மேலும் அறிய
Surya Fans Pongal : பொங்கலுக்கு அரிசி பருப்பா கேட்டோம் அப்டேட்தானே கேட்டோம் : சூர்யா ரசிகர்கள் அட்ராசிட்டி !
”பொங்கலுக்கு அரிசி பருப்பா கேட்டோம் அப்டேட்தானே கேட்டோம்” - நூதன முறையில் சூர்யா42 படத்தின் அப்டேட் கேட்டு மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.
![Surya Fans Pongal : பொங்கலுக்கு அரிசி பருப்பா கேட்டோம் அப்டேட்தானே கேட்டோம் : சூர்யா ரசிகர்கள் அட்ராசிட்டி ! A poster put up by Suriya fans in Madurai has created a joke on the event of pongal Surya Fans Pongal : பொங்கலுக்கு அரிசி பருப்பா கேட்டோம் அப்டேட்தானே கேட்டோம் : சூர்யா ரசிகர்கள் அட்ராசிட்டி !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/14/524087e164d2cc9552be693aaa9d37b11673717744697184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சூர்யா போஸ்டர்
கோலிவுட்டின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது அவரது 42-வது படத்தில் நடித்து வருகிறார். கார்த்தி நடித்த சிறுத்தை, அஜித் நடித்த வீரம், விவேகம், வேதாளம், விசுவாசம் ரஜினி நடித்த அண்ணாத்தை திரைப்படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா இவர் தற்போது நடிகர் சூர்யாவை எடுத்து பெயரிடாத படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்க 3டி டெக்னாலஜியில் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார்.
![Surya Fans Pongal : பொங்கலுக்கு அரிசி பருப்பா கேட்டோம் அப்டேட்தானே கேட்டோம் : சூர்யா ரசிகர்கள் அட்ராசிட்டி !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/14/9c759949c75d38e0b415fd9e85a5e0161673717809564184_original.jpeg)
சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் தவிர இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில், மதுரையை சேர்ந்த சூர்யா ரசிகர்கள் சிலர் அப்டேட் கேட்டு நூதன முறையில் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளனர். அதில் #we want surya42 update என்ற ஹேஷ்டேகோடு கத்தி படத்தில் விஜய் விவசாயிகளிடம் உணர்ச்சிகரமாக பேசும் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி சூர்யா ரசிகர்கள் அப்படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவாவை கட்டிப்பிடிப்பது போன்ற புகைப்படங்கள் போஸ்டரில் இடம் பெற்றுள்ளன. மேலும் பொங்கலுக்கு அரிசி பருப்பா கேட்டோம் அப்டேட் தான கேட்டோம் என்ற வசனங்கள் அடங்கியுள்ள போஸ்டரை ஒட்டியுள்ளது நகைச்சுவையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion