மேலும் அறிய

திண்டுக்கல் : தனியார் பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து: ஒருவர் உடல் கருகி உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் எதிரே தனியார் பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஒருவர் உடல் கருகி உயிரிழந்த நிலையில் ஐந்து பேர் உயிர் தப்பினர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சென்னமநாயக்கன்பட்டி அருணாச்சலம் நகர் பகுதியில் அர்ஜுன் பட்டாசு கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை திண்டுக்கல் அருகே உள்ள சுக்காம்பட்டியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்ற ஓய்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் தனது மனைவி பெயரில் அனுமதி வாங்கி நடத்தி வருகிறார். இந்த கடையில் தினசரி பட்டாசு விற்பனை நடந்து வருகிறது. மேலும் தீபாவளி பண்டிகை காலங்களில் சிறப்பு விற்பனை நடத்தும் பிரபல பட்டாசு கடை இது ஆகும் . இந்த நிலையில் இன்று வழக்கம் போல் பட்டாசு கடையில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 5 பேர் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர் .


திண்டுக்கல் : தனியார் பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து: ஒருவர் உடல் கருகி உயிரிழப்பு

அப்போது மதியம் ஏறத்தாள 2.30 மணி அளவில் திடீரென பட்டாசு கடையில் பட்டாசுகள் வெடித்து சிதறியது. பட்டாசுகள் வெடிக்க தொடங்கியதும் கடைக்குள் இருந்த 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் தப்பி ஓடி விட்டனர். பட்டாசு கடையில் இருந்த வானவேடிக்கை வெடிகள் ,மத்தாப்புகள், வண்ண வானவேடிக்கை, அணு குண்டுகள் வெடித்து சிதறியது. பட்டாசு சத்தம் கேட்டு  அருகில் குடியிருப்புக்களில் வசித்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்ததும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நான்குக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தீயை அணைத்தனர். தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் விசாகன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியை முடுக்கிவிட்டனர். ஏறத்தாழ 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் பட்டாசு கடைகள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.


திண்டுக்கல் : தனியார் பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து: ஒருவர் உடல் கருகி உயிரிழப்பு

அப்போது பட்டாசு கடை வாசலில் முழுவதும் எரிந்த நிலையில் கரிக்கட்டையாக ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இறந்தவர் அந்தக் கடையில் டிரைவராக பணி செய்துவரும் சுக்காம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்தது. பட்டாசு வெடித்த உடன் சுதாரித்துக்கொண்ட 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் தப்பி ஓடிய நிலையில் டிரைவர் ராஜேஷ் தப்பி ஓடும்போது பட்டாசு வெடிப்பில் சிக்கி மாட்டிக்கொண்டார். மேலும் இந்த விபத்தில் கடையில் பொருட்களை ஏற்றி இறக்க பயன்படுத்தப்பட்ட உயிரிழந்த ராஜேஷ் இயக்கி வந்த ஆம்னி கார் மற்றும் கடைக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள் எரிந்து சாம்பலானது. பட்டாசு கடை விபத்து குறித்து திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


திண்டுக்கல் : தனியார் பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து: ஒருவர் உடல் கருகி உயிரிழப்பு

இந்த பட்டாசு கடையை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு விற்பனைக்கு தடை செய்து பூட்டி சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு மீண்டும் பட்டாசு கடை செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. பொது மக்கள் குடியிருப்பு உள்ள பகுதியில் இது போன்ற பட்டாசு கடைகளில் நடத்த கூடாது என்பது விதிமுறை இருந்தும் தொடர்ந்து பட்டாசுக்கடை செயல்பட அனுமதித்தது ஏன் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

காரைக்குடியில் பாரம்பரிய உணவு திருவிழா ; சுவைகளில் சங்கமித்த கலாச்சாரங்கள்!
காரைக்குடியில் பாரம்பரிய உணவு திருவிழா ; சுவைகளில் சங்கமித்த கலாச்சாரங்கள்!
மதுரையில் இன்று (28.07.2026) ஒரே நாளில் பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது - உடனே பாருங்க !
மதுரையில் இன்று (28.07.2026) ஒரே நாளில் பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது - உடனே பாருங்க !
பறவைகளின் பசிக்கு பழ மரங்கள்: ரூ.5000 நிதி அளித்த விவசாயி; முதல்வர், ரஜினிக்கு கோரிக்கை!
பறவைகளின் பசிக்கு பழ மரங்கள்: ரூ.5000 நிதி அளித்த விவசாயி; முதல்வர், ரஜினிக்கு கோரிக்கை!
தென் மாவட்ட மருத்துவ கழிவு முறைகேடு: மக்கள் உயிருக்கு ஆபத்து - மருத்துவர்கள் நூதன மனு !
தென் மாவட்ட மருத்துவ கழிவு முறைகேடு: மக்கள் உயிருக்கு ஆபத்து - மருத்துவர்கள் நூதன மனு !

வீடியோ

SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்
வங்கி மேனேஜர் கன்னத்தில் பளார் மு.க.அழகிரி மகள் ஆவேசம்! வெளியான வீடியோ காட்சி!
BAN NEET vs FAIR NEET..மாணவர்களிடையே பிளவு?கைவிடுவதா? தொடர்வதா? குழப்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
Iran Vs Trump: ''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 29-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
சென்னை மக்களே.! ஜூலை 29-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
Embed widget