குகிறது — Autopilot mode மற்றும் Conscious Control mode. பயிற்சியின்போது நம் உடல் autopilot-ல் இயங்கும். ஆனால் 'இது மிகவும் முக்கியம், தவறக் கூடாது' என்று மூளை நினைக்கும்போது, திடீரென manual control-க்கு மாறிவிடும். அந்த மாற்றம் தான் நம்மை தடுமாற வைக்கிறது. தீர்வு: ஒரு சின்ன ritual வையுங்கள். மூச்சை ஆழமாக இழுப்பது, விரல்களை தட்டுவது — இது மூளையை autopilot-க்கு திரும்ப அழைக்கும் தந்திரம்.
 
2. கண்களை மூடி வெற்றி பயிற்சி செய்யலாம் — Visualization
நீங்கள் ஒரு முக்கியமான presentation-க்கு முன் மனதில் பல முறை rehearsal செய்கிறீர்களா? அறியாமலே நீங்கள் Visualization செய்கிறீர்கள்! விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றன: மனதில் ஒரு செயலை தெளிவாக கற்பனை செய்யும்போது, மூளையில் அதே neurons fire ஆகின்றன — உண்மையில் செய்வதுபோலவே. உலகின் சிறந்த விளையாட்டு வீரர்கள் தூங்குவதற்கு முன் தங்கள் ஒவ்வொரு நகர்வையும் மனதில் பார்ப்பார்கள். நீங்களும் நாளை ஒரு சவாலை எதிர்கொள்வதற்கு முன் — கண்களை மூடி, வெற்றிகரமாக செய்வதை மனதில் பாருங்கள். இது magic இல்லை, இது neuroscience.
 
3. நேரம் மெதுவாகும் தருணம் — Flow State என்னும் அதிசயம்
நீங்கள் விரும்பும் ஒரு வேலையில் மூழ்கும்போது — நேரம் எப்படி போகிறது என்றே தெரிவதில்லை, சோர்வு உணர்வதில்லை, எல்லாம் தானாக நடக்கிறது என்று தோன்றுகிறது. இதை உளவியலாளர் Mihaly Csikszentmihalyi 'Flow State' என்று அழைத்தார். விளையாட்டு வீரர்கள் இதை 'Zone-ல் இருக்கிறேன்' என்று சொல்கிறார்கள். Flow வர ஒரே ஒரு நிபந்தனை: உங்கள் திறமை அளவுக்கு சரியான சவால் இருக்க வேண்டும். மிகவும் எளிதாக இருந்தால் Boredom வரும், திறனை விட அதிகமான சவால் இருந்தால் Anxiety உருவாகும். இரண்டுக்கும் நடுவில் இருந்தால் Flow வருகிறது — அதுவே peak performance-ன் இரகசியம்.
 
4. தோல்வி ஏன் இவ்வளவு வலிக்கிறது? — மூளையின் உண்மை
நீங்கள் ஒரு தோல்வியை, அதே அளவு வெற்றியை விட அதிகமாக நினைவில் வைத்திருப்பீர்கள். இது உங்கள் பலவீனம் அல்ல — இது மூளையின் design. Loss Aversion’ என்னும் உளவியல் கோட்பாடு கூறுகிறது: மனித மூளை, வெற்றியின் மகிழ்ச்சியை விட, தோல்வியின் வலியை அதிகமாக உணர்கிறது. இதனால் தான் நாம் தோல்வியை நீண்ட நாள் மனதில் சுமக்கிறோம். சிறந்த விளையாட்டு வீரர்களின் ரகசியம்: தோல்வியை 'drama' ஆக பார்க்கவில்லை — 'data' ஆக பார்க்கிறார்கள். 'என்ன தவறானது, அடுத்த முறை என்ன மாற்றலாம்?' என்று மட்டும் கேட்கிறார்கள். உணர்வை process செய்கிறார்கள், ஆனால் அதில் மூழ்குவதில்லை.
 
5. நீங்கள் உங்களிடம் என்ன பேசுகிறீர்கள்? — Self-Talk-ன் சக்தி
தோல்விக்கு பிறகு நீங்கள் உங்களிடம் என்ன சொல்கிறீர்கள்? 'என்னால் முடியாது' என்கிறீர்களா? இது உங்கள் மூளையை நிரந்தரமாக நம்ப வைக்கும்.  சில ஆய்வுகள் காட்டுகின்றன: 'நான் செய்யலாம்' என்று நினைப்பதை விட, 'நீ செய்யலாம்' என்று second person-ல் பேசிக்கொள்வது செயல்திறனை உயர்த்துகிறது. சிறந்த விளையாட்டு வீரர்கள் score-ஐ பற்றி நினைக்கமாட்டார்கள் — 'அடுத்த ஒரு நிமிடம் மட்டும் கவனி' என்று மனதில் சொல்லிக்கொள்வார்கள். இதை 'Process Self-Talk' என்கிறோம்.
 
விளையாட்டு உளவியல் என்பது வெறும் வீரர்களுக்கான விஷயம் அல்ல. Choking-ஐ புரிந்துகொள்வது, Visualization பயிற்சி செய்வது, Self-Talk-ஐ மாற்றுவது — இவை எல்லாம் நம் அன்றாட வாழ்விலும் பயன்படுகின்றன. மனதை train செய்வது உடலை train செய்வது போலவே முக்கியம். உங்கள் மனம் உங்கள் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் — அதை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள்?
 

தலைப்பு செய்திகள்

சிவாஜி 25வது நினைவு நாள்: மொட்டையடித்து, ஜோதி ஏந்தி ரசிகர்கள் உருக்கமான அஞ்சலி!
சிவாஜி 25வது நினைவு நாள்: மொட்டையடித்து, ஜோதி ஏந்தி ரசிகர்கள் உருக்கமான அஞ்சலி!
மதுரையில் 3000 ஆண்டு அதிசயம்: ஆதிகால குகை, பாறை ஓவியம், இரும்பு உருக்காலை கண்டுபிடிப்பு!
மதுரையில் 3000 ஆண்டு அதிசயம்: ஆதிகால குகை, பாறை ஓவியம், இரும்பு உருக்காலை கண்டுபிடிப்பு!
முக்கிய செய்தி - 2027 டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்.. சாதி விவரங்களும் சேர்ப்பு!
முக்கிய செய்தி - 2027 டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்.. சாதி விவரங்களும் சேர்ப்பு!
பழனி கோயில் நில மோசடி: 100 கோடி நிலத்தில் சிபிசிஐடி அதிரடி; உயர்மட்டக் குழுவும் களத்தில்!
பழனி கோயில் நில மோசடி: 100 கோடி நிலத்தில் சிபிசிஐடி அதிரடி; உயர்மட்டக் குழுவும் களத்தில்!

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac cigarettes ban : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! இனி டாஸ்மாக் பார்களில் சிகரெட்டிற்கு தடை- வெளியானது புதிய கட்டுப்பாடுகள்
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! இனி டாஸ்மாக் பார்களில் சிகரெட்டிற்கு தடை- வெளியானது புதிய கட்டுப்பாடுகள்
Singer Arivu arrest : தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!
குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Letter to MKS : ‘மு.க.ஸ்டாலின் இருட்டில் வைக்கப்பட்டார் – அதிமுக ஆட்சி மாதிரிதான் திமுகவும்’ ராஜினாமா செய்த நிர்வாகி பரபரப்பு கடிதம்..!
'அதிமுக ஆட்சி மாதிரிதான் திமுகவும்’ ராஜினாமா செய்த நிர்வாகி பரபரப்பு கடிதம்..!
Creta Finance Plan EMI: இந்தியாவோட ஃபேவரைட் ஹூண்டாய் கிரெட்டாவ லோன்ல வாங்கணுமா.? முன்பணம், EMI என்ன.? தெரிஞ்சுக்கோங்க
இந்தியாவோட ஃபேவரைட் ஹூண்டாய் கிரெட்டாவ லோன்ல வாங்கணுமா.? முன்பணம், EMI என்ன.? தெரிஞ்சுக்கோங்க
Parandur Airport : ’பரந்தூர் விமான நிலைய இடம்’ திமுக எழுப்பிய கேள்வியால் வெளியான உண்மை..!
’பரந்தூர் விமான நிலைய இடம் மாற்றமா?’ மத்திய அரசு அதிரடி பதில்..!
Enfield Hunter 350 on EMI: என்ஃபீல்டின் ஹார்ட்டை கவரும் ஹண்டர் 350 பைக்க வாங்க முன்பணம் எவ்ளோ வேணும்.? EMI எவ்வளவு வரும்.?
என்ஃபீல்டின் ஹார்ட்டை கவரும் ஹண்டர் 350 பைக்க வாங்க முன்பணம் எவ்ளோ வேணும்.? EMI எவ்வளவு வரும்.?
Embed widget