மேலும் அறிய

தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடத்தும் 12வது குறும்பட போட்டி – உடனே விண்ணப்பிக்கவும்..

2026-ம் ஆண்டுக்கான குறும்பட போட்டிக்கு நாட்டின் குடிமக்களாகிய எந்த வயதினரும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) மனித உரிமைகள் குறித்த குறும்பட போட்டி 2026க்கான அறிவிப்பை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஜூ மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) மனித உரிமைகள் குறித்த போட்டியினை 2015-ம் ஆண்டு நிறுவி அதன் 12வது பதிப்பான 2026-ம் ஆண்டுக்கான குறும்பட போட்டிகளை நடத்துகிறது. இதற்கு நாட்டின் குடிமக்களாகிய எந்த வயதினரும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. இந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த குறும்படங்களுக்கு முதல் மூன்று பரிசுத்தொகை முறையே ரூ.2 லட்சம், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் ரூ.1 லட்சம் ஆகும்.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடத்தும் 12வது குறும்பட போட்டி – உடனே விண்ணப்பிக்கவும்..

மேலும், ஆணைக்குழு மூன்று ரொக்க விருதுகள் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளுடன் நடுவர் குழு பரிந்துரைத்தால் அதிகபட்சமாக 4 படங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசோடு சிறப்பு குறிப்பு சான்றிதழ் (Certificate of Special Mention) வழங்குவதற்கு ஆணையம் பரிசீலனை செய்யும். மேலும், குறும்படங்கள் எந்த இந்திய மொழிகளிலும், ஆங்கிலம் துணை தலைப்புகளுடன் இருக்கலாம். குறும்பட கால அளவு குறைந்த பட்சம் 3 நிமிடங்கள், அதிக பட்சம் 10 நிமிடங்களாக இருக்கலாம்.

பதிவுகளை அனுப்புவதற்கு கூகுள் டிரைவினை பயன்படுத்தி ஆன்லைனில் nhrcshortfilm@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள் 30.6.2026 ஆகும். இப்போட்டி தொடர்பான விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்ப படிவ நகல் NHRC இணையதளத்திலிருந்தோ (https://nhrc.nic.in) அல்லது பின்வரும் இணைப்பிலிருந்தோ (https://nhrc.nic.in/flipbook/files/255) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது இந்திய குடிமக்களை மையமாக கொண்ட மனித உரிமைகள், கலாச்சாரம் மற்றும் உணர்திறனை ஏற்படுத்தும் முயற்சிக்காக நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

நாக்பூர் தீக்ஷ பூமி பௌத்த திருவிழா: ரூ.5000 மானியம் பெற தமிழக பௌத்தர்கள் விண்ணப்பிக்கலாம்!
நாக்பூர் தீக்ஷ பூமி பௌத்த திருவிழா: ரூ.5000 மானியம் பெற தமிழக பௌத்தர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் 33 ரயில்வே மேம்பாலங்கள்... இனி வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டில் காத்துக் கிடக்க தேவையில்லை !
தமிழகத்தில் 33 ரயில்வே மேம்பாலங்கள்... இனி வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டில் காத்துக் கிடக்க தேவையில்லை !
ஒட்டன்சத்திரம் அருகே ஒற்றை யானை உலா: மக்கள் பீதி, வனத்துறைக்கு அவசர கோரிக்கை!
ஒட்டன்சத்திரம் அருகே ஒற்றை யானை உலா: மக்கள் பீதி, வனத்துறைக்கு அவசர கோரிக்கை!
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Chennai Bengaluru Bullet Train: 350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Embed widget