மேலும் அறிய

ரீல் விட்டுக்கொண்டு கலகம் செய்யும் வேலையை இங்கு செய்யக்கூடாது - திண்டுக்கல் சீனிவாசன்

ஆண்டிபட்டியில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுகூட்டத்தில் தொண்டர்களிடம் கோபமடைந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி -  வைகை அணை சாலை பிரிவில் அதிமுக சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். பத்திரிகையாளர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் நான் பேசுவது ஒரு வார்த்தை தவறாக இருந்தால் என்னை கேள்வி கேட்கலாம் என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது 

முன் வரிசையில் அமர்ந்திருந்த அதிமுக தொண்டர் ஒருவர் உற்சாகமிகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தை திட்டி பேசுங்கள் என்று உரக்க கூறினார். அதற்கு பதில் கூறிய திண்டுக்கல் சீனிவாசன் அவரை திட்டுவதற்காகவா இந்த கூட்டத்தை போட்டோம் . இதுவரை யாரும் கூறாத விஷயங்களை பேச நான் வந்திருக்கிறேன் என்றார். அப்போது கூட்டத்திலிருந்த ஒருவர்  பழையவற்றவை பேசி பேசி தவிச்சு போச்சு என்றார்.  இதனால் கோபமான திண்டுக்கல் சீனிவாசன் தவிச்சுப்போச்சு என  கூறுபவர்கள் பிடித்தால் இருங்கள் இல்லையென்றால் கூட்டத்தை விட்டு வெளியே போங்கள் என்றும்,  ரீல் விட்டுக்கொண்டு கலகம் செய்யும் வேலையை இங்கு செய்யக்கூடாது என்றும் எதற்கும் நாங்கள் தயார் என்றும் பேசினார்.

ரீல் விட்டுக்கொண்டு கலகம் செய்யும் வேலையை இங்கு செய்யக்கூடாது - திண்டுக்கல் சீனிவாசன்

பின்னர் சபையில் நடந்ததை நான் கூறுகிறேன் தமிழ்நாட்டில் இதுவரை இதை  யாரும் கூறவில்லை புரிந்து கொள்ளுங்கள் என்றார். மக்களிடம் உண்மையை பேசிக்கொண்டு இருக்கிறேன் என்றும் பேசியபோது கூட்டத்தில் கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்த சிலரை சமாதானப்படுத்துவதற்காக மேடையில் இருந்த நிர்வாகிகள்  சென்றனர். அதை தடுத்த திண்டுக்கல் சீனிவாசன் உட்காருங்கப்பா ஆள் ஆளுக்கு எந்திரிச்சு செல்லாதீர்கள் என்னை பேச விடுங்கள் என்றார் . 

ரீல் விட்டுக்கொண்டு கலகம் செய்யும் வேலையை இங்கு செய்யக்கூடாது - திண்டுக்கல் சீனிவாசன்

மீண்டும் திண்டுக்கல் சீனிவாசன் பேச துவங்கியதும் அதிமுக தொண்டர்கள் உற்சாக மிகுதியால் கூச்சல்களை எழுப்பினார்கள். இதனால் கோபம் அடைந்த திண்டுக்கல் சீனிவாசன் அமைதியாக இருங்கள் நான் என்னத்த பேசுவது என்றார் . மேலும் கசகச என பேசிக்கொண்டு இருந்தால் எவ்வாறு பேசுவது தள்ளி நில்லுங்கள் ஒருமுறை ஒருவர் அடித்துக் கொள்ளாதீர்கள் என்று கூறிய திண்டுக்கல் சீனிவாசன் அருகில் இருந்த பள்ளிவாசலில் தொழுகை நடைபெறும் ஒலி கேட்டவுடன் பேச்சை நிறுத்திவிட்டு தொழுகை முடியும்வரை  மேடையில் சிறிது நேரம் அமர்ந்து விட்டார்.

ரீல் விட்டுக்கொண்டு கலகம் செய்யும் வேலையை இங்கு செய்யக்கூடாது - திண்டுக்கல் சீனிவாசன்

பின்னர் மீண்டும் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது, அதிமுக தொண்டர்கள் உற்சாக மிகுதியால்  திண்டுக்கல் சீனிவாசன் பேச்சுக்கு பேச்சு எதிர்பேச்சு பேசிக்கொண்டு கூச்சல் எழுப்பிக்கொண்டு  இருந்தார்கள் . இதையடுத்து கூச்சலிட்டுக் கொண்டிருந்த அதிமுக தொண்டர்களை சமாதானப்படுத்த மேடையில் இருந்த நிர்வாகிகள் கீழே இறங்கி வந்து கூச்சலிட்டவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் கூச்சல் குழப்பம் அதிகமாகி ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதமிட்டனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் கூச்சல் அதிகமாகி  பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேசிய  திண்டுக்கல் சீனிவாசன் அமைதியாக இருங்கள். யாரும் யாருக்கும் பஞ்சாயத்து பண்ணாதீர்கள் என்று கூறினார்.

தலைப்பு செய்திகள்

மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
கள்ளுக்கான தடையை மறு ஆய்வு செய்ய கோரி மனு.. உள்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு !
கள்ளுக்கான தடையை மறு ஆய்வு செய்ய கோரி மனு.. உள்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு !
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மீனாட்சி கோவில் நில மோசடி: 10 பேர் முன் ஜாமீன் மனு; நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
மீனாட்சி கோவில் நில மோசடி: 10 பேர் முன் ஜாமீன் மனு; நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget