மேலும் அறிய
Advertisement
மதுரையில் இருந்து இயக்கப்படும் விமானங்களில், மஸ்கட், சிங்கப்பூருக்கு இயக்க முன்னுரிமை..! முழு விவரம்..
மதுரையில் இருந்து இயக்கப்படும் இந்திய விமானங்களை, அபுதாபி, மஸ்கட், சிங்கப்பூர், கோலாலம்பூர் ஆகிய நகரங்களுக்கு இயக்குவதற்கான ஏற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.
மதுரையிலிருந்து அபுதாபி, மஸ்கட், சிங்கப்பூர்,கோலாலம்பூருக்கு விமானங்களை இயக்க முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் ஜோதிராதித்யா எம்.சிந்தியா தகவல் தெரிவித்துள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ட்வீட் செய்துள்ளார்.
மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என தென்மாவட்ட MPகள் கையெழுத்திட்ட மனுவினை @JM_Scindia இடம் வழங்கினோம்.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) December 21, 2021
மதுரையிலிருந்து அபுதாபி, மஸ்கட், சிங்கப்பூர்,கோலாலம்பூருக்கு விமானங்களை இயக்க முன்னுரிமை வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். @manickamtagore @KartiPC pic.twitter.com/VSFUeC8qow
மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளோடு ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா எம்.சிந்தியா அவர்களை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் , விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அவர்களும் நேரில் சந்தித்துள்ளனர். அப்போது அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தென் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கையெழுத்திட்ட கடிதத்தினை வழங்கினர். அதற்கு அவர் மதுரை ஏற்கெனவே கஸ்டம்ஸ் விமான நிலையமாக இருப்பதால் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க முடியாது என்றார். மேலும் தமிழகத்தில் ஏற்கெனவே 3 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளதாகவும் , வட மாநிலங்கள் சிலவற்றில் ஒன்றுதான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் BASA ஒப்பந்தத்தில் இணைப்பு மையமாக இந்தியாவின் எந்த விமான நிலையத்தையும் இனி இணைக்க வாய்ப்பில்லை. ஏற்கெனவே ஏராளமான விமான நிலையங்களை இணைத்து விட்டோம். எனவே மதுரையை இணைக்க முடியாது என தெரிவித்தார். மதுரையில் இருந்து இயக்கப்படும் இந்திய விமானங்களை அபுதாபி, மஸ்கட், சிங்கப்பூர், கோலாலம்பூர் ஆகிய நகரங்களுக்கு இயக்குவதற்கான ஏற்பாடுகளுக்கு முன்னுரிமை தருகிறோம் என தெரிவித்துள்ளார்.
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
மேலும் செய்திகள் படிக்க கிளிக் செய்யவும் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
கடிதத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்,விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கதாகூர், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி பி.சிதம்பரம், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வேலுச்சாமி ,தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார் , ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion