மேலும் அறிய

அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய வழக்கு - தேர்தல் ஆணையத்தில் முறையிட மனுதாரருக்கு அறிவுரை

’’ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் கடந்த 8 ஆண்டுகளாக என் மீது  பாகுபாடு கொண்டு என்னை பலவகைகளில் தொந்தரவு செய்து வருவதாக மனுதாரர் புகார்’’

அதில், "ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளராக உள்ள முனியசாமி மற்றும் அவரது மனைவி கீர்த்திகா முனியசாமி உள்ளிட்டோரின் உறவினரான நான் கல்லூரியில் படித்து வந்த பொழுது மாற்று ஜாதியை சேர்ந்த செல்வகுமார் உடன் காதல் செய்ததால் முனியசாமி தலைமையிலான உறவினர்கள் என்னை ஆணவக் கொலை செய்வதற்காக முயற்சி செய்தனர். செல்வகுமார் தொடர்பை துண்டிக்க செய்தனர். இந்த நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டோம் இந்த நிலையில் அதிமுகவை சேர்ந்தவர் முனியசாமி அவருடைய கட்சி பலம் மற்றும் அதிகார பலத்தை கொண்டு எங்களை மிரட்டி வருகிறார். தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதியின் ஜாதி மற்றும் மத ரீதியான பாகுபாடு பார்க்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் கடந்த 8 ஆண்டுகளாக என் மீது  பாகுபாடு கொண்டு என்னை பலவகைகளில் தொந்தரவு செய்து வருகின்றனர். அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி மற்றும் அவரது மனைவி கிருத்திகா முனியசாமி மற்றும் அவர் சார்ந்திருந்த அதிமுக கட்சி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய வழக்கு - தேர்தல் ஆணையத்தில் முறையிட மனுதாரருக்கு அறிவுரை

தேர்தல் ஆணைய விதிமுறையை  பின்பற்றாமல், ஜாதி பாகுபாடு பார்க்கும் அதிமுக இராமநாதபுரம் மாவட்ட செயலாளர்  முனியசாமி தேர்தலில் போட்டியிட தடை விதிக்க  வேண்டும். மேலும் அவர் சார்ந்துள்ள அதிமுக கட்சியை தேர்தல் ஆணையம் தடை செய்ய உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கில் பொது நலம் இல்லை. தனி நபர் பாதிப்பு குறித்த மனுதாரர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட வேண்டும் என கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர். மனுதாரர் தரப்பில் மனுவை திரும்ப பெற ஒரு வார கால அவகாசம் கேட்டதை தொடர்ந்து வழக்கை அடுத்தவாரம் ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மானாமதுரை, கீழப்பசளை, மேலப்பசளை மற்றும் சங்கமங்களம் கிராமத்தில் கால்வாயின் குறுக்கே இரண்டாவது பாலம் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது எனக் கோரிய வழக்கு- சிவகங்கை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் 4 வாரத்தில் மனுவினை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மானாமதுரை, கீழப்பசலையை சேர்ந்த சங்கையா உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.அதில், "சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கீழபசளை, மேலபசளை, சங்கமங்கலம் ஆகிய 3 கிராமங்களிலும் சுமார் 6,500 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.இந்த பகுதியிலுள்ள ஆதனூர் மதகு அருகே கடந்த 2019ஆம் ஆண்டு கிருஷ்ணன் என்பவர் ஒரு பாலம் கட்ட கோரி விண்ணப்பித்தார். இவருக்கு பொதுப்பணித்துறை சார்பில் விதிமுறைகளுடன் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.  

அந்தப் பாலத்தின் வழியாக தற்போது  விவசாய நிலங்களுக்கு சென்று வருகிறோம். இந்த நிலையில் தற்போது கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்காக, பாசன கால்வாயில் ஏற்கனவே உள்ள பாலத்தின் அருகேயே 100 மீட்டர் இடைவெளிக்குள் மற்றொரு பாலம் அமைப்பதற்காக பொதுப்பணித்துறையிடம் அனுமதி கோரியுள்ளார். அவருக்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், எங்கள் பகுதியில் உள்ள பாசன கால்வாயை தூர்வாருவதற்கு இயலாமல் போகும் அபாயம் உள்ளது. இதனால் எங்கள் பகுதியில் உள்ள விளைநிலங்களின் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதுடன் எங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. 

எனவே, ஏற்கனவே உள்ள பாலத்தின் அருகே மற்றொரு பாலம் கட்டுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் தெரிவித்திருந்தார்.இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், கால்வாய் குறுக்கே இரண்டாவது பாலம் அமைத்தால் கால்வாயினை தூர்வார முடியாத நிலை ஏற்படும். இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து சிவகங்கை  பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் 4 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் -  திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் - திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
Embed widget