மேலும் அறிய

தமிழ்நாடு பாரத்நெட்: கிராமப்புற இணைய சேவைக்கு தொழில் பங்கீட்டாளர் ஆக அரிய வாய்ப்பு!

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு மற்றும் தொடர்புடைய ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, தாங்கள் செயல்பட விரும்பும் துணைப் பிரிவு-ஐ (Division) தேர்வு செய்திடல் வேண்டும்.

பாரத்நெட்  திட்டத்தின்  கீழ்  கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை  வழங்குவதற்கு, மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களாக  (DLFP)  பணிபுரிய விருப்பமுள்ள நபர்களிடமிருந்து இணையத்தளத்தின் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவை

தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET), பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில், மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. மேலும், மாநிலத்தில் பாரத்நெட் பணிகள் சுமார் 95 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளன. அந்தவகையில், தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்து, தடையில்லா இணைய சேவைகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கென, ஒவ்வொரு மாவட்டமும் வருவாய் உட்கோட்டம் (Revenue Division) அடிப்படையில் 2 முதல் 6 வட்டாரங்களை கொண்ட துணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரர் அதிகபட்சம் இரண்டு மாவட்டங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்.

தனிப்பட்ட விண்ணப்பதாரரின் முகவரி அமைந்துள்ள மாவட்டமாகவோ இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர் குறிப்பிடும் மாவட்டங்கள், நிறுவனம், நிறுவனத்தின் வணிகச் செயல்பாட்டுப் பகுதி அமைந்துள்ள மாவட்டமாகவோ அல்லது தனிப்பட்ட விண்ணப்பதாரரின் முகவரி அமைந்துள்ள மாவட்டமாகவோ இருத்தல் வேண்டும்.   -2- அவ்வாறாக, தேர்வு செய்யப்படும் தொழில் பங்கீட்டாளர்களின் முக்கிய பொறுப்புகளில் Optical Fibre Cable (OFC) மற்றும் Optical Network Terminal (ONT) பராமரிப்பு, தடையில்லா இணைய சேவை வழங்குதல், OFC  பராமரிப்பு பணிகள், சேவை தடைகளை காலதாமதமின்றி சரிசெய்தல், Service Level Agreement (SLA) விதிமுறைகளை பின்பற்றுதல் மற்றும் சேவை கிடைப்புத் தரத்தை பராமரித்தல் ஆகியவை அடங்கும். மேலும், விண்ணப்ப பதிவானது TANFINET இணையதள போர்டலின்  https://tanfinet.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக நடைபெறும்.

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.  

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு மற்றும் தொடர்புடைய ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, தாங்கள் செயல்பட விரும்பும் துணைப் பிரிவு-ஐ (Division) தேர்வு செய்திடல் வேண்டும். விண்ணப்பதாரர் ஒவ்வொரு துணைப் பிரிவுக்கும் ரூ.25,000- (திரும்பப்பெறக்கூடிய, வட்டியில்லா) விண்ணப்ப பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்த வேண்டும். தேர்வு செய்யப்படும் பங்கீட்டாளர்கள், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ரூ.2,00,000-பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்திட வேண்டும். அதனைத்தொடர்ந்து, சென்னை TANFINET தலைமையகத்தால் பணி ஆணை (Work Order) வழங்கப்படும். மேலும்,  https://tanfinet.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 02.11.2026 அன்று மாலை 06.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.  கூடுதல் விவரங்களுக்கு 044-24965595 என்ற உதவி மைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விபரங்கள் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார்.  

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundram: தீபம் ஏற்றியது ரொம்ப சந்தோஷமாக இருக்கு... அடுத்து என்ன? நீதிபதி வைத்தியநாதன் சொன்ன முக்கிய விஷயம்!
Thiruparankundram: தீபம் ஏற்றியது ரொம்ப சந்தோஷமாக இருக்கு... அடுத்து என்ன? நீதிபதி வைத்தியநாதன் சொன்ன முக்கிய விஷயம்!
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்! ஆனந்த கண்ணீரில் பக்தர்கள்.!
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்! ஆனந்த கண்ணீரில் பக்தர்கள்.!
Thiruparankundram Deepam Live: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்..அரோகரா முழக்கத்தால் அதிர்ந்த மதுரை.. நெகிழ்ந்த பக்தர்கள்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்..அரோகரா முழக்கத்தால் அதிர்ந்த மதுரை.. நெகிழ்ந்த பக்தர்கள்
CRPF கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்.. வந்தடைந்த பொறுப்பு நீதிபதிகள் - குவியும் இஸ்லாமியர்கள், ஏற்பாடுகள் தீவிரம்
CRPF கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்.. வந்தடைந்த பொறுப்பு நீதிபதிகள் - குவியும் இஸ்லாமியர்கள், ஏற்பாடுகள் தீவிரம்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பாஜகவை எதிர்க்க காங்கிரஸுக்கு திராணி, தெம்பு இல்லை” அப்ப கூட்டணி உறுதியா? - தங்கம் தென்னரசு சொல்வது என்ன?
“பாஜகவை எதிர்க்க காங்கிரஸுக்கு திராணி, தெம்பு இல்லை” அப்ப கூட்டணி உறுதியா? - தங்கம் தென்னரசு சொல்வது என்ன?
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக திடீர் ஆதரவு ஏன்? - தங்கம் தென்னரசு சொன்ன முக்கிய காரணம்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக திடீர் ஆதரவு ஏன்? - தங்கம் தென்னரசு சொன்ன முக்கிய காரணம்!
டயர் இல்லாததால் 1,500 அரசுப் பேருந்துகள் முடக்கம்; விபத்து அபாயம்! - அரசுக்கு அன்புமணி இராமதாஸ் கடும் எச்சரிக்கை!
டயர் இல்லாததால் 1,500 அரசுப் பேருந்துகள் முடக்கம்; விபத்து அபாயம்! - அரசுக்கு அன்புமணி இராமதாஸ் கடும் எச்சரிக்கை!
Thiruparankundram: தீபம் ஏற்றியது ரொம்ப சந்தோஷமாக இருக்கு... அடுத்து என்ன? நீதிபதி வைத்தியநாதன் சொன்ன முக்கிய விஷயம்!
Thiruparankundram: தீபம் ஏற்றியது ரொம்ப சந்தோஷமாக இருக்கு... அடுத்து என்ன? நீதிபதி வைத்தியநாதன் சொன்ன முக்கிய விஷயம்!
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்! ஆனந்த கண்ணீரில் பக்தர்கள்.!
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்! ஆனந்த கண்ணீரில் பக்தர்கள்.!
Thiruparankundram Deepam Live: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்..அரோகரா முழக்கத்தால் அதிர்ந்த மதுரை.. நெகிழ்ந்த பக்தர்கள்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்..அரோகரா முழக்கத்தால் அதிர்ந்த மதுரை.. நெகிழ்ந்த பக்தர்கள்
”கொஞ்சம்கூட கூச்சமில்லை.. பாஜகவின் காலடியில் கவிழ்ந்த திமுகவுக்கு இனி... ” - தவெகவின் பயங்கர அட்டாக்
”கொஞ்சம்கூட கூச்சமில்லை.. பாஜகவின் காலடியில் கவிழ்ந்த திமுகவுக்கு இனி... ” - தவெகவின் பயங்கர அட்டாக்
PM Modi: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! நேற்று 2K.. இன்று GenZ.. மாஸ் காட்டும் பிரதமர் மோடி!
PM Modi: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! நேற்று 2K.. இன்று GenZ.. மாஸ் காட்டும் பிரதமர் மோடி!
Embed widget