TAHDCO Loan: இந்த ஐடியா வச்சிருக்கீங்களா ? லோன் தர தயாராக இருக்கும் அரசு..!
TAHDCO Loan Details in Tamil: உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
![TAHDCO Loan: இந்த ஐடியா வச்சிருக்கீங்களா ? லோன் தர தயாராக இருக்கும் அரசு..! TAHDCO Loan Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation invites applications for grant loan for setting up exercise therapy center - TNN TAHDCO Loan: இந்த ஐடியா வச்சிருக்கீங்களா ? லோன் தர தயாராக இருக்கும் அரசு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/19/6cfdcf90b41a89b2cb8eda9ae53989641700386541435279_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச் செல்வி தகவல் தெரிவித்துள்ளார்.
உடற்பயிற்சி சிகிச்சை மையம் (Physiotheraphy Clinic)
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட ஏதுவாக புதியதாக தொழில் தொடங்குவதற்கு அனைத்து மாவட்டங்களில் உடற்பயிற்சி சிகிச்சை மையம் (Physiotheraphy Clinic) அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
உரிமையாளர் கட்டணம் (Franchise Fees)
உடற்பயிற்சி சிகிச்சை மையம் (Physiotheraphy Clinic) தொடங்க தனியார் நிறுவனம் மூலமாக சொந்தமாக கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கும் மற்றும் இடம் இல்லாதவர்களுக்கு வாடகை அடிப்படையில் இடங்கள் தேர்வு செய்து தரப்பட்டு உடற்பயிற்சி சிகிச்சை மையம் (Physiotheraphy Clinic) அமைத்தும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும், அத்தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து இலவச ஆலோசனைகளும் தனியார் நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு இதற்கான உரிமையாளர் கட்டணம் (Franchise Fees) முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும்.
விண்ணப்பம் செய்வது எப்படி ?
உடற்பயிற்சி சிகிச்சை (Physiotheraphy) பயிற்சியில் பட்டப் படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்கள் அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்து 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும் தகுதியுள்ள நபர்கள் புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
யார் யாருக்கு முன்னுரிமை ?
உடற்பயிற்சி சிகிச்சை (Physiotheraphy) பயிற்சியில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்தொழிலுக்கு ரூ.6.00 இலட்சம் திட்டத் தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி- யினருக்கு 35% அல்லது அதிகபட்சம் ரூ.2.10 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும். பயனாளிகள் 5% முதல் 10% சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகையை வங்கி கடனுதவி பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)