மேலும் அறிய

Madurai : சத்தமில்லாமல் தனியாருக்கு கைமாறிய மீனாட்சி அம்மன் கோயில் நிலம்! ரூ.21 கோடி மதிப்பு நிலங்கள் மீட்பு!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 21 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள்,மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ளது, இந்த நிலையில் பல ஆண்டுகளாக அந்த நிலங்கள் தனிநபர் பெயரில் ஆக்கிரமித்து இருப்பதாக தொடர்ந்து புகார் எழுந்த நிலையில், அதனை மீட்கும் நடவடிக்கையில் கோவில் நிர்வாகம் சார்பாக தனி குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து அதற்கான ஆய்வு பணிகளை ஈடுபட்டு வருகிறார்கள்.
 
Madurai : சத்தமில்லாமல் தனியாருக்கு கைமாறிய மீனாட்சி அம்மன் கோயில் நிலம்! ரூ.21 கோடி மதிப்பு நிலங்கள் மீட்பு!

மதுரை சிம்மக்கல் அனுமார்கோயில் படித்துறை அருகே  மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 1366 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டிடத்தை வணிக பயன்பாட்டிற்காக குணசேகரன் என்பவர் கோயில் நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்டிருந்தது. சமீபத்தில், அந்த இடத்தை  அதிகாரிகள் ஆய்வுசெய்த பொழுது கோயில் இடத்தை சட்டவிரோதமாக ராஜேந்திரன் என்பவர் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த இடத்தை இரண்டு பகுதிகளாக பிரித்து கழிப்பறை, குளியலறை கட்டணம் வசூல் செய்தும், உணவகம் அமைத்தும் நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து அந்த இடத்திற்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி தொகையை 3 லட்சத்து 91ஆயிரத்து 768 ரூபாயை செலுத்தக் கோரி கோயில் நிர்வாகத்தின் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

Madurai : சத்தமில்லாமல் தனியாருக்கு கைமாறிய மீனாட்சி அம்மன் கோயில் நிலம்! ரூ.21 கோடி மதிப்பு நிலங்கள் மீட்பு!
 
கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வணிக பயன்பாட்டிற்கு உள்வாடகைக்கு விட்டது. தெரியவந்தது இதனைத் தொடர்ந்து  அங்கு சென்ற கோயில் அதிகாரிகள் 1 கோடியே 36 லட்சம் மதிப்பிலான 1366 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தை மீட்டனர். மேலும் அந்த கடைகளுக்கு சீல் வைத்து அங்கு உள்ள அறையில் இருந்த ஒரு அடி நீள பித்தளை சூலம், கையடக்க கலசம், விபூதி கொப்பரை ஆகியவற்றை மீட்டுச் சென்றனர். மதுரையின் மையப்பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த மீனாட்சி கோயில் சொத்தை மீட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டை தெரிவித்தனர்.

Madurai : சத்தமில்லாமல் தனியாருக்கு கைமாறிய மீனாட்சி அம்மன் கோயில் நிலம்! ரூ.21 கோடி மதிப்பு நிலங்கள் மீட்பு!
 
இந்நிலையில் மதுரை மாவட்டம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பொன்மேனி பகுதியில் சுமார் 21.46 ஏக்கர் பரப்பளவில் கோயிலுக்கு சொந்தமான நஞ்சை நிலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதனை கோயில் துணை ஆணையர் அருணாச்சலம் தலைமையிலான குழுவினர் கண்டறிந்து அங்கு கோயிலுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது,மேலும் இந்த சொத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 21 கோடியே 46 லட்சம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது, இது மட்டுமல்லாமல் கடந்த வாரம் கோயிலுக்கு சொந்தமான 2 கோடி ரூபாய் மதிப்பிலான வணிக நிறுவனம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM MK Stalin:
CM MK Stalin: "நான் திருப்தி அடையல" விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்படி பேசியது ஏன்?
Indira Soundararajan: அடுத்த அதிர்ச்சி; எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் திடீர் மறைவு- என்ன ஆச்சு?
Indira Soundararajan: அடுத்த அதிர்ச்சி; எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் திடீர் மறைவு- என்ன ஆச்சு?
Kasturi: எஸ்கேப்! சர்ச்சைப் பேச்சால் நடிகை கஸ்தூரி தலைமறைவு - வலைவீசி தேடும் போலீஸ்!
Kasturi: எஸ்கேப்! சர்ச்சைப் பேச்சால் நடிகை கஸ்தூரி தலைமறைவு - வலைவீசி தேடும் போலீஸ்!
Teachers Protest: 'முதல்வர் ஸ்டாலினுக்கு 2026-ல் பாடம் புகட்டுவோம்'- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சூளுரை!- பின்னணி இதுதான்!
Teachers Protest: 'முதல்வர் ஸ்டாலினுக்கு 2026-ல் பாடம் புகட்டுவோம்'- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சூளுரை!- பின்னணி இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Salem Prisoner Attacks Police : ’’எனக்கு சிகரெட் வேணும்’’போலீஸை அடிக்க பாய்ந்த கைதி..Gujarat Car Funeral Ceremony : ’லக்கி’ காருக்கு இறுதிச்சடங்கு! வியக்க வைத்த விவசாயிTVK Vijay Meet Army Officers | ராணுவ வீரர்களுடன் விஜய் திடீர் சந்திப்பு ஏன்? கதறும் பாஜகவினர்Muthusamy | முத்துசாமியின் உள்ளடி வேலை! ஷாக்கில் ஈரோடு திமுக! யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin:
CM MK Stalin: "நான் திருப்தி அடையல" விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்படி பேசியது ஏன்?
Indira Soundararajan: அடுத்த அதிர்ச்சி; எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் திடீர் மறைவு- என்ன ஆச்சு?
Indira Soundararajan: அடுத்த அதிர்ச்சி; எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் திடீர் மறைவு- என்ன ஆச்சு?
Kasturi: எஸ்கேப்! சர்ச்சைப் பேச்சால் நடிகை கஸ்தூரி தலைமறைவு - வலைவீசி தேடும் போலீஸ்!
Kasturi: எஸ்கேப்! சர்ச்சைப் பேச்சால் நடிகை கஸ்தூரி தலைமறைவு - வலைவீசி தேடும் போலீஸ்!
Teachers Protest: 'முதல்வர் ஸ்டாலினுக்கு 2026-ல் பாடம் புகட்டுவோம்'- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சூளுரை!- பின்னணி இதுதான்!
Teachers Protest: 'முதல்வர் ஸ்டாலினுக்கு 2026-ல் பாடம் புகட்டுவோம்'- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சூளுரை!- பின்னணி இதுதான்!
சென்னை ஏர்போர்ட்டில் இருந்து வந்த ஹேப்பி நியூஸ்.. நன்றி தெரிவிக்கும் பயணிகள்..
சென்னை ஏர்போர்ட்டில் இருந்து வந்த ஹேப்பி நியூஸ்.. நன்றி தெரிவிக்கும் பயணிகள்..
Delhi Ganesh:
Delhi Ganesh: "வளந்ததும் மறந்துட்றாங்க" பிரதீப் ரங்கநாதன் மீது டெல்லி கணேஷிற்கு கோபமா?
CM Stalin: வஞ்சித்த ஸ்டாலின்,  “பரிசு கொடுக்க தயார்” முதலமைச்சரை குறிவைத்த தமிழக அரசு ஊழியர்கள் சங்கம்
CM Stalin: வஞ்சித்த ஸ்டாலின், “பரிசு கொடுக்க தயார்” முதலமைச்சரை குறிவைத்த தமிழக அரசு ஊழியர்கள் சங்கம்
Delhi Ganesh:
Delhi Ganesh: "முனியாண்டி முதல் சிதம்பரம் வரை" காலத்தால் அழியாத டெல்லி கணேஷ் கதாபாத்திரங்கள்!
Embed widget