Dindigul: ஒருவரை ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கிக் கொண்ட பேருந்து ஓட்டுநர்கள் - ஒட்டன்சத்திரத்தில் பரபரப்பு
ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனி சென்ற தனியார் பேருந்து ஒன்று பின்னால் திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்துக்கு வழி விடாமல் சென்றதாக கூறப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் ஒருவரை ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதி தென் மற்றும் கொங்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாக உள்ளது. மதுரையில் இருந்து கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ஒட்டன்சத்திரம் வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
The GOAT Review: கொதிக்கும் ”The GOAT" ஜுரம்.. தெறிக்கவிட்டாரா விஜய்? முழு விமர்சனம் இதோ..
அதேபோல் திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரம் வழியாக பழனிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கி வருகிறது. இதில் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மற்றும் கொங்கு மண்டலத்தில் உள்ள ஊர்களுக்கும் செல்ல வேண்டிய பயணிகள் காத்திருந்து தங்களது ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இதற்கிடையே இன்று ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனி சென்ற தனியார் பேருந்து ஒன்று பின்னால் திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்துக்கு வழி விடாமல் சென்றதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் தனியார் பேருந்தை கடந்து செல்ல முயன்ற போது தனியார் பேருந்து ஓட்டுனர் வழி விடாத காரணத்தினால் சாலை நடுவில் உள்ள தடுப்பில் உரசி அரசு பேருந்து நின்று விட்டது. இதனைத் தொடர்ந்து பேருந்து விட்டு இறங்கிய இரு ஓட்டுனர்களும் ஒருவரை ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கி கொண்டனர். இதை சற்று எதிர் பார்க்காத பேருந்து பயணிகள் அவர்கள் இருவரையும் விலக்கிவிட்டு சமரசம் செய்தனர். இதனால் ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தை பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்பொழுது இது வைரலாக பரவி வருகிறது.