அரை நிர்வாணமாக்கி துன்புறுத்தல் - காவல் சார்பு ஆய்வாளர் சகிலாவுக்கு 10,000 அபராதம்
’’மனுதாரர் தன் மீதான குற்றசாட்டை ஒப்புக்கொண்டதாகவே தெரிகிறது. மனுதாரரின் நடவடிக்கை ஏற்புடையதல்ல. இதுபோன்ற நடவடிக்கையை ஊக்குவிக்க முடியாது’’
மதுரை, கூடல் நகரைச் சேர்ந்தவர் நாராயணசாமி. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர், மதுரை ஜேஎம் 4 நீதிமன்றத்தில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," நான் கடந்த 11.1.2007ல் எனது காம்பளக்ஸ் முன் நின்றிருந்தேன். அங்கு வந்த அப்போதைய கூடல்புதூர் எஸ்.ஐ.சகீலா (தற்போது சென்னையில் இன்ஸ்பெக்டராக உள்ளார்) மற்றும் போலீசார் வீட்டின் முன்பு கொட்டப்பட்டிருந்த மணலை அப்புறப்படுத்த வேண்டுமென கூறினர். இதை வீட்டிலுள்ளவர்களிடம் தெரிவிப்பதற்காக நான் சென்றேன். அப்போது போலீசார் என் வீட்டினுள் வந்து என்னையும், என் குடும்பத்தினரையும் தாக்கினர். என்னையும், என் மகனையும் ஜீப்பில் ஏற்றி சென்றனர். அரை நிர்வாணமாக்கினர். எனவே, எங்களுக்கு மனித உரிமை மீறல் நடந்துள்ளது. இதற்காக போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனு நிலுவையில் உள்ளது. இதனிடையே, இன்ஸ்பெக்டர் சகீலா தரப்பில், தன் மீதான குற்றசாட்டுகளை ரத்துசெய்து தன்னை விடுவிக்க கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.