இபிஎஸ் தடை வாங்கிய வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு - ஓபிஎஸ்-ன் ரியாக்ஷன் என்ன?
தர்மம் தன் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் - ஓபிஎஸ் பேட்டி.
தர்மம் தன் வாழ்வுதனை சூது கவ்வும் பின்பு தர்மமே வெல்லும் உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடக்கூடாது என இபிஎஸ் தடை வாங்கிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு ஓபிஎஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப்பின் அதிமுகவில் பல்வேறு பிரிவுகள் ஏற்பட்டது. தற்பொழுது ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி என பிரிந்திருக்கும் நிலையில் திண்டுக்கல் சூரியமூர்த்தி என்பவர் டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் கட்சியின் கொடி, மற்றும் கட்சியின் சின்னம் விவகாரத்தில் அடிப்படை உறுப்பினருக்கு தலையிட உரிமை உண்டு என வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என ஓபிஎஸ், கே சி பழனிச்சாமி, புகழேந்தி, மனோஜ் பாண்டி, அரவிந்த் ஆதித்தனார் உள்ளிட்டோர் தங்களையும் விசாரிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தனர்.
ஓபிஎஸ் மற்றும் அவர் தரப்பு சார்ந்த மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரணை செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பினர் உட்கட்சி விவகாரத்தில் தலையிடக்கூடாது என மனுதாக்கல் செய்து தடை வாங்கினர்.
இந்த வழக்கில் ஸ்டே குறித்து ஓபிஎஸ் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் முறையீடு செய்ததற்கான தீர்ப்பு இன்று வெளியானது. அந்த தீர்ப்பில் தேர்தல் ஆணையம் உட்கட்சி விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ளலாம் என தீர்ப்பு வெளியிட்டு, இபிஎஸ் தரப்பினர் பெற்ற தடையை தள்ளுபடி செய்து தீர்ப்பு வெளியாகி உள்ளது.
Today Power Shutdown Tamilnadu: தமிழகத்தில் இன்று ( 12.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
இந்த தீர்ப்பு குறித்து பெரியகுளத்தில் அவரது இல்லத்தில் உள்ள ஓபிஎஸ் இடம் கேட்டபொழுது, நீதிமன்றங்களுக்கு என்னென்ன அதிகாரம் உள்ளதோ அதே அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கும் உண்டு என்பது இந்த தீர்ப்பின் மூலம் வெளியாகி தேர்தல் ஆணையம் விசாரணை செய்யலாம் என்பது தீர்ப்பாகியுள்ளது. மேலும் இபிஎஸ் போட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பதோடு தர்மம் தன் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என அந்த தீர்ப்பின் மூலம் வெளியாகி உள்ளது என தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

