உசிலம்பட்டியில் தனியார் கல்லூரி ஆக்கிமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு - மதுரை ஆட்சியர் பதில் தர உத்தரவு
’’இக்கல்லூரிக்கான இடத்தை தவிர அரசுக்கு சொந்தமான வருவாய் மேய்ச்சல் புறம்போக்கு இடம், ஓடைகள், கண்மாய்கள் ஆகிய பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மனுவில் புகார்’’
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த செல்வம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தில் கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில் நுட்ப கல்லூரி அமைந்துள்ளது. இக் கல்லூரிக்கு சொந்தமாக 100 ஏக்கர் நிலம் உள்ளது. இக்கல்லூரி முறையாக கட்டிட அனுமதி பெறாமல் கட்டிடங்களை கட்டி செயல்பட்டு வருகிறது. மேலும் இக்கல்லூரிக்கான இடத்தை தவிர அரசுக்கு சொந்தமான வருவாய் மேய்ச்சல் புறம்போக்கு இடம், ஓடைகள், கண்மாய்கள் ஆகிய பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- ஓனரிடம் போட்டுக் கொடுத்ததால் ஆத்திரம்..! ஆம்புலன்ஸ் டிரைவரின் தலையில் கல்லை போட்டு கொலை..!
இக்கல்லூரி செய்துள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.எனவே, இடைக்கால உத்தரவாக கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையத்தை அமைக்கவும், முறையாக அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டி கல்லூரி நடத்தப்பட்டு வருவது குறித்து நடவடிக்கை எடுக்கவும், அரசு மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் மற்றும் ஓடைகள், கண்மாய்களில் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- தஞ்சை மாணவி தற்கொலை - மாணவியின் பெற்றோர் நீதிபதி முன் தனித்தனியாக வாக்குமூலம்
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- திமுக முன்னாள் எம்.எல்.ஏவின் மகன் கும்பகோணம் ரயில் நிலையத்தில் மர்ம மரணம்
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, ஸ்ரீமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில், "கல்லூரி செய்துள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை" என தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக பதிவாளர், மதுரை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Tamil news | நெல்லை ஆட்சியருக்கு விருது- போலி சாவி தயாரித்து திருட்டு - தென் மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.