மேலும் அறிய

EPS Meets Amit Shah: பொதுச்செயலாளர் அங்கீகாரம்; அமித்ஷாவை நேரில் சந்திக்கிறார் இபிஎஸ்...! என்ன பேசப்போகிறார்..?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரும் 27-ஆம் தேதி சந்திக்கிறார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரும் 27-ஆம் தேதி சந்திக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக  அதிமுக-பாஜக இடையே குழப்பம் நீடித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு அவர் அமித்ஷாவை சந்திப்பது இது முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

இபிஎஸ்-அமித்ஷா சந்திப்பு 

சமீப காலமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இபிஎஸ்க்கும் இடையே சிறு மோதல் போக்கு நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் பாஜகவிடம் தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்குமாறு கேட்டதாக தகவல் வெளியான நிலையில், அதிமுக தனித்து போட்டியிடுவதாக கூறி வேட்பாளரையும் அறிவித்தது. இதனால் அதிமுக பாஜக கூட்டணி குறித்த குழப்பம் நீடித்து வருகிறது. எனவே இவர்கள் கூட்டணியில் நிலவும் பிரச்சனைகளை எவ்வாறு கலையலாம் என்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று கூறப்படுகிறது.

பாஜகவை எதிர்த்து அதிமுக போட்டி

பா.ஜ.க. வேட்பாளருக்கு போட்டியாக அ.தி.மு.க. வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி இறக்கியிருப்பது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வேட்பாளரை களமிறக்கியுள்ளது. அந்த ஒரு வேட்பாளரும் தங்களது கூட்டணி கட்சி வேட்பாளருக்கு எதிராகவே களமிறக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

அ.தி.மு.க. சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் களமிறங்கியுள்ள அன்பரசன் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என சூளுரைத்துள்ளார். அ.தி.மு.க. தலைவர்கள் பா.ஜ.க.வுடன்தான் கூட்டணியில் இருக்கிறோம் என்று கூறினாலும், அ.தி.மு.க. முக்கிய தலைவர்கள் சிலர் இந்த கூட்டணியை விரும்பவில்லை என்ற தகவல்கள் வலம் வருகின்றன. இதனால், பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி முறிந்துவிடுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேசமயம் கர்நாடகாவில் மட்டும் பா.ஜ.க.வை எதிர்த்துவிட்டு தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுடனான கூட்டணி தொடருமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. 


அண்ணாமலை -இபிஎஸ் இடையே பனிப்போர் 

அண்ணமைக்காலமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கிடையே பனிப்போர் நீடித்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு கட்சி கூட்டத்தில் பேசிய அண்ணாமலை வரும் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடப்போவதாக தெரிவித்தார். ஆனால் அவரின் கட்சியிலேயே சில நிர்வாகிகள் இதற்கு மறுப்பு தெரிவித்ததுடன் தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது என தெரிவித்திருந்தனர். இதனையடுத்து மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அதிமுக -பாஜக கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார். சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இபிஎஸ், தான் ஒரு முதிர்ந்த அரசியல் தலைவர் என்றும், ஒரு முதிர்ந்த தலைவரை பற்றி தன்னிடம் கேள்வி கேட்குமாரும் கூறி பதில் கூற மறுத்து விட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
Breaking News LIVE: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!
Breaking News LIVE: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
Yellow Fever: தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Muttukadu Boat House : முட்டுக்காடு SUMMER SPECIAL 1 DAY PLAN-க்கு ரெடியா? இவ்வளவு OFFER இருக்கா?Suchitra interview  : ”ஐஸ்வர்யா நல்ல அம்மாவா? என் சப்போர்ட் தனுஷூக்கு தான்” பகீர் கிளப்பிய சுச்சிGV Prakash Saindhavi Divorce : ”ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்”  எமோஷனலான GV, சைந்தவிVenkatesh Bhat : SUN TV vs VIJAY TV வெங்கடேஷ் பட் பதிலடி போட்டியில் முந்துவது யார்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
Breaking News LIVE: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!
Breaking News LIVE: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
Yellow Fever: தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
PM Modi's Nomination: நாடாளுமன்ற தேர்தல் - வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!
PM Modi's Nomination: நாடாளுமன்ற தேர்தல் - வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
Cow Theft:
"பீப் கடைக்கு " மாடுகளை திருடிய பார்ட் டைம் திருடர்கள் ..! ஜெயிலுக்கு அனுப்பிய போலீஸ் ..!
Fact Check: மோடிக்கு எதிரான பேச்சு - பரப்புரையில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்டாரா? உண்மை என்ன?
Fact Check: மோடிக்கு எதிரான பேச்சு - பரப்புரையில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்டாரா? உண்மை என்ன?
Embed widget